ஏவம் புத்3தே4: ப1ரம் புத்3த்4வா ஸன்ஸ்த1ப்4யாத்1மானமாத்1மனா |
ஜஹி ஶத்1ரும் மஹாபா3ஹோ கா1மரூபம் து3ராஸத3ம் ||43||
ஏவம்——இவ்வாறு; புத்தேஹே——புத்தியை விட; பரம்—---உயர்ந்த; புத்வா—-—அறிந்து; ஸன்ஸ்தப்ய——கட்டுப்படுத்து; ஆத்மானம்—---தாழ்ந்த சுயத்தை (புலன்கள், மனம் மற்றும் புத்தி); ஆத்மனா—-உயர் சுயத்தால் (ஆன்மா); ஜஹி—-—அழி; ஶத்ரும்——எதிரியை; மஹா-பாஹோ-—-வலிமையான கைகளைக் கொண்டவனே அர்ஜுனா; காம-ரூபம்—-——ஆசையின் வடிவில்; துராஸதம்—-வலிமைமிக்க
Translation
BG 3.43: ஓ வலிமையான கைகளைக் கொண்ட அர்ஜுனா, இவ்வாறாக. ஆன்மாவை ஜடப் புத்தியை விட உயர்ந்தது என அறிந்து, , தாழ்ந்த சுயத்தை (உணர்வுகள், மனம் மற்றும் புத்தியை) உயர்ந்த சுயத்தால் (ஆன்மாவின் வலிமையால்) அடக்கி, காமம் எனப்படும் இந்த வல்லமைமிக்க எதிரியைக் கொல்.
Commentary
முடிவில், காமம் என்ற இந்த எதிரியை நாம் சுய அறிவின் மூலம் கொல்ல வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் வலியுறுத்துகிறார். ஆன்மா கடவுளின் ஒரு பகுதி என்பதால், அது தெய்வீக இயல்புடையது. எனவே, அது தேடும் தெய்வீக பேரின்பம் ஒரு தெய்வீக விஷயத்திலிருந்து மட்டுமே அடைய முடியும், அதே நேரத்தில் உலகின் பொருள்கள் ஜடப் பொருள்களால் ஆனது. இந்த ஜடப் பொருள்களால் ஆன்மாவின் உள்ளார்ந்த ஏக்கத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது, எனவே, அவற்றுக்காக ஆசைகளை உருவாக்குவது ஒரு பயனும் அற்றது. இந்த வழியில் சிந்தித்து நாம் புத்தியை பிரயாசப்படுத்தி பயிற்சியளிக்க வேண்டும், பின்னர் மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்த பயிற்சி அளிக்கப்பட்ட புத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுரை கூறுகிறார்.
இது க1டோ2ப1நிஷத3த்தில் ஒரு தேரின் வடிவமைப்பின் உதவியுடன் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது
ஆத்1மானக்3வம் ரதி2னம் வித்3தி4 ஶரீரம் ரத2மேவ து1
புத்3தி4ம் து1 ஸாரதி2ம் வித்3தி4 மனஹ ப்1ரக்3ரஹமேவ ச1
இந்த்3ரியாணி ஹயனாஹுர்விஷயாந்ஸ்தே1ஷு கோ3ச1ரான்
ஆத்1மேந்தி3ரியமநோயுக்1த1ம் போ4க்1தே1த்1யாஹுர்மனீஷிணஹ (1.3.3-4)
ஐந்து குதிரைகள் இழுக்கும் தேர் இருப்பதாக உபநிஷதங்கள் கூறுகின்றன. குதிரைகளின் வாயில் கடிவாளங்கள் உள்ளன, அவை தேரோட்டியின் கைகளில் உள்ளன; ஒரு பயணி தேரின் பின்புறம் அமர்ந்துள்ளார். வழக்கமாக, பபயணிகளின் அறிவுறுத்தல் படி தேரோட்டி கடிவாளத்தை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் குதிரைகளை சரியான திசையில் வழிநடத்த வேண்டும். இருப்பினும், இந்த வழக்கில், பயணி தூங்கச் சென்றதால், குதிரைகள் ஒழுங்கின்றி இங்குமங்கும் அசைந்தாடு கின்றன.
இந்த எடுத்துக்காட்டில் தேர் என்பது உடல், குதிரைகள் என்பது ஐந்து புலன்கள், குதிரைகளின் வாயில் உள்ள கடிவாளம் மனம், தேரோட்டி என்பது புத்தி, பின்னால் அமர்ந்திருக்கும் பயணி உடலில் வசிக்கும் ஆத்மா. புலன்கள் (குதிரைகள்) இன்பமானவற்றை விரும்புகின்றன. மனம் (கடிவாளம்) புலன்களின் மீது (குதிரைகள்) கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை. புத்தி (தேர்) கடிவாளத்தின் (மனம்) இழுப்புக்கு அடிபணிகிறது. பொருள் சார்ந்த ஆன்மா, உறங்கும் நிலையில் உள்ள ஆன்மா புத்தியை சரியான திசையில் செலுத்துவதில்லை. இதனால், தேர் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை புலன்கள் சுதந்திரமாக தீர்மானிக்கின்றன. ஆன்மா புலன்களின் இன்பங்களை விகாரமாக அனுபவிக்கிறது, ஆனால் இவை அதைத் திருப்திப்படுத்துவதில்லை. இந்த ரதத்தில் அமர்ந்து, ஆன்மா (பயணிகள்) என்றென்றும் இந்த ஜட உலகில் சுற்றி வருகிறது.
இருப்பினும், ஆன்மா அதன் உயர்ந்த தன்மையை உணர்ந்து, ஒரு செயலில் பங்கு கொள்ள முடிவு செய்தால், அது சரியான திசையில் புத்தியை செயல்படுத்த முடியும். புத்தி கீழ் சுயத்தை--மனதையும் புலன்களையும்-ஆளும், மேலும் தேர் நித்திய நலன் திசையில் நகரும். இந்த வழியில், தாழ்ந்த சுயத்தை (உணர்வுகள், மனம் மற்றும், புத்தி) கட்டுப்படுத்த உயர்ந்த சுயம் (ஆன்மா) பயன்படுத்தப்பட வேண்டும்