அத்தியாயம் 1: அர்ஜுன விஷாத யோகம்

போரின் விளைவுகளை புலம்புவது

கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு உறவினர்களுக்கு இடையே துவங்க இருந்த மாபெரும் மகாபாரதப்போரின் போர்க்களத்தில் பகவத் கீதை பேசப்பட்டது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், மாபெரும் போருக்கு வழிவகுத்த நிகழ்வுகள் பற்றிய விரிவான விளக்கம் பகவத் கீதையின் அமைப்பு என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மன்னர் த்ருதராஷ்டிரருக்கும் அவரது மந்திரி ஸஞ்ஜயனுக்கும் இடையேயான உரையாடலாக பகவத் கீதை விரிவுற துவங்குகிறது. த்ருதராஷ்டிரர் பார்வையற்றவராக இருந்ததால், அவரால் போர்க்களத்தை நேரில் காண முடியவில்லை. எனவே, போர்முனையில் நடந்த நிகழ்வுகளை ஸஞ்ஜயன் அவரிடம் நேரடியாகக் கூறிக் கொண்டிருந்தார். ஸஞ்ஜயன் மகாபாரதத்தின் புகழ்பெற்ற நுலாசிரியர் வேத வியாஸ முனிவரின் சீடர் ஆவார். தொலைதூர இடங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் மாய சக்தி வேதவியாஸரிடம் இருந்தது. திருதராஷ்டிரருக்கு ஸஞ்ஜயன் போர்க்களத்தில் நடந்த சம்பவங்களைச் தொலைதூரத்திலிருந்து எடுத்துரைக்கும் வகையில், அதே சக்தியை ஸஞ்ஜயனக்கும் வழங்கினார்.

 

த்ருதராஷ்டிரர் கூறினார்: ஓ ஸஞ்ஜயா,  குருக்ஷேத்திரத்தின் புனித களத்தில் கூடி போராட  விரும்பிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தார்கள்?

ஸஞ்ஜயன்   கூறினார்: பாண்டவ இராணுவம் இராணுவ அமைப்பில் நிற்பதைக் கவனித்த மன்னன் துரியோதனன்  தனது ஆசிரியர் த்ரோணாச்சாரியரை அணுகி பின்வரும்  வார்த்தைகளை கூறினார்.

துரியோதனன் கூறினான்: மரியாதைக்குரிய ஆசிரியரே! தங்கள் திறமையான சீடரான த்ருபதனின் மகனால் திறமையாக அணி வகுக்கப்பட்டுள்ள பாண்டுவின் மகன்களின் வலிமைமிக்க இராணுவப் படையை பாருங்கள்.

பாருங்கள், அவர்கள் அணிகளில் விராடன், பீமன்,  மற்றும் அர்ஜுனனுக்கு சமமான இராணுவ வலிமை பெற்ற வலிமையான  வில்களைத் தாங்கிய யுயுதானன், விராடன், மற்றும் த்ருபதன்  போன்ற பல சக்திவாய்ந்த போர்வீரர்கள் உள்ளனர். மற்றும், அங்கே த்ருஷ்டகேது, சேகிதானன், காசியின் அருமையான மன்னர் புருஜிதன், குந்திபோஜன், மற்றும் ஷைப்யன் போன்ற திறமையான போர்படை வீரர்கள் உள்ளனர். மேலும் அவர்களுடைய அணிகளில், வீரஞ்செறிந்த  யுதாமன்யு, ஸுபத்ராவின் மகன் உத்தமௌஜன் மற்றும் சிறந்த  போர்வீர   தளபதிகளான திரௌபதியின் மகன்களும் உள்ளனர்.

ப்ராஹ்மணர்களில் சிறந்தவரே, இப்பொழுது நான் நம் பக்கத்தில் உள்ள   வழி நடத்துவதில்  சிறப்பு தகுதி உடைய  ப்ரதான தலைவர்களைப் பற்றி நினைவுபடுத்துகிறேன்.

அங்கு தங்களைப் போல் குணநலன் படைத்த போரில்  எப்பொழுதும் வெற்றி பெறும் போர் வீரர்களான பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியர், அஶுவத்தாமன் மற்றும் பூரிஸ்ரவன் ஆகியோர் உள்ளனர்.

