ஸஞ்ஜய உவாச1 |
ஏவமுக்1த்1வார்ஜுன: ஸங்க்2யே ரதோ2பஸ்த2 உபா1விஶத் |
விஸ்ருஜ்ய ஸஶரம் சா1ப1ம் ஶோக1ஸம்விக்3னமானஸ: ||47||
ஸஞ்ஜய உவாச---ஸஞ்ஜயன் கூறினார்; ஏவமுக்த்வா-—இவ்வாறு பேசியபின் ; அர்ஜுனஹ-— அர்ஜுனன்; ஸங்க்யே-—போர்களத்தில்; ரதோபஸ்த-—தேரில்; உபாவிஶத்-—அமர்ந்தார்; விஸ்ருஜ்ய-ஒதுக்கி வைத்துவிட்டு; ஸஶரம்— அம்புகளுடன்; சாபம்-—வில்; ஶோக-—துயரத்தில்; ஸம்விக்ன—- பாதிப்புற்ற; மானஸஹ-— மனதுடன்
Translation
BG 1.47: ஸஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு பேசிய அர்ஜுனன் மன வருத்தத்தால் ஆட்கொள்ளப்பட்டு துயரத்தில் மூழ்கிய மனதுடன் தனது வில் மற்றும் அம்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனது போர்களத்தில் தேரின் இருக்கையில் தொய்ந்து அமர்ந்தார்.
Commentary
பல முறை, ஒரு நபர் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகிறார், 1.28 வசனத்தில் வெளிப்படுத்தத் தொடங்கிய அர்ஜுனனின் அவநம்பிக்கை இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அறிவிலும் பக்தியிலும் இறைவனிடம் சரணாகதி அடையும் நிலைக்கு முற்றிலும் எதிர்மாறாக மனம் குலைந்து அவர் ஸுய தர்ம கடமையில் ஈடுபடும் போராட்டத்தை கைவிட்டார். அர்ஜுனன் ஆன்மீக அறிவின் தொடக்க நிலையாளர் அல்ல என்பதை இந்த இடத்தில் தெளிவுபடுத்துவது பொருத்தமானது. அவர் தேவலோக வாஸ ஸ்தலங்களுக்குச் சென்று சென்று சொர்க்கலோகத்தின் ராஜாவான தனது தந்தை இந்திரனிடமிருந்து அறிவுரைகளை பெற்றவர். உண்மையில், அவர் தனது கடந்தகால வாழ்க்கையில் நரராக இருந்தார், அதன் விளைவாக, ஆழ்நிலை அறிவில் நிலை பெற்றவராக இருந்தார் (நர-நாராயணன் இரட்டை வழித்தோன்றல்கள்--- நரன் ஒரு பரிபூரணமான ஆத்மா மற்றும் நாராயணன் ஒப்புயர்வற்ற கடவுள்). மகாபாரதப் போருக்கு முன், அர்ஜுனன், துரியோதனனுக்காக முழு யது சேனையையும் விட்டுவிட்டு, ஸ்ரீ கிருஷ்ணரைத் தன் பக்கம் தேர்ந்தெடுத்ததே இதற்குச் சான்றாகும். இறைவன் தன் பக்கம் இருந்தால் தோற்கமாட்டேன் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது. இருப்பினும், ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையின் செய்தியை வருங்கால சந்ததியினரின் நலனுக்காக வழங்க விரும்பினார், எனவே, சரியான நேரத்தில், அவர் அர்ஜுனனின் மனதில் வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்கினார்.