மன்யஸே யதி3 த1ச்1ச2க்1யம் மயா த்3ரஷ்டு1மிதி1 ப்1ரபோ4 |
யோகே3ஶ்வர த1தோ1 மே த்1வம் த3ர்ஶயாத்1மானமவ்யயம் ||4||
மன்யஸே--—நீங்கள் நினைக்கிறீர்கள்; யதி—--என்றால்; தத்--—அது; ஶக்யம்—--சாத்தியம்; மயா--—என்னால்; த்ரஷ்டும்--—காண்பாய்; இதி--—இவ்வாறு; ப்ரபோ--—இறைவன்; யோக-ஈஸ்வர---அனைத்து மாய சக்திகளின் இறைவனே; ததஹ--—பின்னர்;மே--—எனக்கு; த்வம்--—நீங்கள்; தர்ஶய--—வெளிப்படுத்துங்கள்; ஆத்மானம்--- உங்கள்; அவ்யயம்—--அழியாததை
Translation
BG 11.4: அதைக் காண்பதற்கு நான் வலிமையானவன் என்று நீங்கள் நினைத்தால், அந்த அழிவற்ற ப்ரபஞ்ச வடிவத்தை எனக்கு காட்டுங்கள்.
Commentary
முந்தைய வசனத்தில், அர்ஜுனன் உன்னதமான தெய்வீக ஆளுமையின் ப்ரபஞ்ச வடிவத்தைக் காண விரும்பினார். இப்பொழுது அவருடைய ஒப்புதலைக் கோருகிறார். ‘ஓ யோகே3ஸ்வரா, நான் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். என்னை அதற்குத் தகுதியானவனாக நீங்கள் கருதினால், உங்களது அருளால், தயவுசெய்து உங்களது ப்ரபஞ்ச வடிவத்தை எனக்கு வெளிப்படுத்தி, உங்களது அனைத்து மாய சக்திகளை (யோக-ஐஸ்வர்யத்தை) எனக்கு காட்டுங்கள்.' யோகம் என்பது தனிப்பட்ட ஆன்மாவை ஒப்புயர்வற்ற ஆத்மாவுடன் இணைக்கும் விஞ்ஞானம், இந்த அறிவியலைப் பயிற்சி செய்பவர்கள் யோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். யோகே3ஷ்வரர் என்ற சொல்லுக்கு ‘அனைத்து யோகிகளின் இறைவன்’ என்றும் பொருள். எல்லா யோகிகளையும் அடையும் பொருள் ஒப்புயர்வற்ற இறைவனாக இருப்பதால், ஸ்ரீ கிருஷ்ணர் அனைத்து யோகிகளுக்கும் இறைவனாக இருக்கிறார். முன்னதாக, 10.17 வசனத்தில், அர்ஜுனன் இறைவனை 'யோகி' என்று அழைத்தார், 'யோகங்களின் இறைவன் ' என்று மறைமுகமாகப் பேசினார். ஆனால், கிருஷ்ணரின் மீது அதிகரித்த பக்தியின் காரணமாக இப்பொழுது அதை ‘யோகேஷ்வரர்’ என்று மாற்றியுள்ளார்.