யஞ்ஞார்தா2த்1க1ர்மணோன்யத்1ர லோகோ1யம் க1ர்மப3ந்த4ன: |
த1த3ர்த2ம் க1ர்ம கௌ1ன்தே1ய முக்1த1ஸங்க3 ஸமாச1ர ||9||
யஞ்ஞ அர்தாத—--யாகத்தின் பொருட்டு; கர்மணஹ---செயலை விட; அன்யத்ர--—வேறு; லோகஹ---பொருள் உலகம்; அயம்—--இது; கர்ம---ஒருவரின் வேலையின் மூலம் அடிமைத்தனம்; தத்—-அது; அர்தம்—--பொருட்டு; கர்ம—--செயல்; கௌந்தேய--—குந்தியின் மகன் அர்ஜுனன்; முக்த-ஸங்கஹ--—பற்றற்றது; ஸமாசர---ஒழுங்காகச் செய்
Translation
BG 3.9: ஒப்புயர்வற்ற பகவானுக்கு ஒரு யஞ்ஞ (யாகம்) செய்ய வேண்டும், இல்லையெனில், அது இந்த ஜட உலகில் அடிமைத்தனத்தை ஏற்படுத்துகிறது. எனவே, குந்தியின் மகனே, கடவுளின் திருப்திக்காக, முடிவுகளுடன் பற்றுதல் அற்று உனது விதிக்கப்பட்ட கடமைகளை செய்.
Commentary
கொள்ளைக்காரனின் கையில் இருக்கும் கத்தி, மிரட்டி அல்லது கொலை செய்ய ஒரு ஆயுதம், ஆனால் அறுவை சிகிச்சை நிபுணரின் கையில் இருக்கும் கத்தி மக்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் விலைமதிப்பற்ற கருவியாகும். கத்தியானது கொலை செய்யத்தக்கதோ அல்லது ஆசிக்குரியதோ இல்லை--கத்தியால் செய்யப்பட்ட செயலின் விளைவு அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. ஷேக்ஸ்பியர் கூறியது போல்: 'நல்லது அல்லது கெட்டது எதுவுமில்லை, ஆனால் சிந்தனை அதைச் செய்கிறது.' அதேபோல், வேலை என்பது நல்லது அல்லது கெட்டது அல்ல. மனதின் நிலையைப் பொறுத்து, அது பிணைப்பதாகவோ அல்லது உயர்த்துவதாகவோ இருக்கலாம். ஒருவரின் புலன்களின் இன்பத்திற்காகவும், ஒருவரின் அஹங்காரத்தின் திருப்திக்காகவும் செய்யப்படும் வேலைகள் ஜட உலகில் அடிமைத்தனத்திற்கு காரணமாகின்றன. அதே சமயம் ஒப்புயர்வற்ற கடவுளின் மகிழ்ச்சிக்காக செய்யப்படும் யாகம் ஒருவரை மாயாவின் பிணைப்புகளிலிருந்து விடுவித்து, தெய்வீக அருளை ஈர்க்கிறது. செயல்களைச் செய்வது நமது இயல்பு என்பதால், இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் மனம் ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியாதது போல நம்மால் ஒரு கணம் கூட உழைக்காமல் இருக்க முடியாது.
நாம் செய்யும் செயல்களை கடவுளுக்குப் தியாகமாகச் செய்யாவிட்டால், நம் மனதையும் புலன்களையும் மகிழ்விக்கும் வகையில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மாறாக, நாம் வேலையை ஒரு தியாகமாகச் செய்யும்போது, முழு உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் கடவுளுக்குச் சொந்தமானதாகக் கருதுகிறோம். எனவே, அனைத்து செயல்களும் அவருடைய சேவையில் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஒரு அழகான இலட்சியத்தை பகவான் ஸ்ரீ ராமரின் மூதாதையரான மன்னர் ரகு நிறுவினார்.
ஒருவரின் உடைமைகள் அனைத்தையும் தர்மத்தில் தானம் செய்யவேண்டிய யாகம் ஆன விஸ்வஜித் யஞ்ஞத்தை மன்னர் ரகு நடத்தினார்.
