Bhagavad Gita: Chapter 1, Verse 14

. த11: ஶ்வேதை1ர்ஹயைர்யுக்தே1 மஹதி1 ஸ்யன்த3னே ஸ்தி2தௌ1 |

மாத4வ: பா1ண்ட3வஶ்சை1வ தி3வ்யௌ ஶங்கௌ2 ப்1ரத3த்4மது1: ||14||

ததஹ--—பின்னர்; ஶ்வேதைஹி—--வெள்ளை; ஹயைஹி--—குதிரைகள்; யுக்தே—--பூட்டிய மஹதி—--மிகச்சிறந்த ஸ்யன்தனே-தேரில்; ஸ்திதௌ—--அமர்ந்திருந்த; மாதவஹ—--செல்வத்தின் தேவி ஆன லட்சுமியின் கணவரான ஸ்ரீ கிருஷ்ணரும்; பாண்டவஹ-—அர்ஜுனனும்.; ச—--மற்றும்; ஏவ----மேலும்; திவ்யௌ—--தெய்வீக; ஶங்கௌ—--ஶங்குகளை; ப்ரதத்மதுஹு--—முழங்கினர்.

Translation

BG 1.14: பின்னர் பாண்டவ இராணுவத்தின் தரப்பிலிருந்து  வெள்ளை குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில்  வீற்றிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.

Commentary

கௌரவ சேனையின் அரவம் தணிந்த பிறகு, பிரமாண்டமான தேரில் அமர்ந்திருந்த ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும், தங்கள் சங்குகளை சக்திமிக்க முழங்கினார்கள். இது பாண்டவர்களின் போருக்கான ஆர்வத்தையும் தூண்டியது.

ஸஞ்ஜயன் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ‘மாதவ்’ என்ற பெயரைப் பயன்படுத்துகிறார். மா என்பது அதிர்ஷ்ட தெய்வத்தைக் குறிக்கிறது; தவ் என்றால் கணவன். ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் விஷ்ணுவாக அவரது வடிவத்தில் அதிர்ஷ்ட தெய்வமான லட்சுமியின் கணவர் ஆவார். பாண்டவர்களின் பக்கம் அதிர்ஷ்ட தேவியின் அருள் இருந்ததையும், அவர்கள் விரைவில் ராஜ்ஜியத்தை மீட்கும் போரில் வெற்றி பெறுவார்கள் என்பதையும் இந்த வசனம் குறிப்பிடுகிறது.

பாண்டு மன்னரின் மகன்கள் பாண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பாண்டவர் என்ற சொல் ஐந்து சகோதரர்களில் எவரையும் குறிப்பதற்கு பயன்படுத்தப்படலாம். இந்த வசனத்தில் பாண்டவர் என்ற சொல் ஐந்து  பாண்டவர்களில் மூன்றாவதான அர்ஜுனனை குறிப்பிடுகிறது. அவன் ஒரு வலிமையான போர்வீரன்  மற்றும் ஒரு சிறந்த வில்லாளன். அர்ஜுனனுடைய அற்புதமான தேர் தேவலோக கடவுளான அக்னி இடம் இருந்து கிடைத்த  அன்பளிப்பு.

Watch Swamiji Explain This Verse