மேலும், அங்கே என் பொருட்டு தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்கும் மற்றும் பல வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு வகையான  ஆயுதங்களை தாங்கிய  போர்க்கலையில் திறமையானவர்கள்.

நமது இராணுவத்தின் வலிமை வரம்பற்றது.  மற்றும்,  நாம் பாட்டனார் பீஷ்மரால் திறமையாக வழிநடத்தப் படுகிறோம். அதேசமயம் பீமனால் கவனமாக வழி நடத்தப்படுகின்ற பாண்டவர் இராணுவத்தின் வலிமை வரம்புக்குள்ளானது.

ஆகையால், கௌரவ இராணுவத்தின் தனித்தனி தளத்தகைகளுக்கு தற்காப்பு அளிக்கும் அனைத்து தளபதிகளையும் அவரவர் சூழ்நிலையிலிருந்து பாட்டனார் பீஷ்மருக்கு முழு ஆதரவளிக்குமாறு நான் இப்பொழுது அழைக்கிறேன்.

பின்னர் குரு வம்சத்தின் மாபெரும் போர் வீரரும் பாட்டனாரும் ஆன பீஷ்மர் தனது ஊது சங்கை ஒரு சிங்கத்தின்  கர்ஜனையை போன்று உரக்க முழங்கி துரியோதனனுக்கு மகிழ்ச்சியை அளித்தார்.

அதன்பிறகு ஶங்குகள், பறைகள், எக்காளங்கள், ஊதுகொம்புகள், மற்றும் ஊது குழல்களின்  ஒருங்கிணைத்த முழக்கம் பயங்கரமாக இருந்தது.

பின்னர் பாண்டவ இராணுவத்தின் தரப்பிலிருந்து  வெள்ளை குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில்  வீற்றிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.

ஹ்ருஷிகேஶ் தனது பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் சங்கை முழங்கினார், மற்றும் அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கை முழங்கினார். தீராப் பெரும்பசியுடைய, அதிக சக்திவாய்ந்த  பணிகளைச் செய்வவருமான பீமன்,  பௌண்ட்ரம் என்று அழைக்கப்படும் அவரது வலிமையான சங்கை முழங்கினார்.

யுதிஷ்டிர மன்னர் அனந்த விஜயம் என்ற சங்கை முழங்கினார். அதே வேளையில் நகுலன் மற்றும் சஹதேவன்  ஸுகோஷம் மற்றும் மணிபுஷ்பகம் எனும் சங்குகளை முழங்கினார்கள்.  சிறந்த வில்லாளரும் மற்றும் சிறந்த போர் வீரருமான காசியின் மன்னர். ஶிகண்டீ, த்ருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் வெல்லமுடியாத ஸாத்யகி, த்ருபதன், திரௌபதியின் ஐந்து மகன்கள், மற்றும் ஸுபத்ராவின் வலிமைமிக்க கைகளை உடைய மகன் அபிமன்யு அனைவருமே அவரவர்களின்  சங்குகளை முழங்கினார்கள். ஓ, பூமியின் ஆட்சியாளரே,

த்ருதராஷ்டிரரே,  பயங்கர ஒலி வானத்திலும் பூமியிலும் இடித்து, உங்கள் மகன்களின் இதயங்களை சிதைத்தது.

அந்த நேரத்தில் தனது தேரின் கொடியில் ஹனுமானின் முத்திரை குறித்த பாண்டுவின் மகன் அர்ஜுனன் தனது வில்லை எடுத்துக் கொண்டார். ஓ அரசரே, உங்கள் மகன்கள் அவருக்கு எதிராக அணிவகுத்து வருவதை பார்த்த அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பின்வரும் வார்த்தைகளை பேசினார்.

அர்ஜுனன் கூறினார், ‘தவறாநிலைஉடையவரே, தயவு செய்து எனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு செல்லுங்கள். இதன் மூலம் நான் போராட வேண்டிய, இந்த மாபெரும் போரில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்களை என்னால் பார்க்க இயலும்.’