ஸ விஸ்வஜித1ம் ஆஜஹ்ரே யஞ்னாம் ஸ்ர்வஸ்வ த1க்ஷிணம்
ஆதா3னம் ஹி விஸர்கா3ய ஸதா1ம் வாரி முசா1ம் இவ
(ரகு4வன்ஶ் 4.86)
‘மேகங்கள்பூமியில் இருந்து தண்ணீரை திரட்டி தங்கள் மகிழ்ச்சிக்காக அல்லாமல் பூமியின் மீது மீண்டும் பொழிவது போல ரகு விஸ்வஜித் யாகத்தை நடத்தினார், அதே போல், மன்னர் ரகு ஒரு ராஜாவாக அவர் வைத்திருந்த அனைத்தும் பொதுமக்களிடமிருந்து வரியாக சேகரிக்கப்பட்டது. ஆகையால், அது அவருடைய மகிழ்ச்சிக்காக அல்ல ஆனால் கடவுளின் மகிழ்ச்சிக்காக என்று நினைத்தார். எனவே, அவர் தனது குடிமக்களுக்கு சேவை செய்வதன் மூலம் கடவுளை பிரியப்படுத்த தனது செல்வத்தைப் பயன்படுத்த முடிவு செய்து. விஸ்வஜித் யாகத்தை நடத்தினார்.’
யாகத்திற்குப் பிறகு, ரகு தனது அனைத்து சொத்துக்களையும் தனது குடிமக்களுக்கு தானம் செய்தார். பின்னர், ஒரு பிச்சைக்காரனின் துணிகளை அணிந்து, ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு, அவர் தனது உணவுக்காக பிச்சை எடுக்க வெளியே சென்றார். மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, ஒரு கூட்டம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டார், ‘நம்முடைய மன்னன் மிகவும் கருணையுள்ளவர். அவர் தானத்தில் அனைத்தையும் கொடுத்துள்ளார்’.
மன்னர் ரகு அவர்களின் பாராட்டை கேட்டு வேதனையடைந்து, என்ன பேசுகிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் கூறினர், ‘எங்கள் அரசனைப் போற்றுகிறோம். இவரைப் போல் தொண்டு செய்பவர்கள் உலகில் யாரும் இல்லை.’
மன்னர் ரகு சுருக்கென்று பதிலளித்தார், ‘இனிமேல் அப்படிச் சொல்லாதே. ரகு எதுவும் கொடுக்கவில்லை.’
அவர்கள், ‘எங்கள் அரசனைக் குறை கூறும் நீங்கள் எப்படிப்பட்டவர்? ரகு தனக்குச் சொந்தமான அனைத்தையும் தானமாக அளித்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.’
அதற்கு ரகு, ‘உன் ராஜா இந்த உலகத்திற்கு வந்தபோது, அவன் ஏதாவது வைத்திருந்தானா என்று போய்க் கேள்? அவர் வெறுங்கையுடன் பிறந்தார், இல்லையா? அப்படியானால், அவர் எதைக் கொடுத்தார்?’ என்று கேட்டார்.
இதுவே கர்ம யோகத்தின் மெய் கருத்து ஆகும், இதில் உலகம் முழுவதையும் கடவுளுக்குச் சொந்தமானது என்று நாம் பார்க்கிறோம், எனவே, அனைத்து செயல்களும் அவருடைய திருப்திக்காக செய்யப்படுவதாக கருதப்படுகிறது. நாம் செய்யும் அனைத்து செயல்களும் நம் மனதையும் புலன்களையும் மகிழ்விப்பதற்காக அல்ல, ஆனால் கடவுளின் மகிழ்ச்சிக்காக நாம் நம் கடமைகளை செய்கிறோம். பகவான் ஸ்ரீ விஷ்ணு அறிவாற்றல் மிக்கவர்களுக்கு பின்வருமாறு அறிவுறுத்தினார்.
க்3ரிஹேஷ்வ ஆவிஶதா1ம் சா1பி பு1ம்ஸாம் கு1ஶல க1ர்மணாம்
மத்3-வார்தா1 யாத1-யாமானாம் ந ப3ந்தா4ய க்3ருஹா மதா1ஹா
(பா4க3வதம்- 4.30.19)
'சரியான கர்ம யோகிகள், தங்கள் இல்லறக் கடமைகளைச் செய்யும்போதும், எல்லாச் செயல்களிலும் நான் மகிழ்ச்சியடைபவன் என்று அறிந்து, தங்கள் எல்லா வேலைகளையும் எனக்கு யாகம் செய்கிறார்கள். என் மகிமைகளைக் கேட்பதிலும் பாடுவதிலும் அவர்கள் ஓய்வு நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள், உலகில் வாழ்ந்தாலும், தங்கள் செயல்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள்.’