ந மே பா1ர்தா2ஸ்தி1 க1ர்த1வ்யம் த்1ரிஷு லோகே1ஷு கி1ன்ச1ன |
நானவாப்1த1மவாப்1த1வ்யம் வர்த1 ஏவ ச1 க1ர்மணி ||22||
ந--—இல்லை; மே—--என்னுடையது; பார்த்த—--அர்ஜனன்; அஸ்தி--—ஆகும்; கர்தவ்யம்—--கடமை; த்ரிஷு--—மூன்றில்; லோகேஷு—--உலகங்கள்; கி்ன்சன—--ஏதேனும்; ந—--இல்லை; அனவாப்தம்—--அடைய வேண்டும்; அவாப்தவ்யம்--—பெற வேண்டும்; வர்தே--—நான் ஈடுபட்டுள்ளேன்; ஏவ—--இருப்பினும்; ச--—மேலும்; கர்மணி—--வகுக்கப்பட்ட கடமைகளில்
Translation
BG 3.22: பார்த்தா, மூன்று உலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை எதுவுமில்லை, பெறுவதற்கும் அடைவதற்கும் எனக்கு எதுவும் இல்லை. ஆனாலும், விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டு வருகிறேன்.
Commentary
நாம் அனைவரும் வேலை செய்வதற்குக் காரணம் நமக்கு ஏதாவது தேவை என்பதே. நாம் அனைவரும் கடவுளின் சிறிய பகுதிகள், அவர் பேரின்பக் கடலாக இருக்கிறார், எனவே, நாம் அனைவரும் ஆனந்தத்தைத் தேடுகிறோம். நாம் இன்னும் பரிபூரண பேரின்பத்தை அடையாததால், அதிருப்தியாகவும் முழுமையற்றவர்களாகவும் உணர்கிறோம். எனவே, நாம் எதைச் செய்தாலும் அது பேரின்பத்தை அடைவதற்காகத்தான். இருப்பினும், பேரின்பம் கடவுளின் ஆற்றல்களில் ஒன்றாகும், மேலும் அவர் மட்டுமே அதை எல்லையற்ற அளவிற்குக் கொண்டிருக்கிறார். அவர் தனக்குள்ளேயே பரிபூரணமானவர் மற்றும் முழுமையானவர், அவருக்கு வெளியே எதுவும் தேவையில்லை. எனவே, அவர் ஆத்1மாராம் (தன்னிலேயே மகிழ்ச்சியடைபவர்), ஆத்1மா-ரதி1 (தன்னுடைய சுயத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்), மற்றும் ஆத்ம-கிரீடா3 (சுயத்துடன் தெய்வீக பொழுதுபோக்கைச் செய்பவர்) என்றும் அழைக்கப்படுகிறார்.
அத்தகைய ஆளுமை வேலை செய்தால், அதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்- அது தனக்காக இருக்காது; மாறாக, அது மற்றவர்களின் நலனுக்காக இருக்கும். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம், ஸ்ரீ கிருஷ்ணராக தனது தனிப்பட்ட வடிவத்தில் இருந்தாலும், பிரபஞ்சத்தில் செய்ய வேண்டிய கடமை அவருக்கு இல்லை, இருப்பினும் அவர் மற்றவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார் என்று கூறுகிறார். அடுத்து, அவர் பணிபுரியும் போது ஏற்படும் நலன்களை விளக்குகிறார்.