Bhagavad Gita: Chapter 12, Verse 2

ஶ்ரீப43வானுவாச1 |

மய்யாவேஶ்ய மனோ யே மாம் நித்1யயுக்1தா1 உபா1ஸதே1 |

ஶ்ரத்34யா ப1ரயோபே1தா1ஸ்தே1 மே யுக்111மா மதா1: ||2||

ஶ்ரீ-பகவான் உவாச—--இறைவன் கூறினார்; மயி—என் மீது; ஆவேஶ்ய--—நிலை நிறுத்தி; மனஹ--—மனதை; யே—எவர்கள்; மாம்—--என்னை; நித்ய யுக்தாஹா----எப்பொழுதும் ஈடுபாடுடன்; உபாஸதே--—வழிபடுகின்றார்களோ; ஶ்ரத்தயா--—நம்பிக்கையுடன்; பரயா—--சிறந்த; உபேதாஹா—--அருளப்பட்டவர்கள்; தே--—அவர்கள்; மே--—என்னால்; யுக்த-தமாஹா--—யோகத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள்; மதாஹா----நான் கருதுகிறேன்

Translation

BG 12.2: பகவான் கூறினார்: எவர்கள் தங்கள் மனதை என்னிடத்தில் நிலைநிறுத்தி, எப்போதும் என் பக்தியில் உறுதியான நம்பிக்கையுடன் ஈடுபடுகிறார்களோ, அவர்களை நான் சிறந்த யோகிகளாகக் கருதுகிறேன்.

Commentary

கடவுளின் அருகாமையை பல விதமான வகைகளில் உணர முடியும். இதை ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்வோம். நீங்கள் ரயில் பாதையில் நிற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தூரத்தில் இருந்து ஒரு ரயில் வண்டி தனது முகப்பு விளக்கை ஒளிரச் செய்கிறது. ஒரு ஒளி நெருங்கி வருவது போல் உங்களுக்குத் தோன்றுகிறது. ரயில் அருகில் வரும்போது, ​​ஒளியுடன் மின்னும் வடிவத்தை நீங்கள் காணலாம். இறுதியாக,உங்கள் முன்னால் உள்ள பிளாட்பாரத்தில் அது வந்து நிற்கும்போது, ​​'ஓ! இது ஒரு ரயில். இந்த மக்கள் அனைவரும் பெட்டிகளுக்குள் உட்கார்ந்து ஜன்னல்களுக்கு வெளியே எட்டிப்பார்ப்பதை நான் காண்கிறேன்.'என்று உணர்கிறீர்கள்

தொலைவிலிருந்து ஒரு ஒளியைப் போல் தெரிந்த அதே ரயில் வண்டி நெருங்க நெருங்க ஒளியுடன் சேர்ந்து மின்னும் வடிவத்துடன் தோன்றியது. ரயில் வண்டியில் எந்த மாற்றமும் ஏற்படவில்ல அது இன்னும் அருகாமையில் வந்தவுடன். அதன் வடிவம், நிறம், பயணிகள், பெட்டிகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் போன்ற பல்வேறு பண்புகளைப் பற்றிய உங்கள் புரிதல் வளர்ந்தது.

அதுபோலவே, கடவுள் பரிபூரணமானவர், முழுமையானவர், வரம்பற்ற ஆற்றல்களை உடையவர். அவரது ஆளுமை தெய்வீக பெயர்கள், வடிவங்கள், பொழுது போக்குகள், நல்லொழுக்கங்கள், கூட்டாளிகள் மற்றும் தங்குமிடங்களால் நிரம்பியுள்ளது. இருப்பினும், அவரது அருகாமையை ப்ரஹ்மன் ஆக (கடவுளின் உருவமற்ற எல்லாவற்றிலும் வெளிப்படும் வெளிப்பாடு), ஒப்புயர்வற்ற பரமாத்வாக (அனைத்து உயிரினங்களின் இதயத்தில் தனிப்பட்ட ஆன்மாவிலிருந்து வேறுபட்ட ஒன்றாக அமர்ந்து இருக்கும்) மற்றும் பகவானாக (இந்த தரணியில் கடவுளின் தனிப்பட்ட வெளிப்பாடாக அவதரிக்கும்) பல்வேறு நிலைகளில் உணரப்படுகிறது. பாகவதம் கூறுகிறது:

