யாத1யாமம் க3த1ரஸம் பூ1தி1 ப1ர்யுஷித1ம் ச1 யத்1 |
உச்1சி2ஷ்ட1மபி1 சா1மேத்4யம் போ4ஜனம் தா1மஸப்1ரியம் ||10||
யாத—யாமம்--—பழைய-அழுகிய உணவுகள்; கத-ரஸம்—--சுவையற்ற; பூதி---அழுகிய; பர்யுஷிதம்--—மாசுப்பட்ட; ச—-மற்றும்; யத்--—எது; உச்சிஷ்டம்--—எஞ்சிய; அபி---மேலும்; ச—--மற்றும்; அமேத்யம்--—தூய்மையற்ற; போஜனம்—--உணவுகள்; தாமஸ—-அறியாமை முறையில் உள்ள நபர்களுக்கு; ப்ரியம்--—பிரியமானது.
Translation
BG 17.10: அதிகமாகச் சமைக்கப்பட்ட, நாட்பட்ட, சுவையற்ற அழுகிய, மாசுபட்ட மற்றும் தூய்மையற்ற உணவுகள் அறியாமை முறையில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்தமானவை.
Commentary
ஒரு யாம் (மூன்று மணி நேரம்)க்கு மேல் இருக்கும் சமைத்த உணவுகள் அறியாமை முறையில் வகைப்படுத்தப்படுகின்றன. அசுத்தமான, மோசமான சுவை அல்லது துர்நாற்றம் கொண்ட உணவுகள் அதே வகையைச் சேர்ந்தவை. தூய்மையற்ற உணவுகளில் அனைத்து வகையான இறைச்சி பொருட்களும் அடங்கும். இயற்கை மனித உடலை சைவமாக வடிவமைத்துள்ளது. மாமிச விலங்குகளைப் போல மனிதர்களுக்கு நீண்ட கோரைப் பற்கள் இல்லை அல்லது சதையைக் கிழிக்க ஏற்ற பரந்த தாடை இல்லை. மாமிச உண்ணிகள் குறுகிய குடலைக் கொண்டுள்ளன, அவை விரைவாக அழுகும் மற்றும் தரம் குறையும் நிலையற்ற இறந்த விலங்குகளின் உணவுக்கு குறைந்தபட்ச போக்குவரத்து நேரத்தை அனுமதிக்கின்றன; மாறாக, தாவர உணவை மெதுவாகவும் சிறப்பாகவும் உட்கிரகிப்பதற்கு மனிதர்களுக்கு நீண்டகுடல்- செரிமானப் பாதை உள்ளது. பச்சை இறைச்சியை ஜீரணிக்க உதவுகிற வகையில் மாமிச உண்ணிகளின் வயிறு மனிதர்களை விட அதிக அமிலத்தன்மை கொண்டது. சுவாரஸ்யமாக, மாமிச விலங்குகள் தங்கள் வியர்வை சுரப்பிகள் துளைகள் மூலம் வியர்வையை வெளியேற்றாமல் தங்கள் உடலின் வெப்பநிலையை நாக்கின் மூலம் கட்டுப்படுத்துகின்றன. தண்ணீர் குடிக்கும்போது மாமிச உண்ணிகள் தண்ணீரை நாக்கினால் நக்கி குடிக்கின்றன இதற்கு நேர்மாறாக தாவர உண்ணிகள் தண்ணீரை உறிஞ்சுகின்றன. மனிதர்களும் தண்ணீரை உறிஞ்சி குடிக்கிறார்கள் மனித உடலின் இந்த இயற்பியல் பண்புகள் அனைத்தும் கடவுள் நம்மை மாமிச உயிரினங்களாகப் படைக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது, அதன் விளைவாக, இறைச்சி மனிதர்களுக்கு அசுத்த உணவாக கருதப்படுகிறது.
இறைச்சி உண்பதும் முன்வினைப் பயனை உண்டாக்குகிறது . மனு ஸ்மிருதி1 கூறுகிறது:
மாம்ஸ ப4க்ஷயிதா1 ’முத்1ர யஸ்ய மாம்ஸம் இஹாத்3மய அஹம்
ஏத1ன் மாம்ஸஸ்ய மாம்ஸத்1வம் ப்1ரவத3ந்தி1 மனிஷிணஹ (5.55)
‘மான்ஸ (இறைச்சி) என்ற வார்த்தையின் அர்த்தம் "நான் இங்கு உண்பவனால் அடுத்த ஜென்மத்தில் சாப்பிடப் படுவேன்." அதனால்தான்,அறிஞர்கள் இறைச்சியை மான்ஸ (திரும்பத் திரும்பச் செய்யும் செயல்: நான் அவரை சாப்பிடுகிறேன், அவர் என்னை சாப்பிடுகிறார்) என்று கூறுகிறார்கள்.’