Bhagavad Gita: Chapter 1, Verse 16-18

அநன்த1விஜயம் ராஜா குந்தீ1பு1த்ரோ யுதி4ஷ்டி2ர: |

நகு1ல: ஸஹதே3வஶ்ச1 ஸுகோ4ஷமணிபு1ஷ்ப1கௌ1 ||
16 ||
கா1ஶ்யஶ்ச11ரமேஷ்வாஸ:ஶிக2ண்டீ31 மஹாரத2: |

த்4ருஷ்ட1த்3யும்னோ விராட1ஶ்ச1 ஸாத்1யகி1ஶ்சா11ராஜித1: ||17||
த்4ருப1தோ3 த்3ரௌப1தே3யாஶ்ச1 ஸர்வஶ: ப்1ருதி2வீப1தே1 |

ஸௌப4த்3ரஶ்ச1 மஹாபா3ஹு: ஶங்கா2ன்த3த்4மு: ப்1ருத2க்1ப்1ருத2க்1 ||
18 ||

அநன்த-விஜயம்---அநன்த-விஜயம் என்று அழைக்கப்படும் ஶங்கு; ராஜா---அரசர்; குந்தீபுத்ரஹ----குந்தியின் மகன்; யுதிஷ்டிரஹ----யுதிஷ்டிரர்; நகுலஹ----நகுலன்; ஸஹதேவஹ----ஸஹதேவன்;ச----மற்றும்; ஸுகோஷமணிபுஷ்பகௌ---ஸுகோஷம் மற்றும் மணிபுஷ்பகம் என்றுஅழைக்கப்படும் ஶங்குகள்; காஶ்யஹ----காசியின் மன்னர்; ச----மற்றும்;பரம-இஷு ஆஸஹ-- சிறந்த வில்லாளி; ஶிகண்டீ--ஶிகண்டீ; ச----மேலும்; மஹாரதஹ-----பத்தாயிரம் சாதாரண வீரர்களுக்கு சமமான வலிமையுடைய வீரர்கள்; த்ருஷ்டத்யும்னஹ----திருஷ்டத்யும்னன்;—விராடஹ----விராடன்; ச--மற்றும்; ஸாத்யகிஹி---ஸாத்யகி; ச----மற்றும்; அபராஜிதஹ---வெல்லமுடியாத; த்ருபதஹ----த்ருபதன்; த்ரௌபதேயஹ----திரௌபதியின் ஐந்து மகன்கள்; ச—--மற்றும்; ஸர்வஶஹ---அனைவரும்; ப்ருதிவீபதே----ப்ருதிவியின் ஆட்சியாளர்; ஸௌபத்ரஹ----ஸுபத்ராவின் மகன்; ச----மேலும்; மஹாபாஹுஹு----வலிமைமிக்க கைகளை உடைய; ஶங்கான்---சங்குகளை; தத்மௌ----முழங்கினர்; ப்ருதக் ப்ருதக்—--தனித்தனியாக;

Translation

BG 1.16-18: யுதிஷ்டிர மன்னர் அனந்த விஜயம் என்ற சங்கை முழங்கினார். அதே வேளையில் நகுலன் மற்றும் சஹதேவன்  ஸுகோஷம் மற்றும் மணிபுஷ்பகம் எனும் சங்குகளை முழங்கினார்கள்.  சிறந்த வில்லாளரும் மற்றும் சிறந்த போர் வீரருமான காசியின் மன்னர். ஶிகண்டீ, த்ருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் வெல்லமுடியாத ஸாத்யகி, த்ருபதன், திரௌபதியின் ஐந்து மகன்கள், மற்றும் ஸுபத்ராவின் வலிமைமிக்க கைகளை உடைய மகன் அபிமன்யு அனைவருமே அவரவர்களின்  சங்குகளை முழங்கினார்கள். ஓ, பூமியின் ஆட்சியாளரே,

Commentary

பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் இங்கு மன்னர் என்று அழைக்கப்படுகிறார் ஏனெனில்  மன்னர்  பட்டத்தை அவர் ராஜஸுய யாகம் என்ற அரச யாகத்தை நடத்தியதால் பெற்றார். இதனால் மற்ற உலக அரசர்கள் அவருக்குக் கப்பம் செலுத்தினர் . மேலும், அவர்   வனத்திலோ அரண்மனையிலோ எங்கு வாழ்ந்தாலும் எப்பொழுதும் அரசனுக்குரிய  குணவதம் மற்றும் பெருந்தன்மையை  பிரதிபலித்தார்.

த்ருதராஷ்டிரர் ஸஞ்ஜயனால் ‘பூமியின் ஆட்சியாளர்’ என்று அழைக்கப்படுகிறார். ஒரு நாட்டைப் பாதுகாப்பது அல்லது ஒரு நாசகரமான போரில் ஈடுபடுவது எல்லாம் ஆட்சியாளரின் கைகளில் உள்ளது. எனவே பட்டப்பெயரில் மறைந்துள்ள உட்பொருள், ‘படைகள் போரை நோக்கிச் செல்கின்றன. ஓ ஆட்சியாளரே, த்ருதராஷ்டிடிரரே, உங்களால் மட்டுமே அவர்களை திரும்ப அழைக்க முடியும். நீங்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்?’

Watch Swamiji Explain This Verse