Bhagavad Gita: Chapter 1, Verse 8

4வான்பீ4ஷ்மஶ்ச1 1ர்ணஶ்ச1 க்1ருப1ஶ்ச1 ஸமிதி1ந்ஜய: |

அஶ்வத்1தா2மா விக1ர்ணஶ்ச1 ஸௌமத3த்1தி1ஸ்த1தை2வ ச1 ||8||

பவான்—--தாங்கள்; பீஷ்மஹ—--பீஷ்மர் ச—-மற்றும்; கர்ணஹ--—கர்ணன்; ச—--மற்றும்; க்ருபஹ—--கிருபாச்சாரியர்; ச—--மற்றும்; ஸமிதிந்ஜயஹ--—போரில் வெற்றி பெறும் ஸமிதிந்ஐயன்; அஶ்வத்தாமா--அஶுவத்தாமன்; விகர்ணஹ-—-விக்ரம்; ச—--மற்றும்; ஸௌமதத்திஹி—--பூரிஸ்ரவன்; ததா-—-மற்றும்; ஏவ—--ஆகியோர்; ச—--மற்றும்

Translation

BG 1.8: அங்கு தங்களைப் போல் குணநலன் படைத்த போரில்  எப்பொழுதும் வெற்றி பெறும் போர் வீரர்களான பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியர், அஶுவத்தாமன் மற்றும் பூரிஸ்ரவன் ஆகியோர் உள்ளனர்.

Watch Swamiji Explain This Verse