Bhagavad Gita: Chapter 13, Verse 24

ய ஏவம் வேத்1தி1 பு1ருஷம் ப்1ரக்1ருதி1ம் ச1 கு3ணை: ஸஹ |

ஸர்வதா2 வர்த1மானோ‌பி1 ந ஸ பூ4யோ‌பி4ஜாயதே1 ||24||

யஹ---எவர்; ஏவம்---இவ்வாறு; வேத்தி--—புரிந்து கொள்பவர்கள்; புருஷம்--—தனிப்பட்ட ஆத்மாவை; ப்ரகி1ரிதி1ம்--—பொருள் இயற்கையை; ச--—மற்றும்; குணைஹி—--இயற்கையின் மூன்று முறைகள்; ஸஹ—--உடன்; ஸர்வதா—--எல்லா விதத்திலும்; வர்தமானஹ--—அமைந்துள்ள; அபி--—எனினும்; ந--—இல்லை; ஸஹ--அவர்கள்; பூயஹ----மீண்டும்; அபிஜாயதே---பிறக்கிறார்கள்

Translation

BG 13.24: பரமாத்மா, ஜீவாத்மா, ப்ரகி1ரிதி1 ஆகியவற்றின் உண்மையையும், மூன்று குணங்களின் தொடர்புகளையும் புரிந்து கொண்டவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. அவர்களின் தற்போதைய நிலை எதுவாக இருந்தாலும், அவர்கள் சுதந்திரமாகி விடுகிறார்கள்.

Commentary

அறியாமை ஆன்மாவை அதன் தற்போதைய இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. கடவுளின் மிகவும் சிறிய பகுதிகளாக இருக்கும் ஆன்மீக அடையாளத்தை மறந்துவிட்டு, அது ஜட உணர்வில் மூழ்கிவிட்டது. எனவே, அதன் தற்போதைய நிலையில் இருந்து உயிர்த்தெழுவதற்கு அறிவு மிகவும் இன்றியமையாதது. ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3ம் இதையே கூறுகிறது:

ஸந்யுக்11மேத1த்1க்ஷரமக்ஷரம் ச1

வ்யக்1தா1வ்யக்11ம் ப4ரதே1விஶ்வமீஶஹ

அனீஶஶ் சா1த்1மா ப3த்யதே4 போ4க்1த்1ரிபா4வா

ஞாத்1வா தே3வம் முச்1யதே1 ஸர்வபா1ஶைஹி (1.8)

‘படைப்பில் மூன்று உருபொருள்கள் உள்ளன - எப்பொழுதும் மாறிக்கொண்டிருக்கும் ஜட இயல்பு, மாறாத ஆத்மாக்கள் மற்றும் இவை இரண்டின் உன்னத எஜமானர், அவர் பரம பகவான். இந்த உருபொருள்ககளைப் பற்றிய அறியாமையே ஆன்மாவின் அடிமைத்தனத்திற்குக் காரணமாகும், அதே சமயம் அவற்றைப் பற்றிய அறிவு மாயாவின் பிணைப்பிலிருந்து விடுவிக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் அறிவு வெறும் புத்தகத் தகவல் அல்ல, ஆனால் உணர்ந்த ஞானம். முப்பொருளைப் பற்றிய தத்துவார்த்த அறிவை நாம் முதலில் குரு மற்றும் வேதங்களிலிருந்து பெற்று, பின்னர் அந்த அறிவோடு சீரமைத்து ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபடும்பொழுது அறிவின் உணர்தல் அடையப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது இந்த ஆன்மீக நடைமுறைகளில் சிலவற்றைப் பற்றி அடுத்த வசனத்தில் பேசுகிறார்.