Bhagavad Gita: Chapter 1, Verse 23

யோத்1ஸ்யமானானவேக்ஷே‌ஹம் ய ஏதே1‌த்1ர ஸமாக3தா1: |

தா4ர்த1ராஷ்ட்1ரஸ்ய து3ர்பு3த்3தே4ர்யுத்3தே4 ப்1ரியசி1கீ1ர்ஷவ: ||23||

யோத்ஸ்யமானான்----போர் புரிய வந்தவர்களை; அவேக்ஷே‌ அஹம்----பார்க்க விரும்புகிறேன்; யே---யார் ; ஏதே-—அவர்கள்; அத்ர----இங்கு; ஸமாகதாஹா---கூடியிருந்த; தார்தராஷ்ட்ரஸ்ய---த்ருதராஷ்டிரரின் மகனின்; துர்புத்தேஹே---தீய எண்ணத்தினால்; யுத்தே---போர் புரிய; ப்ரியசிகீர்ஷவஹ---விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக.

Translation

BG 1.23: த்ருதராஷ்டிரரின் தீய எண்ணம் கொண்ட மகன் துரியோதனனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் தரப்பில் போர் புரிய இங்கு வந்தவர்களை பார்க்க விரும்புகிறேன்.

Commentary

த்ருதராஷ்டிரரின் தீய எண்ணம் கொண்ட மகன்கள், பாண்டவர்களுக்கு உரிய ராஜ்ஜியத்தை அபகரித்ததால், அவர்கள் தரப்பில் இருந்து போரிடும் வீரர்களும் இயற்கையாகவே தவறான எண்ணம் கொண்டவர்கள் ஆனார்கள். அர்ஜுனன் இந்தப் போரில் யாருடன் போரிட வேண்டுமோ அவர்களைப் பார்க்க விரும்பினான். ஆரம்பத்தில், வீரமும், போருக்கான ஆர்வமும் கொண்டிருந்த அர்ஜுனன், பாண்டவர்களை அழிக்க துரியோதனன் பலமுறை சதி செய்ததைத் தெரிவித்து, த்ருதராஷ்டிரரின் தீய எண்ணம் கொண்ட மகன்களைப் பற்றி குறிப்பிட்டார். அர்ஜுனனின் மனப்பான்மை என்னவென்றால், ‘'நாம் பாதிப் பேரரசின் சட்டப்பூர்வ உரிமையாளர்கள், ஆனால், அவன் அதை அபகரிக்க விரும்புகிறான். தீய எண்ணம் கொண்ட, அவனக்கு உதவுவதற்காக கூடிவிட்ட அரசர்ககளும், தீயவர்கள். பொறுமை இழந்து போரிடுவதற்கு தயாரான அந்த வீரர்களை நான் பார்க்க விரும்புகிறேன். அநீதியை ஆதரித்த அவர்கள் நம்மால் அழிக்கப்படுவார்கள் என்பது உறுதி’

Watch Swamiji Explain This Verse