வத3ந்தி11த்11த்1வ வித3ஸ்த1த்1வம் யஜ்-ஞானமத்3வயம்

ப்ர3ஹ்மேதி1 1ரமாத்1மேதி143வான் இதி1 ஶ்ப்3த்3யதே1 (1.2.11)

‘உலகில் ப்ரஹ்மன், பரமாத்மா, பகவான் ஆகிய மூன்று விதங்களில் வெளிப்படும் ஒரே ஒரு உன்னதமான ஒப்புயர்வற்ற ஆளுமை உள்ளது என்று உண்மையை அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.’ அவர்கள் மூன்று வெவ்வேறு கடவுள்கள் அல்ல; மாறாக, அவை எல்லாம் வல்ல இறைவனின் மூன்று வெளிப்பாடுகள். இருப்பினும், அவர்களின் குணங்கள் வேறுபட்டவை. நீர், நீராவி மற்றும் பனிக்கட்டி அனைத்தும் ஒரே பொருளில் இருந்து உருவாக்கப்படுகின்றன- ஹைட்ரஜன் டை ஆக்ஸைடு; ஆனால் அவற்றின் இயற்பியல் பண்புகள் வேறுபட்டவை. தாகம் எடுத்தவன் தண்ணீர் கேட்டால், நாம் பனிக்கட்டி கொடுத்தால், தாகத்தைத் தீர்க்காது. பனிக்கட்டி மற்றும் நீர் இரண்டும் ஒரே பொருள், ஆனால் அவற்றின் இயற்பியல் பண்புகள் வேறுபட்டவை. அதுபோலவே, ப்ரஹ்மன், பரமாத்மா, பகவான் ஆகியோர் ஒரே ஒப்புயர்வற்ற கடவுளின் வெளிப்பாடுகள, ஆனால் அவர்களின் குணங்கள் வேறுபட்டவை.

ப்ரஹ்மன் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் கடவுளின் அனைத்து வியாபித்த வடிவமாகும். ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3ம் கூறுகிறது:

ஏகோ1 தே3வஹ ஸர்வபூ4தே1ஷு கூ34ஹ ஸர்வவ்யாபீ1 ஸர்வபூ4தா1ந்த1ராத்1மா (6.11)

‘ஒரே ஒரு ஒப்புயர்வற்ற ஆளுமை தான் உள்ளது . எல்லோரிடத்திலும், எல்லாவற்றிலும், அவர் அமர்ந்திருக்கிறார்.’ இறைவனின் இந்த அம்சமே ப்ரஹ்மம் எனப்படும். இது நித்தியம், அறிவு மற்றும் பேரின்பம் நிறைந்தது. இருப்பினும், இந்த அம்சத்தில், கடவுள் தனது எல்லையற்ற குணங்கள், மயக்கும் தனிப்பட்ட அழகு மற்றும் இனிமையான பொழுது போக்குகளை வெளிப்படுத்துவதில்லை. அவர் நிர்கு3ண (குணங்கள் இல்லாத), நிர்விஶேஷ (பண்புகள் இல்லாத), நிராகா1ர் (உருவம் இல்லாத) தெய்வீக ஒளி போன்றவர்.

ஞான யோகத்தின் வழியைப் பின்பற்றுபவர்கள் கடவுளின் இந்த அம்சத்தை வணங்குகிறார்கள். இது தொலைவில் ஒளி போல் தோன்றிய ரயில் போன்று கடவுளை ஒரு உருவமற்ற தொலைதூர உணர்தல் ஆக வழிபடும் முறை.

