ஸஞ்ஜய உவாச1 |
ஏவமுக்1த்1வா த1தோ1 ராஜன்மஹாயோகே3ஶ்வரோ ஹரி: |
த3ர்ஶயாமாஸ பா1ர்தா2ய ப1ரமம் ரூப1மைஶ்வரம் ||9||
ஸஞ்ஜய உவாச —ஸஞ்ஜயன் கூறினார்; ஏவம்--—இவ்வாறு; உக்த்வா—--பேசிவிட்டு; ததஹ----பின்னர்; ராஜன்--—ராஜா; மஹா-யோக-ஈஸ்வரஹ----யோகத்தின் ஒப்புயர்வற்ற இறைவன்; ஹரிஹி---ஸ்ரீ கிருஷ்ணர்; தர்ஶயாம் ஆஸ—--காண்பித்தார்; பார்தாய----அர்ஜுனனுக்காக; பரமம்—--தெய்வீக; ரூபம்--ஐஸ்வரம்---செழுமையான வடிவத்தை
Translation
BG 11.9: ஸஞ்ஜயன் கூறினார்: ஓ மன்னரே, இவ்வாறு பேசிவிட்டு, யோகத்தின் பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணர், தனது தெய்வீக மற்றும் செழுமையான வடிவத்தை அர்ஜுனனுக்கு காட்டினார்.
Commentary
அர்ஜுனன் இந்த அத்தியாயத்தின் நான்காவது சுலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை யோகேஷ்வர் என்று அழைத்தார். இப்பொழுது அவரை 'மஹா' என்ற பெயரடை சேர்த்து அனைத்து யோகிகளுக்கும் இறைவன் என்று அழைக்கிறார். ஸஞ்ஜயன் தனது குரு வேத வியாஸரிடம் இருந்து தொலைதூரப் பார்வையைப் பெற்றிருந்ததால் அர்ஜுனனைப் போலவே அவரும் கிருஷ்ணரின் ப்ரபஞ்ச வடிவத்தைக் கண்டார். அடுத்த நான்கு வசனங்களில், அர்ஜுனன் பார்த்ததை ஸஞ்ஜயன் திருதராஷ்டிரர் இடம் விவரிக்கிறார். ஐஷ்வர்யம் என்ற சொல்லுக்கு 'செழுமை' என்று பொருள். கடவுளின் ப்ரபஞ்ச வடிவம் அவரது செல்வச் செழிப்புகளின் வெளிப்பாட்டுடன் நிரம்பியுள்ளது, மேலும் அது பார்ப்பவர்களுக்கு பயம், பிரமிப்பு மற்றும் பயபக்தியை ஏற்படுத்துகிறது.