ருத்3ராணாம் ஶங்க1ரஶ்சா1ஸ்மி வித்1தே1ஶோ யக்ஷரக்ஷஸாம் |
வஸூனாம் பா1வக1ஶ்சா1ஸ்மி மேரு: ஶிக1ரிணாமஹம் ||23||
ருத்ராணம்--—ருத்ரங்களுக்கிடையில்; ஶங்கரஹ---சிவபெருமான்; ச--—மற்றும்; அஸ்மி--—நான்; வித்த-ஈஶஹ---செல்வத்தின் கடவுள் மற்றும் தேவலோக கடவுள்களின் பொக்கிஷம்; யக்ஷ--—அரை தேவலோக மனிதர்களில்; ரக்ஷஸாம்—அசுரர்களுக்கு மத்தியில்; வஸூனாம்--—வஸூக்கள் மத்தியில்; பாவகஹ—--அக்னி (நெருப்பு); ச—--மற்றும்; அஸ்மி--—நான்; மேருஹு-—மேரு மலை; ஶிகரிணாம்--—மலைகளுக்கு மத்தியில்; அஹம்—-நான்
BG 10.23: ருத்ரர்களில், என்னை சிவபெருமான் என்று அறிக. அரைவான மனிதர்கள் மற்றும் அசுரர்களில் நான் குபேரன். வஸுக்களில் நான் அக்னியாகவும், மலைகளில் மேருவாகவும் இருக்கிறேன்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ருத்3ரர்கள் என்பது சிவபெருமானின் பதினொரு வடிவங்கள்—ஹர, ப3ஹுரூப, த்1ரயம்ப4க, அப1ராஜித1, வ்ருஸக1பி1, ஶங்க1ர், க1ப1ர்தி1, ரைவத1, மிருக3வ்யாதா4, ஸர்வ மற்றும் க1பாலி. புராணங்களில் பல்வேறு இடங்களில் இவருக்குப் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில், பிரபஞ்சத்தில் உள்ள சிவபெருமானின் மூல வடிவம் ஶங்கர்.
யக்ஷர்கள் (அரை -தேவலோக மனிதர்கள்) செல்வத்தைப் பெறுவதிலும் அதைச் சேமித்து வைப்பதிலும் மிகவும் விருப்பமுள்ள உயிரினங்கள். அவர்களின் தலைவரான குபேரன் செல்வத்தின் கடவுள் மற்றும் தேவலோக கடவுள்களின் பொருளாளர் ஆவார். இவ்வாறு அவர் பேய்களிடையே கடவுளின் தெய்வீகத்தை பிரதிபலிக்கிறார்.
எட்டு வஸுக்கள் உள்ளன - நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்வெளி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள். அவை பிரபஞ்சத்தின் மொத்த கட்டமைப்பை உருவாக்குகின்றன. இவற்றில், அக்னி (நெருப்பு) மற்ற உறுப்புகளுக்கு அரவணைப்பையும் ஆற்றலையும் அளிக்கிறது. எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் அதை தனது சிறப்பு வெளிப்பாடு என்று குறிப்பிடுகிறார்.
மேரு என்பது அதன் வளமான, இயற்கை வளங்களுக்காக புகழ்பெற்ற தேவலோக இருப்பிடங்ககளில் உள்ள ஒரு மலை. சொர்க்கத்தின் பல அலகுகள் அதன் அச்சில் சுற்றிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறதுத. ஸ்ரீ கிருஷ்ணர் இதைத் தனது மகிமையாகக் கூறுகிறார். செல்வம் ஒரு செல்வந்தரை வேறுபடுத்துவது போல, இந்த மகிமைகள் கடவுளின் சிறப்பான மகிமைகளை வெளிப்படுத்துகின்றன.