Bhagavad Gita: Chapter 13, Verse 16

3ஹிரன்த1ஶ்ச1 பூ4தா1னாமச1ரம் ச1ரமேவ ச1 |

ஸூக்ஷ்மத்1வாத்113விஞ்ஞேயம் தூ3ரஸ்த2ம் சா1ன்தி1கே111த்1` ||16||

பஹிஹி--—வெளியே; அந்த----உள்ளே; ச--—மற்றும்; பூதானாம்—--எல்லா உயிரினங்களும்; அசரம்—-- அசையாத; சரம்--—அசையும்; ஏவ—--உண்மையில்; ச—--மற்றும்; ஸூக்ஷ்மத்வாத்-—-நுட்பமான; தத்—-அவர்; அவிஞ்ஞேயம்--—புரிதலுக்கு அப்பார்பட்டவர்; தூர-ஸ்தம்--—மிகத் தொலைவில்; ச—-மற்றும்; அன்திகே--—மிக அருகிலும்; ச--—மேலும்; தத்---அவர்

Translation

BG 13.16: அசையும் மற்றும் அசையாத அனைத்து உயிரினங்களுக்கும் வெளியேயும் உள்ளேயும் அவர் இருக்கிறார். அவர் நுட்பமானவர், எனவே, அவர் புரிந்துகொள்ள முடியாதவர். அவர் வெகு தொலைவில் இருக்கிறார், ஆனால் அவர் மிக அருகிலும் இருக்கிறார்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு விவரித்ததைப் போலவே நடைமுறையில் கடவுளை விவரிக்கும் ஒரு வேத மந்திரம் உள்ளது:

1த்3 ஏஜதி11ன் நைஜதி11த்3தூ3ரே த1த்3வந்தி1கே1

1த்3 அந்த1ர் அஸ்ய ஸர்வஸ்ய த1து3ஸர்வஸ்யாஸ்ய பா3ஹ்யத1

(ஈஶோப1நிஷத3 மந்தி1ரம் 5)

‘ஒப்புயர்வற்ற ப்ரஹ்மன் நடப்பதில்லை, ஆனாலும் அவர் நடக்கிறார்; அவர் தொலைவில் இருக்கிறார், ஆனால் அவர் அருகில் இருக்கிறார். அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார், ஆனால் அவர் எல்லாவற்றிற்கும் வெளியே இருக்கிறார்.

முன்பு 13.3 வசனத்தில், கடவுளை அறிவதே உண்மையான அறிவு என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார். இருப்பினும், இங்கே அவர் உச்ச உருபொருளை புரிந்து கொள்ள முடியாது என்று கூறுகிறார் இது மீண்டும் ஒரு முரண்பாடாகத் தெரிகிறது, ஆனால் கடவுள் கூறுவது என்னவென்றால் அவர் புலன்கள், மனம் மற்றும் புத்தியால் அறியப்படுவதில்லை. புத்தி ஜட சக்தியால் ஆனது, எனவே அது தெய்வீகமான கடவுளை அடைய முடியாது. இருப்பினும், கடவுள் ஒருவருக்கு தனது அருளை வழங்கினால், அந்த அதிர்ஷ்டசாலி ஆன்மா அவரை அறிய முடியும்.