அத்1ர ஶூரா மஹேஷ்வாஸா பீ4மார்ஜுனஸமா யுதி4 |
யுயுதா4னோ விராட1ஶ்ச1 த்3ருப1த3ஶ்ச மஹாரத2: ||4||
த்4ருஷ்ட1கேது1ஶ்சே1கி1தா1ன: கா1ஶிராஜஶ்ச1 வீர்யவான் |
பு1ருஜித்1கு1ந்தி1போ4ஜஶ்ச1 ஶைப்3யஶ்ச1 நரபு1ங்க3வ: ||
5 ||
யுதா4மன்யுஶ்ச1 விக்1ரான்த1 உத்1த1மௌஜாஶ்ச1 வீர்யவான் |
ஸௌப4த்2ரோ த்3ரௌப1தே3யாஶ்ச1 ஸர்வ ஏவ மஹாரதா2: ||
6 ||
அத்ர----இங்கு; ஶூரஹ—--சக்திவாய்ந்த போர்வீரர்கள்; மஹா---இஷு-ஆஸாஹா--—சிறந்த வில்லாளிகள்; பீமார்ஜுனஸமாஹா----பீமன் மற்றும் அர்ஜுனனுக்கு சமமான; யுதி----இராணுவ வலிமையில்; யுயுதானஹ--- யுயுதானன்; விராடஹ----விராடன்; ச----மற்றும்; த்ருபதஹ-—-த்ருபதன்; ச—-மேலும்; மஹாரதஹ----பத்தாயிரம் சாதாரண வீரர்களுக்கு சமமான வலிமையுடைய வீரர்கள்; த்ருஷ்டகேதுஹு--—த்ருஷ்டகேது சேகிதானஹ—--சேகிதானன்; காஶிராஜஹ----காசியின் மன்னர்; ச----மற்றும்; வீர்யவான்—--வீரமிக்க; ஶைப்யஹ—ஷைப்யன்; புருஜித்----புருஜிதன்; குந்திபோஜஹ----குந்திபோஜன்; ச—-மேலும்; ஶைப்யஹ---ஷைப்யன்; ச—--மேலும்; நரபுங்கவஹ---ஆண்களில் சிறந்தவர்கள்; யுதாமன்யுஹு---யுதாமன்யு; ச—-மேலும்; விக்ரான்தஹ----தைரியமான ; உத்தமௌஜாஹா----உத்தமௌஜன்; ச—--மேலும்; வீர்ய-வான்----துணிச்சலான; ஸௌபத்ரஹ----சுபத்ராவின் மகன்; த்ரௌபதேயாஹா----திரௌபதியின் மகன்கள்; ச—--மேலும்; ஸர்வ---அனைவரும்; ஏவ----உண்மையில்; மஹாரதாஹா----பத்தாயிரம் சாதாரண வீரர்களுக்கு சமமான வலிமையுடைய வீரர்கள்
Translation
BG 1.4-6: பாருங்கள், அவர்கள் அணிகளில் விராடன், பீமன், மற்றும் அர்ஜுனனுக்கு சமமான இராணுவ வலிமை பெற்ற வலிமையான வில்களைத் தாங்கிய யுயுதானன், விராடன், மற்றும் த்ருபதன் போன்ற பல சக்திவாய்ந்த போர்வீரர்கள் உள்ளனர். மற்றும், அங்கே த்ருஷ்டகேது, சேகிதானன், காசியின் அருமையான மன்னர் புருஜிதன், குந்திபோஜன், மற்றும் ஷைப்யன் போன்ற திறமையான போர்படை வீரர்கள் உள்ளனர். மேலும் அவர்களுடைய அணிகளில், வீரஞ்செறிந்த யுதாமன்யு, ஸுபத்ராவின் மகன் உத்தமௌஜன் மற்றும் சிறந்த போர்வீர தளபதிகளான திரௌபதியின் மகன்களும் உள்ளனர்.
Commentary
அவனுடைய கவலையின் காரணத்தினால் துரியோதனனுக்கு பாண்டவ இராணுவம் உண்மையில் இருந்ததைவிட மிகவும் மகத்தானதாகத் தோன்றியது. போரில் வல்லமை மிக்கவர்களாக தோன்றிய தனது எதிரிகள், அத்தகைய இராணுவ வலிமை வாய்ந்த போர்வீரர்களின் இராணுவத்தை அணிதிரட்டுவார்கள் என்று அவன் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. போரில் நிகழவிருக்கும் பேரழிவு குறித்த பயத்தில் அவன் பாண்டவர் அணியில் கூடியிருந்த அனைத்து மஹாரதிகளின் (பத்தாயிரம் சாதாரண வீரர்களுக்கு சமமான வலிமையுடைய வீரர்கள்) பெயர்களை குறிப்பிட துவங்கினான். அவர்கள் அனைவரும் அவனது உறவினர்களான அர்ஜுனன் மற்றும் பீமன் ஆகியோருக்கு நிகரான போர் வீரர்கள் மற்றும் சிறந்த இராணுவ தளபதிகள்.