பரமாத்மா என்பது ஒவ்வொருவரின் இதயங்களிலும் வீற்றிருக்கும் கடவுளின் அம்சமாகும். 18.61 ஆம் வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: 'ஓ அர்ஜுனா அனைத்து உயிர்களின் இதயத்திலும் பரமாத்மா வாழ்கிறார், அவர்களின் செயல்களின் அடிப்படையில், ஜட சக்தியால் உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரத்தில் அமர்ந்திருக்கும் அலைந்து திரிகிற ஆத்மாக்களை அவர் வழி நடத்துகிறார்.’ உள்ளே தங்கி, கடவுள் நம் எண்ணங்கள் மற்றும் செயல்கள் அனைத்தையும் கவனித்து, அவற்றைக் கணக்கிட்டு, சரியான நேரத்தில் முடிவுகளைத் தருகிறார். நாம் செய்ததை நாம் நாம் மறந்தாலும் கடவுள் மறக்க மாட்டார். நாம் பிறந்தது முதல் நம் ஒவ்வொரு எண்ணம், சொல், செயலை அவர் நினைவில் வைத்திருக்கிறார். இந்த வாழ்க்கையில் மட்டுமல்ல! முடிவில்லா வாழ்வில், நாம் எங்கு சென்றாலும், கடவுள் நம்முடன் சென்றார். ஒரு நிமிடம் கூட நம்மை விட்டு பிரியாத நண்பர் அவர்.

உள்ளே இருக்கும் கடவுளின் இந்த அம்சமே பரமாத்மா. யோக தர்ஶனத்தில் பதஞ்சலியால் வெளிப்படுத்தப்பட்ட அஷ்டாங்க யோகத்தின் பாதை, உள்ளே அமர்ந்திருக்கும் கடவுளை உணர முயன்று பரமாத்மாவை அறிய வழிவகுக்கிறது. தூரத்திலிருந்து வெளிச்சமாகத் தோன்றிய ரயில், நெருங்கி வரும்போது மின்னும் வடிவமாகத் தெரிந்தது போலவே, பரமாத்மாவை பரமாத்மாவாக உணர்ந்துகொள்வது ப்ரஹ்மனை உணர்வதை விட நெருக்கமான உணர்தல்.

பகவான் என்பது ஒரு தனிப்பட்ட வடிவத்துடன் வெளிப்படும் கடவுளின் அம்சம். ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது:

கி1ருஷ்ணம் ஏனம் அவேஹி த்1வம் ஆத்1மானம் அகிலாத்1மனாம்

ஜக3த்3-தி4தாய ஸோ ’ப்1யத்1ர தே3ஹீவாபா4தி1 மாயயா. (10.14.15)

'அனைத்து ஆன்மாக்களுக்கும் ஆன்மாவாகிய பரம பகவான், உலக நலனுக்காக, ஸ்ரீ கிருஷ்ணராகத் தனது சொந்த வடிவில் பூமியில் அவதரித்துள்ளார்.' இந்த பகவான் அம்சத்தில், கடவுள் தனது நாமங்கள், வடிவங்கள், குணங்கள், இருப்பிடங்கள், பொழுது போக்குகள் மற்றும் கூட்டாளிகள் ஆகியவற்றின் இனிமையை வெளிப்படுத்துகிறார். .இந்தப் பண்புகள் ப்ரஹ்மன் மற்றும் பரமாத்மாவிலும் உள்ளன, ஆனால் தீப்பெட்டியில் மறைந்து இருக்கும் நெருப்பு, தீப்பெட்டியின் பற்றவைக்கும் பட்டையை தாக்கும் போது மட்டுமே வெளிப்படுவது போல, இந்த பகவான் அம்சத்தில், மற்ற வடிவங்களில் உள்ள கடவுளின் ஆளுமையின் அனைத்து சக்திகளும் அம்சங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன.

பக்தி அல்லது பக்தியின் பாதையானது அவரது பகவானின் அம்சத்தில் உள்ள உன்னதமான அமைப்பை உணர வழிவகுக்கிறது. கடவுளின் மிக நெருக்கமான உணர்தல் ரயில் வண்டி பற்றிய விவரங்களை பார்வையாளர் அது அவர் முன் வந்து நிற்கும் போது அறிவது போன்றதாகும். எனவே, 18.55 வது வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: 'என்னிடம் அன்பு செலுத்துவதன் மூலம் மட்டுமே, நான் யார் என்று ஒருவருக்குத் தெரியும்.' இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணர் அவர் தனது தனிப்பட்ட வடிவத்தின் பக்தரை உயர்ந்த யோகியாகக் கருதுகிறார் என்று கூறி அர்ஜுனனின் கேள்விக்கு பதிலளிக்கிறார்