Bhagavad Gita: Chapter 11, Verse 50

ஸஞ்ஜய உவாச1 |

இத்1யர்ஜுனம் வாஸுதே3வஸ்த1தோ2க்1த்1வா ஸ்வக1ம் ரூப1ம் த3ர்ஶயாமாஸ பூ4ய: |

ஆஶ்வாஸயாமாஸ ச1 பீ41மேனம் பூ4த்1வா பு1ன: ஸௌம்யவபு1ர்மஹாத்1மா ||50||

ஸஞ்ஜய உவாச--—ஸஞ்ஜயன் கூறினார்; இதி--—இவ்வாறு; அர்ஜுனம்—--அர்ஜுனனிடம்; வாஸுதேவஹ—--வஸுதேவனின் மகன் கிருஷ்ணன்; ததா—--அந்த வகையில்; உக்த்வா--—பேசிவிட்டு; ஸ்வகம்--—அவருடைய தனிப்பட்ட; ரூபம்—--வடிவத்தை; தர்ஷயம் ஆஸ--—காண்பித்தார்; பூயஹ--—மீண்டும்; ஆஶ்வாஸயம் ஆஸ--—ஆறுதல்படுத்தி; ச—--மற்றும்; பீதம்--—பயந்து; ஏனம்—--அவரை; பூத்வா—--ஆகி; புனஹ—--மீண்டும்; சௌம்ய-வபுஹு-----மென்மையான (இரண்டு கைகள்) வடிவம்; மஹா-ஆத்மா---—இரக்கமுள்ள

Translation

BG 11.50: ஸஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு பேசிய வஸுதேவரின் இரக்கமுள்ள மகன் தனது தனிப்பட்ட (நான்கு கைகள்) வடிவத்தை மீண்டும் காட்டினார். பின்னர், அவர் தனது மென்மையான (இரண்டு கைகள்) வடிவத்தை எடுத்துக்கொண்டு பயம் உற்று இருந்த அர்ஜுனை மேலும் ஆறுதல்படுத்தினார்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் தனது ப்ரபஞ்ச வடிவத்தின் தரிசனத்தை மறைத்து, அர்ஜுனன் முன் தனது நான்கு கரங்களுடன் காட்சியளித்தார், இது தங்க ˈகிரீடம், கதை, சக்கரம் மற்றும் தாமரை மலரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது கம்பீரம், நிறைபேரறிவு, ஸர்வ வல்லமை போன்ற அனைத்து தெய்வீக ஐசுவரியங்களின் களஞ்சியமாகும். ஸ்ரீ கிருஷ்ணரின் நான்கு கரங்கள் கொண்ட வடிவம், ஒரு ராஜ்யத்தின் குடிமக்கள் தங்கள் அரசனை நோக்கும்பொழுது உண்டாகும் பிரமிப்பு மற்றும் பயபக்தி ஆகிய உணர்வுகளைத் தூண்டுகிறது. இருப்பினும், அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு நண்பன் ஆவார், மேலும் பிரமிப்பு மற்றும் மரியாதை உணர்வுகளால் மேலோங்கிய பக்தி அவரை எப்பொழுதும் திருப்திப்படுத்தாது. அவர் ஸ்ரீ கிருஷ்ணருடன் சாப்பிட்டு விளையாடி ரகசியங்களை கூறி அவருடன் தனிப்பட்ட தருணங்களை அன்பாக பகிர்ந்து கொண்டவர் . ஐஷ்வர்ய பக்தியை விட (கடவுள் தொலைதூரத்தில் இருக்கும் மற்றும் ஸர்வ வல்லமையுள்ள இறைவனாகப் போற்றப்படும் பக்தி) ஸக்ய மனநிலையை ஆதாரமாகக் கொண்ட பக்தி (கடவுளை தனிப் பட்ட நண்பராகக் காணும் பக்தி) அளவற்ற இனிமையானது. எனவே, அர்ஜுனனின் பக்தி உணர்வுக்கு இணங்க, ஸ்ரீ கிருஷ்ணர் இறுதியாக தனது நான்கு கரங்களை மறைத்து தனது அசல் இரு கை வடிவமாக மாற்றினார்.

பிருந்தாவன காட்டில் ஒருமுறை, ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களுடன் பொழுது போக்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது, ​​திடீரென அவர்கள் நடுவிலிருந்து மறைந்தார். அவர் திரும்பி வருமாறு கோபிகைகள் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களைக் கேட்டு, அவர் மீண்டும் தனது நான்கு கரங்களுடன் வெளிப்பட்டார். கோபியர்கள் அவரை மகா விஷ்ணுவாக எண்ணி, அதற்கேற்பத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர். ஆனால் அவருடன் மேலும் நேரத்தை செலவிட அவர்கள் ஈர்க்கப்படாமல் அங்கிருந்து நகர்ந்தனர். ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணரைத் தங்கள் ஆத்ம-பிரியராகக் காணும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது, மேலும் அவருடைய இந்த விஷ்ணுவின் வடிவம் அவர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், ராதா ராணி காட்சி அளித்தபொழுது அவரது அன்பில் மூழ்கி உணர்ச்சிவசப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் தனது நான்கு கரங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் அவரது இரண்டு கைகளும் தானாகவே மறைந்து விட்டன. இந்த வசனத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் தனது மிகவும் கவர்ச்சிகரமான இரு கரங்களுடன் திரும்பினார்.