ஶ்ரீப4க3வானுவாச1 |
மயா ப்1ரஸன்னேன த1வார்ஜுனேத3ம்
ரூப1ம் ப1ரம் த3ர்ஶித1மாத்1மயோகா3த்1 |
தே1ஜோமயம் விஶ்வமனன்த1மாத்3யம்
யன்மே த்1வத3ன்யேன ந த்3ருஷ்ட1பூ1ர்வம் ||47||
ஶ்ரீ-பகவான் உவாச—இறைவன் கூறினார்; மயா--—என்னால்; ப்ரஸன்னேன—--மகிழ்ச்சியடைந்து; தவ--— உன்னிடம்; அர்ஜுன--—அர்ஜுனா; இதம்—--இந்த; ரூபம்—--வடிவம்; பரம்—--தெய்வீக; தர்ஶிதம்—--காட்டப்பட்டது; ஆத்ம-யோகாத்—-- எனது யோகமாய சக்தியால்; தேஜஹ-மயம்—--பிரகாசமானதும்; விஸ்வம்—--ப்ரபஞ்ச; அனந்தம்--— வரம்பற்றதும்; ஆத்யம்--— தொடக்கக்காலத்திற்கு உரிய; யத்--—எது;மே---என்; த்வத் அந்யேன—--உன்னைத் தவிர; ந த்ருஷ்ட-பூர்வம்—--யாரும் எப்பொழுதும் பார்த்ததில்லை
Translation
BG 11.47: பகவான் கூறினார்: அர்ஜுனா, உன்னிடம் மகிழ்ச்சியடைந்து, எது யோகமாய சக்தியால், எனது பிரகாசமானதும், வரம்பற்றதும், பழமையானதுமான ப்ரபஞ்ச தரிசனம் உனக்குக் காட்டப்பட்டது. —--உன்னைத் தவிர இதை யாரும் பார்த்ததில்லை.
Commentary
அர்ஜுனன் பயம் உற்று ஸ்ரீகிருஷ்ணரின் ப்ரபஞ்ச வடிவத்தை தன்னிடம் இருந்து மறைக்க மன்றாடியதால், ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது பயப்படத் தேவையில்லை என்று விளக்கி அர்ஜுனனை சமாதானப்படுத்துகிறார். அவர் அர்ஜுனிடம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால் தனது ப்ரபஞ்ச வடிவத்தின் தரிசனத்தை தண்டனையாக அன்றி அவரது அருளால் வழங்கினார். ப்ரபஞ்ச வடிவத்தைப் பார்ப்பது எவ்வளவு அரிதானது என்பதை வலியுறுத்த, அவர் மிகையுணர்வை பேச்சின் உருவமாகப் பயன்படுத்தி அர்ஜுனன் தான் அந்த வடிவத்தை முதலில் பார்ப்பவர் என்று கூறுகிறார். துரியோதனன் மற்றும் யசோதா ஆகியோருக்கும் உலகளாவிய வடிவத்தின் ஒரு பார்வை கொடுக்கப்பட்டாலும், அது இந்த தீவிரம், ஆழம் மற்றும் அளவு கூடியதாக இருக்கவில்லை.
ஸ்ரீ கிருஷ்ணர் தனது யோகமாய சக்தியின் உதவியால் அர்ஜுனுக்கு இந்த தெய்வீக தரிசனத்தை வழங்கினார். இதுவே கடவுளின் தெய்வீக சக்தி வாய்ந்த அளவில்லாத ஆற்றல். 4.6 மற்றும் 7.25 வசனங்கள் போன்ற பல இடங்களில் அவர் அதைக் குறிப்பிட்டுள்ளார். இந்த யோகமாய ஆற்றலால்தான் கடவுளால் - க1ர்து1மக1ர்து1ம் அன்யதா2 க1ர்து1ம் ஸமர்த2ஹ. ‘ஒரே நேரத்தில் சாத்தியம், சாத்தியமற்றது மற்றும் முரண்பாடானதைச் செய்ய முடியும்.' கடவுளின் இந்த தெய்வீக சக்தி தனிப்பட்ட வடிவத்தில் தெய்வீக தாய், ராதை, துர்கா, லட்சுமி, காளி, சீதா, பார்வதி மற்றும் பல வடிவங்களில் வெளிப்பட்டு இந்து சம்பிரதாயத்தில் வழிபடப்படுகிறது..