அனாதி3மத்4யான்த1மனன்த1வீர்ய
மனன்த1பா3ஹும் ஶஶிஸூர்யனேத்1ரம் |
ப1ஶ்யாமி த்1வாம் தீ3ப்த1ஹுதா1ஶவக்1த்1ரம்
ஸ்வதே1ஜஸா விஶ்வமித3ம் த1ப1ந்த1ம் ||19||
அனாதி-மத்ய-அந்தம்—--ஆரம்பம், நடுவு அல்லது முடிவு இல்லாமல்; அனந்த--—எல்லையற்ற; வீர்யம்--—சக்தி; அனந்த--—வரம்பற்ற; பாஹும்----கைகள்; ஶஶி--—சந்திரன்; ஸூர்ய--—சூரியன்; நேத்ரம்—--கண்கள்; பஶ்யாமி--—நான் பார்க்கிறேன்; த்வாம்--—உங்கள்; தீப்த--—சுடர்விடும்; ஹுதாஶ--—வெளிப்படுகிற; வக்த்ரம்--—உன் வாய்; ஸ்வ-தேஜஸா--—உன் பிரகாசத்தால்; விஶ்வம்--—ப்ரபஞ்சம்; இதம்--—இது; தபந்தம்--—வெப்பமயமான
Translation
BG 11.19: நீங்கள் ஆரம்பம், நடு அல்லது முடிவு இல்லாமல் இருக்கிறீர்கள்; உங்கள் சக்திக்கு எல்லை இல்லை. உங்கள் கரங்கள் எல்லையற்றவை; சூரியனும் சந்திரனும் உங்கள் கண்களைப் போன்றவர்கள்; மற்றும் நெருப்பு உங்கள் வாய் போன்றது. உங்கள் பிரகாசத்தால் நீங்கள் முழு படைப்பையும் சூடேற்றுவதை நான் காண்கிறேன்.
Commentary
பதினாறாவது பாடலில், அர்ஜுனன் இறைவனின் வடிவம் ஆரம்பம், நடு அல்லது முடிவு இல்லாதது என்று கூறியிருந்தார். மூன்று வசனங்களுக்குப் பிறகு அவரது உற்சாகத்தில் இதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார், ஒரு அறிக்கையை ஆச்சரியத்தில் மீண்டும் மீண்டும் கூறினால், இலக்கியக் குறைபாடாக கருதப்படாமல் அது அதிசயத்தின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளப்படும். .உதாரணமாக, ஒரு பாம்பை பார்த்தவுடன், ஒருவர் கத்தலாம், 'பார், ஒரு பாம்பு! ஒரு பாம்பு! ஒரு பாம்பு!’ அதேபோல அர்ஜுனன் வியப்புடன் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.