Bhagavad Gita: Chapter 14, Verse 6

1த்1ர ஸத்1த்1வம் நிர்மலத்1வாத்1ப்1ரகா1ஶக1மனாமயம் |

ஸுக2ஸங்கே3ன ப3த்4னாதி1 ஞானஸங்கே1ன சா1னக4 ||6||

தத்ர--—இவற்றில்; ஸத்வம்—--நன்மையின் முறை; நிர்மலத்வாத்--—மிக தூய்மையாக இருப்பது; ப்ரகாஶகம்--—ஒளிரச் செய்யும்; அநாமயம்--—ஆரோக்கியமான மற்றும் நல்வாழ்வு நிறைந்த; ஸுக--—மகிழ்ச்சி; ஸங்கேன--—பற்றுதலுடன்; பத்னாதி--—பிணைக்கிறது; ஞான--—அறிவு; ஸங்கேன--—பற்றுதலுடன்; ச—-மேலும்; அனக--- பாவம் செய்யாத அர்ஜுனன்

Translation

BG 14.6: இவற்றில், நன்மையின் முறையான ஸத்வ குணம், , மற்றவற்றை விட தூய்மையானது, ஒளிமயமானது மற்றும் நல்வாழ்வு நிறைந்தது, பாவம் செய்யாத அர்ஜுனனே, அது மகிழ்ச்சி மற்றும் அறிவின் உணர்விற்கான இணைப்பை உருவாக்குவதன் மூலம் ஆன்மாவை பிணைக்கிறது.

Commentary

ப்ரகா1ஶக1ம் என்ற சொல்லுக்கு ‘ஒளிர்தல்’ என்று பொருள். அநாமயம் என்றால் ‘ஆரோக்கியம் மற்றும் முழு நல்வாழ்வு’ என்று பொருள். ‘இது அமைதியான இயல்பு' அதாவது துன்பம், அசௌகரியம் அல்லது துன்பத்தின் உள் காரணங்களில் இருந்து விடுபடுவது. என்றும் பொருள்படும். நன்மையின் முறை அமைதியானது மற்றும் ஒளிமயமானது. இவ்வாறு, ஸத்வ குணம் ஒருவரின் ஆளுமையில் நற்பண்புகளை உருவாக்குகிறது. மற்றும் அறிவால் அறிவாற்றலை ஒளிரச் செய்கிறது. இது ஒரு நபரை அமைதியாகவும், திருப்தியாகவும், தொண்டு செய்யவும், இரக்கமுள்ளவராகவும், உதவிகரமாகவும், சாந்தமாகவும், அமைதியாகவும் ஆக்குகிறது. இது நல்ல ஆரோக்கியத்தையும் நோயிலிருந்து விடுதலையையும் வளர்க்கிறது. நன்மையின் முறை அமைதி மற்றும் மகிழ்ச்சியின் விளைவை உருவாக்கும் அதே வேளையில், அவற்றின் மீதான பற்றுதல் ஆத்மாவை ஜட இயற்கையுடன் பிணைக்கிறது.

இதை ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்வோம். ஒரு பயணி காட்டுப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​மூன்று கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்கினர். ‘அவனைக் கொன்று அவனுடைய செல்வத்தையெல்லாம் அபகரித்துக்கொள்ளலாம்’ என்று முதலாமவர் சொன்னான். இரண்டாவது கொள்ளைக்காரன் சொன்னான், ‘இல்லை, நாம் அவனைக் கொல்ல வேண்டாம். நாங்கள் அவரைக் கட்டிப்போட்டு அவருடைய உடைமைகளைப் பறிப்போம்.’ இரண்டாவது அறிவுரையின்படி, அவர்கள் அவரை கயிற்றில் கட்டி, அவரது செல்வத்தை கொள்ளையடித்தனர். அவர்கள் சிறிது தூரம் சென்றதும், மூன்றாவது கொள்ளைக்காரன் திரும்பி வந்தான். அவன் அவரில் கட்டவிழ்த்து காட்டின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றான். அவன் வெளியேறும் வழியைக் காட்டி, ‘என்னால் வெளியே செல்ல முடியாது, ஆனால் நீங்கள் இந்தவழியில் சென்றால், நீங்கள் காட்டை விட்டு வெளியேறலாம்’ என்றான்.

இந்த எடுத்துக்காட்டில் முதல் கொள்ளைக்காரன் அறியாமையில் அதாவது தமோ குணத்தில் சூழப்பட்டு இருக்கிறான். இந்த குணமானது ஆன்மாவை உயிர் அற்றதாகவும் பலவீனமாகவும் ஆக்கி அதை வீழ்த்தி கொல்ல விரும்புகிறது. இரண்டாவது கொள்ளைக்காரன் உணர்ச்சியின் முறையில் ரஜோ குணத்தில் சூழப்பட்டு இருக்கிறான். இது உயிரினங்களின் உணர்ச்சிகளை தூண்டி ஆன்மாவை எண்ணற்ற உலக ஆசைகளில் பிணைக்கிறது. மூன்றாவது கொள்ளைக்காரன் நன்மையின் முறையில் அதாவது ஸத்துவ குணத்தில் சூழப்பட்டு இருக்கிறான் இது உயிரினத்தின் தீமைகளை குறைக்கிறது, பொருள் அசௌகரியத்தை எளிதாக்குகிறது. மற்றும் ஆன்மாவை அறத்தின் பாதையில் செல்ல வைக்கிறது. இருப்பினும் ஸத்வ குணம் கூட ஜட இயற்கையின் எல்லைக்குள் உள்ளது. நாம் அதனுடன் இணைந்திருக்கக் கூடாது; மாறாக, ஆழ்நிலை தளத்திற்கு முன்னேற நாம் அதைப் பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றிற்கு அப்பாற்பட்டது ஶுத்த ஸத்வ ,நற்குணத்தின் ஆழ்நிலை முறை. இது ஜட இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுளின் தெய்வீக ஆற்றலின் முறை. ஆன்மா கடவுளை உணரும் போது, ​​​​அவரது அருளால், கடவுள் ஆத்மாவுக்கு ஶுத்த ஸத்வத்தை அளித்து, புலன்கள், மனம் மற்றும் புத்தியை தெய்வீகமாக்குகிறார்.