Bhagavad Gita: Chapter 12, Verse 10

அப்4யாஸே‌ப்4யஸமர்தோ2‌ஸி மத்11ர்மப1ரமோ ப4வ |

மத3ர்22மபி11ர்மாணி கு1ர்வன்ஸித்3தி4மவாப்1ஸ்யஸி ||10||

அப்யாஸே--—பயிற்சியில்; அபி--—ஆனால்; அஸமர்தஹ--—முடியாவிட்டால்; அஸி----உன்னால்; மத்-கர்ம பரமஹ--எனக்காக பக்தியுடன் சேவை செய்வதால்; பவ—இரு; மத்-அர்த்தம்—எனக்காக; அபி—மேலும்; கர்மாணி—வேலை; குர்வன்—செய்தவாறே; ஸித்திம்--—பூரண நிலையை; அவாப்ஸ்யஸி---அடைவாய்

Translation

BG 12.10: பக்தியுடன் என்னை நினைவு செய்வதை உன்னால் பயிற்சி செய்ய முடியாவிட்டால், எனக்காக உழைக்க முயற்சி செய். இவ்வாறு, எனக்கு பக்தியுடன் சேவை செய்வதால், நீ பூரண நிலையை அடைவாய்.

Commentary

கடவுளை நினைவுகூறுவதற்கு பயிற்சி செய்வதற்கான அறிவுறுத்தல் பெரும்பாலும் பரிந்துரைப்பதற்கு எளிதான ஆனால் நிறைவேற்றுவதற்கு கடினமான ஒன்று, மனம் இயற்கையாகவே உலகின் ஜடப் பொருள்களை நோக்கி ஓடுகிறது, அதே சமயம் கடவுளை நோக்கி அதை எடுத்துச் செல்ல நனவான மற்றும் உறுதியான முயற்சி தேவைப்படுகிறது. நாம் கடவுளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலைக் கேட்கலாம், அதைச் செயல்படுத்த நாம் விரும்பலாம், ஆனால் நாம் நம் வேலையில் மூழ்கும்போது, ​​கடவுள் மனதை விட்டு நழுவுகிறார். எனவே, நாளின் எல்லா நேரங்களிலும் இறைவனை நினைவு கூற்வதில் சிரமம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் பதிலளிக்கிறார்.

கடவுளை எப்போதும் நினைவு கூற முடியாதவர்கள், அவருக்காக எளிமையாக வேலை செய்ய பழக ​​வேண்டும். தாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும், 9.27 மற்றும் 9.28 வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி, இறைவனின் திருப்திக்காகவே செய்கிறோம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையான நேரம் குடும்பத்தை பராமரிப்பதில் செல்கிறது. ஆனால் அந்த வேலையை செய்யும் பொழுது உள்ளுணர்வை மாற்றவேண்டும். அவர்களுக்கான உலகப் பற்றுதலால் அதைச் செய்வதற்குப் பதிலாக, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் கடவுளின் மகிழ்ச்சிக்காக அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒருவருக்கு உள்ளது என்று உணர வேண்டும், ஒருவர் தனது வாழ்வாதாரத்தை தொடர வேண்டும், ஆனால் ஒருவர் வேலை செய்யும் நனவில் மாற்றத்தை செய்ய முடியும். பொருள் இன்பத்திற்காகப் பணம் சம்பாதிப்பதாக எண்ணுவதற்குப் பதிலாக, ‘எனது குடும்பத்தினரை பக்தியில் ஈடுபடுவதற்கு அந்தச் சம்பாத்தியத்தைக் கொண்டு எனது குடும்பத்தையும் என்னையும் பராமரிக்க விரும்புகிறேன். என்னால் எதைச் சேமிக்க முடியுமோ அதைக் கடவுளின் சேவையில் தானம் செய்வேன்.’ அதுபோலவே, உண்ணுதல், உறங்குதல், குளித்தல் போன்ற உடல் செயல்பாடுகளைக் கைவிட முடியாது. ஆனால் இங்கே மீண்டும், நாம் தெய்வீக உணர்வை வளர்த்துக் கொள்ளலாம், 'நான் என் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் நான் கடவுளுக்கு சேவை செய்ய முடியும். அதனால், அதன் பராமரிப்புக்கு தேவையான பணிகளை கவனமாக செய்வேன்.'

நாம் கடவுளின் மகிழ்ச்சிக்காக உழைக்கும்போது, ​​இயல்பாகவே சுயநலச் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, பக்தித் தொண்டின் இயல்புடையவற்றை நோக்கிச் செல்வோம். இவ்வாறாக, பரமாத்மாவான கிருஷ்ணரின் பிரத்தியேக திருப்திக்காக அனைத்து செயல்களையும் செய்வதன் மூலம், நம் மனம் நிலையானதாக மாறும், மேலும் நாம் விரைவில் அவர் மீது கவனம் செலுத்த முடியும். பின்னர், படிப்படியாக கடவுளின் மீது அன்பு இதயத்தில் வெளிப்படும், மேலும் அவரை தொடர்ந்து சிந்திப்பதில் வெற்றி பெறுவோம்.