Bhagavad Gita: Chapter 10, Verse 7

ஏதா1ம் விபூ4தி1ம் யோக3ம் ச1 மம யோ வேத்1தி11த்1த்1வத1: |

ஸோ‌விக1ம்பே1ன யோகே3ன யுஜ்யதே1 நாத்1ர ஸந்ஶய: ||7||

ஏதாம்—--இவை; விபூதிம்--—மகிமைகளை; யோகம்--—தெய்வீக சக்திகளை; ச--—மற்றும்; மம—--என்; யஹ—--எவர்கள்; வேத்தி--—உணர்ந்வர்கள்; தத்வதஹ—--உண்மையில்; ஸஹ--—அவர்கள்; அவிகம்பேன—-உறுதியாக; யோகேன--—பக்தி யோகத்தில்; யுஜ்யதே—--ஐக்கியமாகிறார்கள்.; ந--—ஒருபொழுதும் இல்லை; அத்ர--—இங்கே; ஸந்ஶயஹ—--சந்தேகமும்

Translation

BG 10.7: என் மகிமைகளையும் தெய்வீக சக்திகளையும் உண்மையில் அறிந்தவர்கள் அசைக்க முடியாத பக்தி யோகத்தின் மூலம் என்னுடன் ஐக்கியமாகிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

Commentary

விபூ4தி1 என்ற சொல் பிரபஞ்சத்தில் வெளிப்படும் கடவுளின் பெரிய சக்திகளைக் குறிக்கிறது. யோக3ம் என்ற சொல் இந்த ஒளிரும் சக்திகளுடன் கடவுளின் தொடர்பைக் குறிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில், பரமாத்மாவின் மகத்துவத்தை உணர்ந்து, அவருடைய மகிமையைப் பற்றி உறுதியாக நம்பும்பொழுது, ​​​​அவரது பக்தியில் ஈடுபட நாம் இயல்பாகவே விரும்புகிறோம் என்று விளக்குகிறார்.

கடவுளின் மகத்துவத்தைப் பற்றிய அறிவு பக்தர்களின் அன்பை ஊட்டுகிறது, மற்றும் அவர்களின் பக்தியை மேம்படுத்துகிறது. பின்வரும் உதாரணம் வெளிப்படுத்துவது போல் அறிவுக்கும் அன்புக்கும் இடையே நேரடி உறவு உள்ளது. உங்கள் நண்பர் உங்களுக்கு ஒரு கருப்பு கூழாங்கல் போன்ற கல்லைக் காட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதன் முக்கியத்துவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அதனால், அதன் மீது உங்களுக்கு விருப்பமும் இல்லை. உங்கள் நண்பர் கூறுகிறார், 'இது ஒரு ஶாலிகிராம், மற்றும் துறவறம் ஏற்ற ஒரு புனிதமான தெய்வீக ஆளுமை இடமிருந்து நான் இதை பரிசாக பெற்றேன். ஒரு'ஶாலிகி3ராம்’ என்பது விஷ்ணுவின் பிரதிநிதியாக வணங்கப்படும் ஒரு சிறப்பு வகையான புதைபடிவக்கல் ஆகும். 'ஶாலிகிராமத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருந்தால், இந்த கல் 'ஶாலிகிராம்’ என்ற இந்த அறிவைப் பெறும்போது, ​​​​அதற்கான உங்கள் பாராட்டு அதிகரிக்கும். மேலும் உங்கள் நண்பர் 'இது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய துறவியான சுவாமி ராமானந்தரால் வழிபடப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கூறுகிறார். இந்த அறிவைக் கேட்கும் கணம், கல்லின் மீது உங்கள் மரியாதை அதிகமாகிறது. ஒவ்வொரு முறையும், அறிவுதான் கல் மீதான உங்கள் பயபக்தியை உயர்த்துகிறது. அதுபோலவே, கடவுளைப் பற்றிய சரியான அறிவு அவர் மீதுள்ள நம் பக்தியை அதிகரிக்கிறது. இவ்வாறாக, எல்லையற்ற பிரபஞ்சங்களின் அற்புதமான செயல்களை வெளிப்படுத்தும் கடவுளின் மகிமைகளை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர், இந்த அறிவில் நிலைத்திருப்பவர்கள், தளராத பக்தியின் மூலம் இயற்கையாகவே அவருடன் ஐக்கியமாகிறார்கள் என்று கூறுகிறார்.