Bhagavad Gita: Chapter 11, Verse 33

1ஸ்மாத்1த்1வமுத்1தி1ஷ்ட2 யஶோ லப4ஸ்வ ஜித்1வா ஶத்1ரூன்பு4ங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்34ம் |

மயைவைதே1 நிஹதா1: பூ1ர்வமேவ நிமித்11மாத்1ரம் ப4வ ஸவ்யஸாசி1ன் ||33||

தஸ்மாத்--—எனவே; த்வம்--—நீ; உத்திஷ்ட--— எழுந்திரு; யஶஹ-—--புகழ்; லபஸ்வ—--பெருவாயாக; ஜித்வா--— வெல்வதன் மூலம்; ஶத்ரூன்--—எதிரிகளை; புங்க்ஷ்வ—--அனுபவி; ராஜ்யம்--—ராஜ்யத்தை; ஸம்ரித்தம்--—வளமான; மயா—--என்னால்; ஏவ--—உண்மையில்; ஏதே--—இவர்கள்; நிஹதாஹா--—கொல்லப்பட்டவர்கள்; பூர்வம்--—ஏற்கனவே; ஏவ நிமித்த-மாத்ரம்—--நீ ஒரு கருவி மட்டுமே; பவ--—ஆகுவாய்; ஸவ்ய—ஸாசின்--—அர்ஜுனா, இரு கைகளாலும் அம்பு எய்யக்கூடியவனே

Translation

BG 11.33: எனவே எழுந்து போராடி புகழ் பெருவாயாக. உன் எதிரிகளை வெல்வதன் மூலம் வளமான ராஜ்யத்தை அனுபவிக்கவும். இந்த வீரர்கள் அனைவரும் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டுள்ளனர். பெரிய வில்லாளியே! என் வேலையை முடிக்க நீ ஒரு கருவி மட்டுமே.

Commentary

கௌரவர்கள் அழிய வேண்டும் என்றும், ஹஸ்தினாபூர் ராஜ்ஜியம் பாண்டவர்களால் தர்ம விதிகளின்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அநியாயக்காரர்களை அழிப்பதையும், நீதிமான்களின் வெற்றியையும் போரின் விளைவாக அவர் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார். உலக நலனுக்கான அவரது மகத்தான திட்டத்தை எந்த வகையிலும் தடுக்க முடியாது. அவர் இப்பொழுது அர்ஜுனிடம் நிமித்1மாத்1ரம் அல்லது அவரது வேலைக்கான கருவியாக இருக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை அர்ஜுனனிடம் தெரிவிக்கிறார். கடவுளின் பணிக்கு மனிதனின் உதவி தேவையில்லை, ஆனால் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடுவதன் மூலம் மனிதர்கள் நித்திய நல்வாழ்வை அடைகிறார்கள். இறைவனின் திருப்திக்காக எதையாவது சாதிக்க நமக்கு வரும் வாய்ப்புகள் மிகவும் சிறப்பான ஆசீர்வாதமாகும். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாம் அவருடைய சிறப்பு அருளைப் பெறுகிறோம் மற்றும் கடவுளின் ஊழியராக நிரந்தர நிலையை அடைகிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனன் தனது கருணையால் வில்வித்தை கலையில் பெற்ற அசாதாரண திறமைகளை நினைவுபடுத்துவதன் மூலம் அர்ஜுனனை தனது கருவியாக இருக்க ஊக்குவிக்கிறார். எனவே, அர்ஜுனன் வியக்கத்தக்க வகையில் இரு கைகளாலும் அம்புகளை எய்த வல்லவர் என்பதால்,' நிபுணரான வில்லாளி' என்று பொருள்படும் ஸவ்யஸாசி1ன் ’என்று அவரை அழைக்கிறார் .