Bhagavad Gita: Chapter 7, Verse 16

1து1ர்விதா44ஜன்தே1 மாம் ஜனா: ஸுக்1ருதி1னோ‌ர்ஜுன |

ஆர்தோ1 ஜிஞ்ஞாஸுரர்தா2ர்தீ2 ஞானீ ச14ரத1ர்ஷப4 ||16||

சதுர்-விதாஹா—--நான்கு வகை; பஜந்தே—--வழிபடுகின்றனர்; மாம்—--என்னை; ஜனாஹா—--மக்கள்; ஸு-கிருதினஹ—--பக்தியுள்ளவர்கள்; அர்ஜுனா—--அர்ஜுனன்; ஆர்தஹ--—கஷ்டப்படுகிறவர்கள்; ஜிஞ்ஞாஸுஹு----அறிவைத் தேடுபவர்கள்; அர்த்த-அர்த்தீ—--பொருள் ஆதாயத்தை நாடுபவர்கள்; ஞானீ--—அறிவில் நிலைபெற்றவர்கள்; ச—--மற்றும்;பரத-ரிஷப--—பரதர்களில் சிறந்தவர், அர்ஜுனன்

Translation

BG 7.16: பரத வம்சத்தில் தோன்றியவர்களில் சிறந்தவனே, துன்பத்தில் உள்ளவர்கள், அறிவைத் தேடுபவர்கள், உலக உடைமைகளைத் தேடுபவர்கள், அறிவில் நிலைபெற்றவர்கள் என நான்கு வகையான பக்திமான்கள் என் பக்தியில் ஈடுபடுகிறார்கள்

Commentary

தம்மிடம் சரணடையாத மனிதர்களை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது அவரை அடைக்கலம் புகும் நபர்களை வகைப்படுத்துகிறார்..

1) துன்பப்படுபவர்கள். சிலருக்கு, உலகத் துன்பங்கள் அதிகமாகிவிட்டால், உலகத்தின் பின் ஓடுவதை விட்டுவிட்டு கடவுளைப் பின்பற்றுவதே மேலென்று முடிவுக்கு அவர்களை இட்டுச் செல்கிறது அவ்வாறே, உலகத்தில் ஆதரவற்றவர்களாக உணர்ந்து பாதுகாப்பிற்காக கடவுளிடம் திரும்புகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரிடம் திரௌபதி சரணடைந்தது இந்த வகையான சரணாகதிக்கு ஒரு எடுத்துக்காட்டு. கௌரவர்களின் கூட்டத்தில் திரௌபதியின் வஸ்த்ராபஹரணம் போது தன் கணவன்மார்களின் பாதுகாப்பில் நம்பிக்கையாக இருந்த திரௌபதி அவர்கள் அமைதியாக இருந்தபோது, ​​சபையில் இருந்த கடமை பேணுகிற பக்தியுள்ள பெரியவர்களான துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், பீஷ்மர் மற்றும் விதுரர் ஆகியோரை நம்பி அவர்களும் அவளுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறியதால், புடவையை பற்களுக்கு இடையில் இறுக்கிக் கொண்ட நிலை வரையில்., திரௌபதியைக் காப்பாற்ற ஸ்ரீ கிருஷ்ணர் வரவில்லை. கடைசியாக, துஷாஸன் திரௌபதியின் புடவையை இழுத்தபோது புடவை திரௌபதியின் பற்களின் பிடியிலிருந்து நழுவியது. அந்த நேரத்தில், மற்றவர்களின் பாதுகாப்பில் நம்பிக்கை இழந்து தன்னுடைய சொந்தப் பலத்தையும் நம்பாத திரௌபதி தன்னை முழுவதுமாகச் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்தார். முழுவதுமாக சரணடைந்த திரௌபதிக்கு உடனடியாக ஸ்ரீ கிருஷ்ணர் முழுமையான பாதுகாப்பை வழங்கினார். ஸ்ரீ கிருஷ்ணர் திரௌபதியின் புடவையின் நீளம் அதிகரித்துக்கொண்டே போகும்படி செய்தார்; துஷாஷன் எவ்வளவு இழுத்தாலும், அவன் இழுக்க இழுக்க புடவையின் நீளம் அதிகரித்துக்கொண்டே போனதால் திரௌபதியின் மானம் காக்கப் பட்டது; துஷாஸன் போராடி தோற்றான்.

2) அறிவைத் தேடுபவர்கள். சிலர் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தால் கடவுளிடம் அடைக்கலம் அடைகிறார்கள். ஆன்மீகத் துறையில் பிறர் பேரின்பத்தைக் கண்டடைவதைப் பற்றி கேள்விப்படும் அவர்கள்,அதைப் பற்றி அறிய ஆர்வம் அடைகிறார்கள். எனவே, தங்கள் ஆர்வத்தைத் தீர்த்துக்கொள்ள, அவர்கள் இறைவனை அணுகுகிறார்கள்.

3) உலக உடைமைகளைத் தேடுபவர்கள். மற்றொரு வகையான மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் மிகத் தெளிவாகவும், இறைவனால் மட்டுமே அதைத் தங்களுக்கு வழங்க முடியும் என்பதில் உறுதியாகவும் இருக்கிறார்கள், எனவே அவர்கள் அவருடைய தங்குமிடத்திற்குச் செல்கிறார்கள். உதாரணமாக, துருவ் தனது தந்தையான உத்தானபாதன் மன்னனை விட அதிக சக்தி வாய்ந்தவராக ஆக வேண்டும் என்ற விருப்பத்துடன் தனது பக்தியைத் தொடங்கினார். ஆனால் அவரது பக்தி முதிர்ச்சியடைந்து, கடவுள் அவருக்கு தரிசனம் கொடுத்தபோது, ​​ தெய்வீக அன்பின் விலைமதிப்பற்ற நகைகளை உடையவரிடமிருந்து அவர் விரும்பியது உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போன்றது என்பதை உணர்ந்தார். பின்னர் இறைவனிடம் தன்னலமற்ற பக்தியை அருளுமாறு வேண்டினார்.

4) அறிவில் அமைந்தவர்கள். இறுதியாக, தாங்கள் கடவுளின் சிறிய பகுதிகள் என்றும், அவரை நேசிப்பதும் சேவை செய்வதும்தான் அவர்களின் நித்திய தர்மம் என்ற புரிதலை அடைந்த ஆத்மாக்கள் உள்ளனர். அவருடைய பக்தியில் ஈடுபடும் நான்காவது வகையான மக்கள் இவர்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.