Bhagavad Gita: Chapter 11, Verse 20

த்3யாவாப்1ருதி2வ்யோரித3மன்த1ரம் ஹி வ்யாப்11ம் த்1வயைகே1ன தி3ஶஶ்ச1 ஸர்வா: |

த்3ருஷ்ட்1வாத்3பு41ம் ரூப1முக்3ரம் த1வேத3ம் லோகத்1ரயம் ப்1ரவ்யதி21ம் மஹாத்1மன் ||20||

த்யௌ-ஆ-பிருதிவ்யோஹோ---வானத்திற்கும் பூமிக்கும் இடையே; இதம்--—இந்த-; அந்தரம்—-- இடைவெளியில்; ஹி--—உண்மையில்; வ்யாப்தம்--—வியாபித்துள்ள; த்வயா—உங்களால்; ஏகேன—--தனியாக; திஶஹ--—திசைகள்; ச—--மற்றும்; ஸர்வாஹா-—அனைத்தும்; த்ருஷ்ட்வா--—கண்டு; அத்பூதம்—--அதிசயமான; ரூபம்--— வடிவத்தைக்; உக்ரம்—--பயங்கரமான; தவ--—உங்களுடைய; இதம்--—இது; லோக--—உலகங்கள்; த்ரயம்—--மூன்றும்; ப்ரவ்யதிதம்--—நடுங்குவதை; மஹாத்மன்---எல்லா உயிரினங்களிலும் சிறந்தவரே.;

Translation

BG 11.20: வானத்துக்கும் பூமிக்கும் எல்லாத் திசைகளுக்கும் இடைப்பட்ட இடம் உங்களால் மட்டுமே வியாபித்திருக்கிறது. உங்களுடைய அற்புதமான மற்றும் பயங்கரமான வடிவத்தைக் கண்டு, மூன்று உலகங்களும் பயத்தில் நடுங்குவதை நான் காண்கிறேன், ஓ எல்லா உயிரினங்களிலும் சிறந்தவரே.

Commentary

அர்ஜுனன் கூறுகிறார், 'ஓ எங்கும் வியாபித்துள்ள இறைவனே, நீங்கள் எல்லா திசைகளிலும், முழு பூமியிலும், மேலே உள்ள ஆகாயத்திலும், இடையிலுள்ள இடத்திலும் வியாபித்து இருக்கிறீர்கள். எல்லா உயிர்களும் உங்களை கண்டு பயந்து நடுங்குகின்றன.' அவர்கள் பார்க்காத பொழுது ப்ரபஞ்ச வடிவத்தின் முன் ஏன் மூன்று உலகங்களும் நடுங்க வேண்டும்? அனைவரும் கடவுளின் சட்டங்களுக்கு பயந்து செயல்படுகிறார்கள் என்பதை அர்ஜுனன் உணர்த்துகிறார். கட்டளைகள் உள்ளன, அவரால் நியமிக்கப்பட்ட கட்டளைகளை அனைவரும் அடிபணிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

1ரம ப்1ரதா4ன பி3ஸ்வ க1ரி ராகா2, ஜோ ஜஸ க1ரை ஸோ தஸ ஃப2ல சா1கா2

(ராமாயணம்)

‘உலகம் கர்மாவின் சட்டத்தின்படி செயல்படுகிறது. நாம் எதைச் செய்தாலும், கர்ம பலன்களை அறுவடை செய்ய வேண்டும்.’ செயல்களின் விதியைப் போலவே, எண்ணற்ற சட்டங்கள் உள்ளன. பல விஞ்ஞானிகள் இயற்கையின் இயற்பியல் விதிகளைக் கண்டுபிடித்து, கோட்பாடாகக் கொண்டு வாழ்கிறார்கள், ஆனால் அவர்களால் ஒருபொழுதும் சட்டங்களை உருவாக்க முடியாது. கடவுள் மிக உயர்ந்த சட்டமியற்றுபவர், ஒவ்வொருவரும் அவருடைய சட்டங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள்.