த1ஸ்ய ஸஞ்ஜனயன்ஹர்ஷம் கு1ருவ்ருத்3த4: பி1தா1மஹ: |
ஸிம்ஹனாத3ம் வினத்3யோச்சை: ஶங்க2ம் த3த்4மௌ ப்1ரதா1ப1வான் ||12||
தஸ்ய—--அவருடைய ; ஸஞ்ஜனயன்--—ஏற்படுத்தும்; ஹர்ஷம்—--மகிழ்ச்சியை; குருவ்ருத்தஹ—--குரு வம்சத்தின் முதன்மை வாய்ந்த பெரிய முதியவர் (பீஷ்மர்); பிதாமஹஹ—--பாட்டனார்; ஸிம்ஹனாதம்—--சிங்கத்தின் கர்ஜனை; வினத்ய—--முழங்கி ; உச்சைஹி—--மிகவும் உரக்க ; ஶங்கம்—--சங்கை; தத்மௌ--—ஊதினார்; ப்ரதாப-வான்—--புகழ்பெற்ற.
Translation
BG 1.12: பின்னர் குரு வம்சத்தின் மாபெரும் போர் வீரரும் பாட்டனாரும் ஆன பீஷ்மர் தனது ஊது சங்கை ஒரு சிங்கத்தின் கர்ஜனையை போன்று உரக்க முழங்கி துரியோதனனுக்கு மகிழ்ச்சியை அளித்தார்.
Commentary
பாட்டனார் பீஷ்மர் தனது பேர மருமகனின் இதயத்தில் உள்ள பயத்தைப் புரிந்துகொண்டார், மேலும் அவன் மீதான இயற்கையான இரக்கத்தால், மிகவும் உரக்க சங்கு ஊதி அவனை உற்சாகப்படுத்த முயன்றார். ஸ்ரீ கிருஷ்ணர் எதிர் பக்கத்தில் இருந்ததால் துரியோதனனுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை பீஷ்மர் அறிந்திருந்தார். ஆனாலும், பீஷ்மர் தனது ஊது சங்கை உரக்க முழங்கி தன் கடமையைச் செய்வேன் என்று தன் மருமகனுக்குத் தெரியப்படுத்தினார். அப்போதைய போர்க் குறியீட்டில், இது போரின் தொடக்கத்தை குறிக்கிறது.