ப்3ருஹத்1ஸாம த1தா2 ஸாம்னாம் கா3யத்1ரீ ச2ன்த3ஸாமஹம் |
மாஸானாம் மார்க3ஶீர்ஷோஹம்ருதூ1னாம் கு1ஸுமாக1ர: ||35||
ப்ருஹத்-ஸாம—--பிருஹத்ஸமம்; ததா—--மேலும்; ஸாம்நாம்—--ஸாம வேதத்தில் உள்ள பாடல்களில்; காயத்ரீ--—காயத்ரி மந்திரம்; சந்தஸாம்--—கவிதை அளவுகளில்; அஹம்--—நான்; மாஸானாம்--—பன்னிரண்டு மாதங்களில்; மார்க-ஶீர்ஷஹ-----மார்கழி (நவம்பர்-டிசம்பர்) மாதம்; அஹம்—--நான்; ரிதூனாம்--—எல்லா பருவங்களிலும்; குஸுமாகரஹ—--வசந்தம்
Translation
BG 10.35: ஸாம வேதத்தில் உள்ள கீர்த்தனைகளில் என்னை பிருஹத்ஸாம என்று அறிவாய்; கவிதைகளி-ல் நான் காயத்ரீ. இந்து நாட்காட்டியின் பன்னிரண்டு மாதங்களில், நான் மார்கழி, மற்றும் பருவங்களில் நான் பூக்கள் மலரும் வசந்த காலம்,
Commentary
ஸ்ரீ கிருஷ்ணர் வேதங்களில் அழகான பக்தி பாடல்கள் நிறைந்த ஸாம வேத3ம் என்று முன்பு கூறினார். இப்பொழுது ஸாம வேதத்திற்குள், அவர் பொதுவாக நள்ளிரவில் பாடப்படும் நேர்த்தியான மெல்லிசையான ப்3ருஹத்1ஸாம என்று கூறுகிறார்,
ஸமஸ்கிருத மொழி, மற்ற மொழிகளைப் போலவே, கவிதை எழுதுவதற்கான ஒரே ஒலி நயத்துடன் கூடிய சொற்கள் மற்றும் மீட்டர்களின் தனித்துவமான அமைப்புகளைக் கொண்டுள்ளது. வேதங்களின் கவிதைகள் பல சம கால பகுதிகளாக பிரிப்பதன் மூலம் கொடுக்கப்பட்ட லயங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காயத்ரீ லயம் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், இனிமையாகவும் இருக்கிறது. இந்த லயத்தில் அமைக்கப்பட்ட பிரபலமான மந்திரம் காயத்ரீ மந்திரம். இது ஆழ்ந்த அர்த்தமுள்ள பிரார்த்தனையும் கூட:
பூ4ர்பு4வஹ் ஸ்வஹ த1த்1ஸவிது1ர்வரேண்யம் ப4கோ3 தே3வஸ்ய தீ4மஹி
தி4யோ யோ நஹ் ப்1ரசசோ1த3யாத்1 (ரிக்3 வேத3ம் 3.62.10)
'மூவுலகையும் ஒளிரச் செய்து, நம் வழிபாட்டுக்குத் தகுதியான இறைவனைத் தியானிக்கிறோம். அவர் எல்லா பாவங்களையும் நீக்குபவர் மற்றும் அறியாமையை அழிப்பவர். அவர் நமது புத்தியை சரியான திசையில் ஒளிரச் செய்வாராக.' காயத்ரி மந்திரம் இளைஞர்களுக்கான புனித நூல் (பூணூல்) விழாவின் ஒரு பகுதியாகும், மேலும் தினசரி சடங்குகளின் ஒரு பகுதியாகவும் ஓதப்படுகிறது. தேவி காயத்ரி, ருத்ர காயத்ரி, பிரம்ம காயத்ரி, பரம்ஹம்ஸ காயத்ரி மற்றும் பல காயத்ரி மந்திரங்களும் வேதங்களில் காணப்படுகின்றன.
மார்கழி (மார்க3ஶீர்ஷ்) என்பது இந்து நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இது ஆங்கில வருட நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வரும். இந்தியாவில் அந்த நேரத்தில் வெப்பநிலை சரியாக உள்ளது- அதிக வெப்பமோ அல்லது அதிக குளிரோ இல்லை. வயலில் உள்ள பயிர்கள் ஆண்டின் இந்த நேரத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. இந்த காரணங்களுக்காக, இது பெரும்பாலான மக்களின் விருப்பமான மாதமாகும்.
வசந்த காலம் பருவங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இது இயற்கை மகிழ்ச்சியுடன் உயிர்ப்புடன் வெடிப்பது போல் தோன்றும் நேரம். பல பண்டிகைகள் வசந்த காலத்தில் கொண்டாடப்படுகின்றன, அவை வளிமண்டலத்தில் நிறைந்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு, பருவங்களுக்கிடையில், வசந்தம் கடவுளின் செழுமையை வெளிப்படுத்துகிறது.