த்ருதராஷ்டிரரின் தீய எண்ணம் கொண்ட மகன் துரியோதனனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் தரப்பில் போர் புரிய இங்கு வந்தவர்களை பார்க்க விரும்புகிறேன்.

ஸஞ்ஜயன் கூறினார்: ஓ த்ருதராஷ்டிரரே, தூக்கத்தை வென்ற அர்ஜுனனால் உரையாற்ற பட்ட ஸ்ரீகிருஷ்ணர் பின்னர் அற்புதமான தேரை இரு படைகளுக்கும் இடையில் நிறுத்தினார்.

பீஷ்மர், த்ரோணாச்சாரியர் மற்றும் பிற மன்னர்கள் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: ஓ பார்த்தா, இங்கு குழுமியிருக்கும் குரு வம்சத்தினரை காண்பாய்.

அங்கு, இரு படைகளிலும், அவரது தந்தைகள், பாட்டனார்கள், ஆசிரியர்கள், தாய்வழி மாமன்கள், சகோதரர்கள்,  ஒன்றுவிட்ட சகோதரர்கள், மகன்கள், மருமகன்கள், பேர-மருமகன்கள், நண்பர்கள், மாமனார்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோர் நிறுத்தப்பட்டிருப்பதை அர்ஜுனனால் காண முடிந்தது.

அங்கு இருந்த அவரது உறவினர்கள் அனைவரையும் பார்த்து, குந்தியின் மகன் அர்ஜுனன் இரக்கத்தால் மூழ்கி, ஆழ்ந்த துக்கத்துடன், பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.

அர்ஜுனன் கூறினார், ஓ கிருஷ்ணா, என் சொந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் நோக்கத்துடன் போருக்கு அணிவகுத்து நிற்பதைப் பார்க்கும் பொழுது என் கை கால்கள் தொய்ந்து என் வாய் வறண்டு போகிறது.

என் உடல் முழுதும் சிலிர்த்து நடுங்குகிறது. எனது வில்லான ‘கா3ண்டீ31ம்’ என் கையிலிருந்து நழுவுகிறது; எனது சருமம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. ஊசலடும் என் மனம் குழப்பத்தில் சுழல்கிறது.  என்னால் இனி என்னை நிலையாக வைத்திருக்க முடியவில்லை.  கேஶீ என்ற அரக்கனை கொன்ற ஓ கிருஷ்ணா, நான் துரதிருஷ்டவசமான சகுனங்களை மட்டுமே பார்க்கிறேன். இந்த போரில் எனது சொந்த உறவினர்களைக் கொல்வதால் எந்த பயனும் வரும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

ஓ கிருஷ்ணா, எனக்கு ராஜ்யம் மற்றும் வெற்றியை அடைவதிலும் மற்றும் அவற்றினால் வரும் மகிழ்ச்சியிலும் விருப்பமில்லை. நாம் யாருக்காக ஆவலுடன் ராஜ்யம், இன்பங்கள், தவிர இந்த வாழ்க்கையையே வாழ விரும்புகிறோமோ அவர்களே நம்முன் போரிட நிற்கும்பொழுது இந்த ராஜ்யம், இன்பங்கள், தவிர வாழ்க்கையின் பயன் தான் என்ன?

இங்கு தங்களது ஐஸ்வர்ய சம்பத்து மற்றும் வாழ்க்கையையே பணயம் வைத்த ஆசிரியர்கள், தந்தைகள், மகன்கள், தாத்தாக்கள், தாய்வழி மாமன்கள், பேரன்கள், மாமனார்கள், பேர மருமகன்கள், மைத்துனர்கள், மற்றும் மற்ற உறவினர்கள் கூடியுள்ளனர். ஓ மதுசூதனா, அவர்கள் என்னை தாக்கினாலும் நான் அவர்களை அழிக்க விரும்பவில்லை. நாம்  த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் அடையும் மூவுலக ஆதிக்கத்தின் பயன் தான் என்ன? பூமியின் ஆதிக்கத்தை பற்றி என்ன சொல்வது?

