ஸஞ்ஜய உவாச1
ஏவமுக்1தோ1 ஹ்ருஷீகே1ஶோகு3டா3கே1ஶேன பா4ரத1 |
ஸேனயோருப4யோர்மத்4யே ஸ்தா2பயித்1வா ரதோ2த்1த1மம் ||24||
ஸஞ்ஜய உவாச—ஸஞ்ஜயன் கூறினார்; ஏவம்--—இவ்வாறு; உக்த----உரையாற்ற பட்ட ஹ்ருஷீகேஶஹ—-- ஸ்ரீ கிருஷ்ணர், புலன்களின் ஏகாதிபதி; குடாகேஶேன--—தூக்கத்தை வென்ற அர்ஜுனனால்; பாரத--—பரத வம்சத்தில் தோன்றிய; ஸேனயோஹோ----படைகளி்ன்; உபயோஹோ----இரு; மத்யே—--நடுவி்ல்.; ஸ்தாபயித்வா--—வைத்துவிட்டு; ரத-உத்தமம்—--அற்புதமான தேரை
Translation
BG 1.24: ஸஞ்ஜயன் கூறினார்: ஓ த்ருதராஷ்டிரரே, தூக்கத்தை வென்ற அர்ஜுனனால் உரையாற்ற பட்ட ஸ்ரீகிருஷ்ணர் பின்னர் அற்புதமான தேரை இரு படைகளுக்கும் இடையில் நிறுத்தினார்.