Bhagavad Gita: Chapter 16, Verse 5

தை3வீ ஸம்ப1த்3விமோக்ஷாய நிப3ன்தா4யாஸுரீ மதா1 |

மா ஶுச1: ஸம்ப13ம் தை3வீமபி4ஜாதோ1ஸி பா1ண்டவ ||5||

தெய்வீ--—தெய்வீக; ஸம்பத்--—குணங்கள்; விமோக்ஷாய--—விடுதலைக்கு வழிவகுக்கும்; நிபந்தாய— பந்தனத்திற்கு; ஆஸுரீ----அஸுர குணங்கள்; மதா—--கருதப்படுகிறது; மா--—வேண்டாம்; ஶுசஹ--—துக்கப்பட; ஸம்பதம்---நற்குணங்களில்; தெய்வீம்---தெய்வீகத்தில்; அபிஜாதஹ---பிறந்தவன்; அஸி--—நீ; பாண்டவ--- பாண்டுவின் மகன் அர்ஜுனன்.

Translation

BG 16.5: தெய்வீக குணங்கள் விடுதலைக்கு வழிவகுக்கும், அதே சமயம் அஸுர குணங்கள் அடிமைத்தனத்தின் தொடர்ச்சியான விதிக்கு காரணமாகும். துக்கப்பட வேண்டாம் அர்ஜுனா, நீ புனிதமான குணங்களுடன் பிறந்தவன்.

Commentary

இரண்டு வகையான இயல்புகளை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது இரண்டின் விளைவுகளையும் அறிவிக்கிறார். அஸுர குணங்கள் ஒருவரை வாழ்வு மற்றும் இறப்பு என்ற ஸம்சாரத்தில் அடைத்து வைக்கின்றன, அதே சமயம் புனிதமான நற்பண்புகளை வளர்ப்பது மாயையின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட உதவுகிறது என்று அவர் கூறுகிறார்.

ஆன்மிகப் பாதையில் வெற்றிகரமாகப் பயணிக்கவும், இறுதிவரை அதைத் தொடரவும், ஒரு ஆன்மீக பயிற்சியாளர் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஆணவம், பாசாங்குத்தனம் போன்ற அஸுரத்தனமான குணங்களில் ஒன்று கூட ஆளுமையில் இருந்தால், அது தோல்விக்கு காரணமாகிவிடும். அதே நேரத்தில், தெய்வீக நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் புனித குணங்கள் இல்லாமல், நமது ஆன்மீக முன்னேற்றம் மீண்டும் முடங்கிவிடும். உதாரணமாக, தைரியம் இல்லாமல், செல்வது கடினமாகும்போது பயணத்தைக் கைவிடுவோம்; மன்னிப்பு இல்லாவிட்டால், மனம் கடவுளில் லயித்து. தங்க முடியாமல் வெறுப்பில் பிணைக்கப்படும். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடும் புனிதமான நற்பண்புகள் நம்மிடம் இருந்தால், வேகமாக முன்னேறி, தடைகளைச் சமாளிக்கும் நமது திறன் அதிகரிக்கிறது. எனவே, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதும், கெட்டவற்றை நீக்குவதும் ஆன்மீகப் பயிற்சியின் ஒரு அங்கமாகும். தனிப்பட்ட நாட்குறிப்பைப் பராமரிப்பதில் நமது பலவீனங்களை நீக்கி நல்லொழுக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவும் ஒரு பயனுள்ள நுட்பம். பல வெற்றிகரமான மக்கள் வெற்றிக்குத் தேவையான நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவுவதற்காக நினைவுக் குறிப்புகள் மற்றும் நாட்குறிப்புகளை வைத்திருந்தனர். மகாத்மா காந்தி மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் இருவரும் தங்கள் சுயசரிதைகளில் இத்தகைய நுட்பங்களைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றனர்.

நாம் கடவுள் பக்தியை வளர்த்துக் கொண்டால், காலப்போக்கில், ஸ்ரீ கிருஷ்ணரால் விவரிக்கப்பட்ட புனித நற்பண்புகளை நாம் இயற்கையாகவே பெறுவோம் என்று சிலர் வாதிடலாம். அது உண்மைதான், ஆனால் நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்மறையான பண்புகளில் இருந்து விடுபட்டு பக்தி நிறைந்த பாதையை தொடங்குவது சாத்தியமில்ல. எதிர்மறையான பண்புககளில் ஏதேனும் ஒன்று வியத்தகு முறையில் பக்தி நிறைந்த பாதையில் தலையிடலாம். பெரும்பாலான மக்கள் பயிற்சியின் மூலம் பக்தியை மெதுவாக வளர்த்துக் கொள்ள வேண்டும். நடைமுறையில் வெற்றி என்பது புனித குணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும், அஸுரத்தனமான குணங்களை நீக்குவதன் மூலமும் வருகிறது. எனவே, நமது பக்தி முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ள தெய்வீக குணங்களை வளர்த்துக்கொள்ளவும், அஸுரத்தனமான குணங்களை அகற்றவும் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்.