எல்லா உயிரினங்களையும் பராமரிப்பவரே, த்ருதராஷ்டிரரின் மகன்களைக் கொல்வதால் நாம் என்ன இன்பத்தை பெறுவோம்? அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தாலும், நாம் அவர்களைக் கொன்றால் நிச்சயமாக நம்மீது பாவம் வரும்.எனவே, நம்முடைய சொந்த உறவினர்களையும், த்ருதராஷ்டிரரின்  மகன்களையும், நண்பர்களையும் கொல்வது என்பது நமக்கு ஒரு பொருந்தாத செயலாகும். ஓ மாதவா, நமது சொந்த உறவினர்களைக் கொல்வதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எவ்வாறு நம்புகிறோம்?

அவரது எண்ணங்கள் பேராசையால் ஆட்கொள்ளப்பட்டன. மற்றும்,  அவர்கள் தங்கள் உறவினர்களை அழிப்பதிலும் அல்லது நண்பர்களுக்கு துரோகம் செய்வதிலும் எந்த தவறையும் உணரவில்லை. ஆயினும், ஓ, ஜனார்தனா(கிருஷ்ணா), நம்முடைய உறவினர்களைக் கொல்வதில் உள்ள குற்றத்தை தெளிவாகக் காணக்கூடிய நாம் ஏன் இந்த பாவத்திலிருந்து விலகக்கூடாது?

ஒரு வம்சம் அழிக்கப்படும்போது, ​​அதன் மரபுகள் அழிக்கப்பட்டு, குடும்பத்தின் மற்றவர்கள் ஒழுங்கற்ற தன்மையில் ஈடுபடுகிறார்கள்.

ஒழுங்கீனம் பரவலாக ஓங்கும் பொழுது ஓ கிருஷ்ணா, குடும்பப் பெண்கள் தார்மீக நெறியிலிருந்து தவறுகிறார்கள்; மற்றும்,  அவ்வாறு அவமார்க்கத்தில் செல்லும் பெண்களிடம் இருந்து, ஓ விருஷ்ணியின்  வழியில் தோன்றியவரே, தேவையற்ற சந்ததியினர் பிறக்கிறார்கள்.

தேவையற்ற குழந்தைகளின் அதிகரிப்பு  குடும்பத்திற்கும் குடும்பத்தை அழிப்பவர்களுக்கும் நரக வாழ்க்கையை ஏற்படுத்துகிறது. அத்தகைய ஊழல் குடும்பங்களின் மூதாதையர்களும் கர்ம அர்ப்பணிப்புகளை இழந்து, தாழ்ந்த நிலையை அடைகிறார்கள்.

அவ்வாறு குடும்ப பாரம்பரியத்தை  அழித்து தேவையற்ற சந்ததியினரை உருவாக்குபவர்கள்களின் தீய செயல்களினால் பல்வேறு வகையான  சமூக மற்றும் குடும்ப நல நடவடிக்கைகள் பாழாகின்றன.

ஓ ஜனார்த்தனா, குடும்ப மரபுகளை அழிப்பவர்கள் காலவரையின்றி நரகத்தில் வாழ்கிறார்கள் என்று நான் கற்றறிந்தவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன்.

அந்தோ! நாம் நமது மனதை பெரும் பாவத்தை செய்வதில் ஈடுபடுத்தி இருப்பது  எவ்வளவு விசித்திரமானது. அரச  இன்பங்களுக்கான விருப்பத்தால் உந்தப்பட்டு, நாம் நமது சொந்த உறவினர்களைக் கொல்ல விரும்புகிறோம். கையில் ஆயுதங்களைக் கொண்டு, த்ரிதராஷ்டிரரின் மகன்கள்  நிராயுதபாணியாக, போர்க்களத்தில் தடையின்றி என்னை கொல்வது மேலானது.

ஸஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு பேசிய  அர்ஜுனன் மன வருத்தத்தால் ஆட்கொள்ளப்பட்டு  துயரத்தில் மூழ்கிய மனதுடன் தனது வில் மற்றும் அம்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனது போர்களத்தில் தேரின் இருக்கையில் தொய்ந்து  அமர்ந்தார்.