த1ஸ்மாத்1ப்1ரணம்ய ப்1ரணிதா4ய கா1யம்
ப்1ரஸாத3யே த்1வாமஹமீஶமீட்3யம் |
பி1தே1வ பு1த்1ரஸ்ய ஸகே2வ ஸக்2யு:
ப்1ரிய:ப்1ரியாயார்ஹஸி தே3வ ஸோடு4ம் ||44||
தஸ்மாத்--—எனவே; ப்ரணம்ய--—பணிந்து; ப்ரணிதாய—--நமஸ்காரம் செய்து; காயம்—--உடலால்; ப்ரஸாதயே--—அருளை வேண்டுகிறேன்; த்வாம்--—உங்களை; அஹம்--—நான்; ஈஶம்--—இறைவனை; ஈட்யம்--—அபிமானத்திற்குரியவரான; பிதா—தந்தை; இவ—--என; புத்ரஸ்ய-—ஒரு மகனை; சகா-—-நண்பன்; இவ--—என; சக்யுஹு--—ஒரு நண்பனை; ப்ரியஹ---ஒரு பிரியமானவர்; ப்ரியாயஹ---பிரியமானவரை; அர்ஹஸி--—நீங்கள் வேண்டும்; தேவ--—இறைவன்; ஸோடும்----மன்னியுங்கள்
Translation
BG 11.44: எனவே, ஓ போற்றுதலுக்குரிய இறைவனே , ஆழ்ந்து வணங்கி, உம் முன் பணிந்து, உமது அருளுக்காக உம்மை மன்றாடுகிறேன். ஒரு தகப்பன் தன் மகனைப் பொறுத்துக் கொள்வது போலவும், நண்பன் தன் நண்பனை மன்னிப்பது போலவும், பிரியமானவர் பிரியமானவரை மன்னிப்பது போலவும், என் குற்றங்களுக்காக என்னை மன்னியுங்கள்.
Commentary
அவரது நடத்தை கடவுளை மீறிய செயல் என்று கருதி, அர்ஜுனன் மன்னிப்பு கேட்கிறார் . ஸ்ரீ கிருஷ்ணருடன் பழகும் பொழுது - விளையாடி, உணவு உண்டு, கேலி செய்து, உரையாடி, மற்றும் ஓய்வெடுக்கும் பொழுது - அர்ஜுனன் ஒப்புயர்வற்ற ஸர்வவல்லமையுள்ளவருக்கு உரிய மரியாதையைக் காட்டவில்லை. இருப்பினும்,அதிக அளவிலான நெருக்கத்தின் காரணமாக, மற்ற நபருடன் பகிர்ந்து கொள்ளப்படும் , மீறல்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. எந்த ஒரு அரசு அதிகாரிக்கும் ஒரு நாட்டின் அதிபருடன் கேலி செய்யும் சலுகை கிடையாது. இன்னும், ஜனாதிபதியின் தனிப்பட்ட நண்பர், அவரை கிண்டல் செய்கிறார், அவருடன் கேலி செய்கிறார், மேலும் அவரைக் கூச்சல் இடுகிறார். ஜனாதிபதி அதைப் பொருட்படுத்துவதில்லை, மாறாக, அவர் தனது துணை அதிகாரிகளிடமிருந்து பெறும் மரியாதையை விட நெருங்கிய நண்பரின் நகைச்சுவையை மதிக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு இராணுவ ஜெனரலுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள், ஆனால் அவர்கள் அவரது பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் அவரது மனைவியைப் போல அவரது இதயத்திற்கு அன்பானவர்கள் அல்ல. அதேபோல, ஸ்ரீ கிருஷ்ணருடன் அர்ஜுனனின் அந்தரங்கமான தருணங்கள் மீறல்கள் அல்ல; அவை அவரது அன்பான பக்தியின் ஆழத்தின் வெளிப்பாடுகள், நண்பனாக இருக்கும் உணர்வால் வளர்க்கப்பட்டவை. ஒரு பக்தன் இயல்பிலேயே அடக்கமானவன். இதன் விளைவாக, பணிவு காரணமாக, அவர் தவறு செய்திருக்கலாம் என்று உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார்.