Bhagavad Gita: Chapter 11, Verse 40

நம:பு1ரஸ்தா132 ப்1ருஷ்ட21ஸ்தே1 நமோ‌ஸ்து1 தே1 ஸர்வத1 ஏவ ஸர்வ |

அனன்த1வீர்யாமித1விக்1ரமஸ்த்1வம் ஸர்வம் ஸமாப்1நோஷி த1தோ1‌ஸி ஸர்வ: ||40||

நமஹ---வணக்கங்கள்; புரஸ்தாத்—--முன்பக்கத்திலிருந்து; அத--—மற்றும்; ப்ரிஷ்டதஹ---பின்பக்கத்திலிருந்து; தே—--உங்களுக்கு; நமஹ அஸ்து--—நான் எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்; தே—--உங்களுக்கு; ஸர்வதஹ--—எல்லா பக்கங்களிலிருந்தும்; ஏவ—--உண்மையில்; ஸர்வ--—அனைத்து; அனந்த-வீர்ய--—எல்லையற்ற சக்தி; அமித-விக்ரமஹ---எல்லையற்ற வீரம் மற்றும் வலிமை; த்வம்--—நீங்கள்; ஸர்வம்—--அனைத்தையும்; ஸமாப்நோஷி--—வியாபித்து; ததஹ—--இவ்வாறு; அஸி--—(நீங்கள்) ஸர்வஹ--—அனைத்தும்

Translation

BG 11.40: எல்லையற்ற சக்தியின் இறைவனே, உங்களுக்கு முன்னும் பின்னும், உண்மையில் எல்லா பக்கங்களிலிருந்தும் எனது வணக்கங்கள்! நீங்கள் எல்லையற்ற வீரம் மற்றும் வலிமை மற்றும் அனைத்தையும் வியாபித்து இருக்கிறீர்கள், இதனால், அனைத்தும் நீங்களே.

Commentary

அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை அனந்த-வீர்ய (எல்லையற்ற பலம் கொண்டவர்) மற்றும் அனந்தவிக்ரமஹ- (அளவிடமுடியாத சக்தி வாய்ந்தவர்) என்று அறிவித்து அவரை மகிமைப்படுத்துவதைத் தொடர்கிறார். பிரமிப்புடன், அவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் நமஸ்காரம் செய்கிறார், மீண்டும் மீண்டும் நமஹ! நமஹ! என்று உணர்ச்சி மீதூரக் கூறுகிறார்! (நான் மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்).