யே மே மத1மித3ம் நித்1யமனுதி1ஷ்ட2ன்தி1 மானவா: |
ஶ்ரத்3தா4வன்தோ1னஸூயன்தோ1 முச்1யன்தே1 தே1பி1 க1ர்மபி4: ||31||
யே---யார்; மே--—என்; மதம்--—போதனைகள்; இதம்—--இவை; நித்யம்—--தொடர்ந்து; அனுதிஷ்டந்தி\—-கட்டு படுபவர்கள்; மானவாஹா—--மனிதர்கள்; ஶ்ரத்தா-வந்தஹ----ஆழ்ந்த நம்பிக்கையுடன்; அனஸூயந்தஹ-- பொறாமையிலிருந்து விடுபட்ட; முச்யந்தே—--சுதந்திரமடைகிறார்கள்;தே—-அவர்கள்;அபி--—மேலும்; கர்மபிஹி---செயல்களின் அடிமைத்தனத்திலிருந்து
Translation
BG 3.31: என்னுடைய இந்த போதனைகளை பொறாமையில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன், கடைப்பிடிப்பவர்கள் கர்ம பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
Commentary
மிக அழகாக, அவர் விளக்கிய கொள்கையை (கருத்து (மத்1 )என்று உச்சரிக்கிறார். ஒரு கருத்து தனிப்பட்ட ஒருவரின் கண்ணோட்டம், மறுபுறம் ஒரு கொள்கை உலகளாவிய உண்மை. ஆசிரியர்களிடையே கருத்துக்கள் வேறுபடலாம், ஆனால் கொள்கை ஒன்றுதான். தத்துவஞானிகளும் ஆசிரியர்களும் தங்கள் கருத்தை கொள்கை என்று பெயரிடுகிறார்கள், ஆனால் கீதையில், இறைவன் விளக்கிய கொள்கையை கருத்து என்று பெயரிட்டுள்ளார். அவருடைய பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டின் மூலம் , அவர் நமக்கு பணிவையும் நல்லுறவையும் கற்பிக்கிறார்.
செயலுக்கான அழைப்பை வழங்கிய ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையின் போதனைகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு, அவற்றைத் தன் வாழ்வில் பின்பற்றுவதன் நற்பண்புகளை இப்போது சுட்டிக்காட்டுகிறார். மனிதர்களாகிய நமது தனிச்சிறப்பு என்னவென்றால், உண்மையை அறிந்து அதற்கேற்ப நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதுதான். இந்த வழியில், நமது மன உளைச்சல் (காமம், கோபம், பேராசை, பொறாமை, மாயை போன்றவை) அமைதி பெறுகிறது.
முந்தைய வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அனைத்து வேலைகளையும் தனக்கு வழங்குமாறு தெளிவாக விளக்கினார். ஆனால், இந்தக் கூற்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் ஏளனத்தையும், அவரிடம் பொறாமை கொண்டு உள்ளவர்களிடமிருந்து கடிந்துரைதலையும் எதிர்கொள்ளும் என்பது அவருக்குத் தெரியும். எனவே, போதனைகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் இப்போது வலியுறுத்துகிறார். இந்த போதனைகளை உண்மையாக பின்பற்றுவதன் மூலம் ஒருவர் கர்ம பந்தத்திலிருந்து விடுபடுகிறார் என்று கூறுகிறார். ஆனால் நம்பிக்கையற்றவர்களுக்கு என்ன நடக்கும்? அவர்களின் நிலைப்பாடு அடுத்து விளக்கப்படுகிறது.