Bhagavad Gita: Chapter 11, Verse 12

தி3வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப4வேத்3யுக31து3த்1தி2தா1 |

யதி3 பா4: ஸத்3ருஶீ ஸா ஸ்யாத்3பா4ஸஸ்த1ஸ்ய மஹாத்1மன: ||12||

திவி--—வானத்தில்; ஸூர்ய—--சூரியன்கள்; ஸஹஸ்ரஸ்ய--—ஆயிரம்; பவேத்--—இருந்தால்; யுகபத்--—ஒரே நேரத்தில்; உத்திதா---—உதித்து; யதி--—என்றால்; பாஹா--—திவ்யமான; ஸத்ருஶீ—-போன்ற; ஸா--—அது; ஸ்யாத்---இருக்கும்; பாஸஹ—-சிறப்பு; தஸ்ய--—அவைகளின்; மஹா-ஆத்மனஹ---—இணை இல்லாத சிறந்த இறைவனின்

Translation

BG 11.12: ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே நேரத்தில் வானத்தில் உதித்தாலும், அவைகள் அனைத்தின் ஒளியும் இறைவனின் திவ்யமான ஜொலிக்கும் வடிவத்திற்குச் சமமாகாது.

Commentary

ஸஞ்ஜயன் இப்பொழுது ப்ரபஞ்ச வடிவத்தின் பிரகாசத்தை விவரிக்கிறார். அதன் திகைப்பூட்டும் பிரகாசத்தைப் பற்றிய யோசனையை வழங்க, அவர் அதை மத்தியான வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சூரியன்களின் சூரிய ஒளியுடன் ஒப்பிடுகிறார். உண்மையில், கடவுளின் பிரகாசம் வரம்பற்றது; சூரியனின் பிரகாசத்தின் அடிப்படையில் அதை அளவிட முடியாது. இருப்பினும், விவரிப்பாளர்கள் பெரும்பாலும் அறியப்படாததை அறிந்ததை விரிவுபடுத்துவதன் மூலம் விவரிக்கிறார்கள். ஸஞ்ஜயனின் ஆயிரம் சூரியன்களின் உதாரணம் ப்ரபஞ்ச வடிவத்தின் சிறப்பிற்கு இணை இல்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியது