Bhagavad Gita: Chapter 17, Verse 15

அனுத்3வேக31ரம் வாக்1யம் ஸத்1யம் ப்1ரியஹித1ம் ச1 யத்1 |

ஸ்வாத்4யாயாப்4யஸனம் சை1வ வாங்மயம் த11 உச்1யதே1 ||15||

அனுத்வேக-கரம்—--துன்பத்தை ஏற்படுத்தாதத; வாக்யம்—--வார்த்தைகள்;சத்யம்--—உண்மையான; ப்ரிய-ஹிதம்—நன்மைதரக்கூடிய; ச—--மற்றும்; யத்---—எது; ஸ்வாத்யாய-அப்யஸனம்—--வேத ஶாஸ்திரங்களை ஓதுதல்; ச ஏவ-—அத்துடன்; வாங்மயம்--—பேச்சின்; தப----எளிமை-; உச்யதே----என அறிவிக்கப்படுகிறது

Translation

BG 17.15: துன்பத்தை ஏற்படுத்தாத வார்த்தைகள், உண்மையுள்ளவை, புண்படுத்தாதவை, நன்மை தரக்கூடியவை, அத்துடன் வேத ஶாஸ்திரங்களைத் தொடர்ந்து ஓதுதல் - இவை பேச்சின் துறவறம் என அறிவிக்கப்படுகின்றன.

Commentary

பேச்சின் துறவறம் என்பது உண்மையுள்ள, புண்படுத்தாத, மகிழ்ச்சியான மற்றும் கேட்பவருக்கு பயனுள்ள வார்த்தைகளை பேசுவதாகும். வேத மந்திரங்களை ஓதும் பழக்கமும் பேச்சின் துறவறத்தில் அடங்கும். முன்னோடி, மனு, எழுதினார்:

ஸத்1யம் ப்3ருயாத்1 ப்1ரியம் ப்3ருயான் ந ப்3ரூயாத்1 ஸத்1யம் அப்ரியம்

ப்1ரியம் ச1 நாந்ரித3ம் ப்3ருயாத்1 ஏஷ த4ர்ம ஸனாத1னம்

(மனு ஸ்மிருதி1 4.138)

‘உண்மையைப் பிறருக்குப் பிடிக்கும் வகையில் பேசு. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உண்மையைப் பேசாதே. இனிமையாக இருந்தாலும் பொய்யை ஒருபோதும் பேசாதே. இதுவே ஒழுக்கம் மற்றும் தர்மத்தின் நித்திய பாதை.