Bhagavad Gita: Chapter 1, Verse 7

அஸ்மாக1ம் து1 விஶிஷ்டா1 யே தா1ன்னிபோ34 த்3விஜோத்11ம |

நாயகா1 மம ஸைஞ்யஸ்ய ஸன்ஞார்த1ம் தா1ன்ப்3ரவீமி தே1 ||7||

அஸ்மாகம்---நம்முடைய; து—--ஆனால்; விஶிஷ்டாஹா--—சிறப்பான; யே—--எவர்; தான்—--அவர்களை; நிபோத—--அறிந்து கொள்ளவும்; த்விஜ-உத்தம—ப்ராமணர்களில் சிறந்தவரே; நாயகாஹா---—பிரதான படை தலைவர்கள்; மம----நமது; ஸைன்யஸ்ய—--இராணுவத்தின்; ஸஞ்ஞார்தம்----தகவலுக்கு; தான்—--அவர்களை; ப்ரவீமி—--நான் விவரிக்கிறேன்; தே-—உங்களுக்கு.

Translation

BG 1.7: ப்ராஹ்மணர்களில் சிறந்தவரே, இப்பொழுது நான் நம் பக்கத்தில் உள்ள   வழி நடத்துவதில்  சிறப்பு தகுதி உடைய  ப்ரதான தலைவர்களைப் பற்றி நினைவுபடுத்துகிறேன்.

Commentary

உண்மையில் த்ரோணாச்சாரியர் ஒரு ராணுவ அறிவியல் ஆசிரியர். ஒரு போர் வீரர் அல்ல.  இருப்பினும், போர்க்களத்தில் அவர் கௌரவ இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்தார். மரியாதை அற்ற துரியோதனன் தனது சொந்த போதகரின் விசுவாசத்தைக் கூட சந்தேகித்தான். நயவஞ்சகமான துரியோதனன் வேண்டுமென்றே தனது ஆசிரியரை த்விஜோத்தமா  (இருமுறை பிறந்தவர்களில் சிறந்தவர், அல்லது ப்ராஹ்மணர்) என்று அழைத்தான். துரியோதனன் த்ரோணாச்சாரியரின் பெருமையை குறைக்கும் முறையில் இந்த போரில் அவர் தனது வீரத்தை காட்டவில்லை என்றால், அவர் ராஜாவின் அரண்மனையில் சிறந்த உணவு மற்றும் பகட்டான வாழ்க்கை முறைகளில் மட்டுமே ஆர்வம் காட்டும் ஒரு தாழ்ந்த ப்ராமணராக கருதப்படுவார் என்று மறைமுகமாக நினைவூட்டினான்.

அதைச் சொல்லிவிட்டு, துரியோதனன் இப்போது தன் மன உறுதியையும், தன் ஆசிரியரின் மன உறுதியையும் உயர்த்த விரும்பினான், எனவே, கௌரவர்  தரப்பில் உள்ள ப்ரதான படை தலைவர்களை பெயரிட தொடங்கி அவர்களின் வீரம் மற்றும் இராணுவ  நிபுணத்துவத்தை விவரித்தான்.

Watch Swamiji Explain This Verse