Bhagavad Gita: Chapter 11, Verse 46

கி1ரீடி1னம் க3தி3னம் ச1க்1ரஹஸ்த1- மிச்1சா2மி த்1வாம் த்3ரஷ்டு1மஹம் த1தை2வ |

தே1னைவ ரூபே1ண ச1து1ர்பு4ஜேன ஸஹஸ்ரபா3ஹோ ப4வ விஶ்வமூர்தே1 ||46||

கிரீடினம்--—கிரீடம் அணிந்து; கதினம்—--கதை ஏந்தி; சக்ர-ஹஸ்தம்—--கையில் சக்கரத்துடன்; இச்சாமி—--நான் விரும்புகிறேன்; த்வாம்--—உங்களை; த்ரஷ்டும்--—பார்க்க; அஹம்--—நான்; ததா ஏவ--—அதேபோல்; தேன ஏவ—--அதில்; ரூபேண—--வடிவத்துடன்; சதுஹு-பூஜேன--—நான்கு கைகளுடன்; ஸ்ஹஸ்ர-பாஹோ--—ஆயிரம் கைகளையுடையவரே; பவ--—இருங்கள்; விஶ்வமூர்தே—--உலகளாவிய வடிவமே

Translation

BG 11.46: ஓ ஆயிரம் கரங்களை உடையவரே, நீங்கள் அனைத்து படைப்பின் உருவமாக இருந்தாலும், உங்களுடைய நான்கு கரங்களுடனும், கதை மற்றும் சக்கரத்தை ஏந்திய, கிரீடத்தை அணிந்தவராக உங்களை காண விரும்புகிறேன்.

Commentary

சிறப்பு அருளால் அர்ஜுனனுக்கு மிகவும் அரிதான யாராலும் பார்க்க முடியாத ஸ்ரீ கிருஷ்ணரின் ப்ரபஞ்ச வடிவம் காட்டப்பட்டுள்ளது. அது யாராலும் பார்க்க முடியாதது. வரம்பற்ற ப்ரபஞ்சங்களை உள்ளடக்கிய தெய்வீக ஆளுமையான ஸ்ரீ கிருஷ்ணர் தனது நண்பரை விட மேலானவர் என்பதை அர்ஜுனன் உணர்ந்துள்ளார். இருப்பினும், அவர் எல்லையற்ற ஐசுவரியங்களால் ஈர்க்கப்படவில்லை. மற்றும் ஸர்வவல்லமையுள்ள கடவுளின் ஐஷ்வர்ய பக்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, அவருடன் ஒரு நண்பரைப் போல பழக விரும்பும் அர்ஜுனன் அந்த ஸர்வவல்லமையுள்ள இறைவனை மனித வடிவில் பார்க்க விரும்புகிறார். கிருஷ்ணரை 'ஆயிரம் கைகள் உடையவர்' என்று பொருள்படும் சஹஸ்ர-3ஹோ என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். குறிப்பாக, அர்ஜுனன், ச1து1ர்-பூ4ஜ அல்லது நான்கு கைகள் உடைய ஸ்ரீ கிருஷ்ணரின் வடிவத்தை காண்பதற்கு கோருகிறார்.

நான்கு கரங்களுடன், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றொரு சந்தர்ப்பத்திலும் அர்ஜுனன் முன் தோன்றினார். திரௌபதியின் ஐந்து மகன்களின் கொலையாளியான அஸ்வத்தாமாவை அர்ஜுனன் கட்டி இழுத்து அவர் முன் கொண்டு வந்தபொழுது, ​​அந்த நேரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தனது நான்கு கரங்களுடன் தன்னை வெளிப்படுத்தினார்.

நிஶம்ய பீ 4ம-க3தி 31ம் தி3ரௌபத்4யாஶ் ச11து1ர்-பு4ஜஹ

ஆலோக்1ய வத3னம் ஸக்2யுர் இத3ம் ஆஹ ஹஸன்நிவ

(ஸ்ரீமத்3 பா43வத1ம் 1.7.52)

‘நான்கு கரங்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணர், பீமன், திரௌபதி மற்றும் பிறரின் கூற்றுகளைக் கேட்டார். பின்னர் அவர் தனது அன்பான நண்பரான அர்ஜுனனை பார்த்து புன்னகைக்கத் தொடங்கினார்.’ ஸ்ரீ கிருஷ்ணரை தனது நான்கு கரங்களுடன் காட்சியளிக்குமாறு கேட்டுக்கொள்வதன் மூலம், அர்ஜுனன் இறைவனின் நான்கு கரங்கள் உடைய வடிவம் அவருடைய இரண்டு கைகள் உடைய வடிவத்திலிருந்து மாறுபட்டது என்பதை உறுதிப்படுத்துகிறார்.