Bhagavad Gita: Chapter 16, Verse 18

அஹங்கா1ரம் ப3லம் த3ர்ப1ம் கா1மம் க்1ரோத4ம் ச1 ஸன்ஶ்ரிதா1: |

மாமாத்1மப1ரதே3ஹேஷு ப்1ரத்3விஷன்தோ‌1ப்4யஸூயகா1: ||18||

அஹங்காரம்--—அகங்காரம்; பலம்--—வலிமை; தர்பம்--—ஆணவம்;காமம்--—ஆசை; க்ரோதம்--—கோபம்; ச--— மற்றும்; ஸந்ஶ்ரிதாஹா--—சூழப்பட்டு; மாம்--— என்னை; ஆத்ம--பர-தேஹேஷு--—அவர்களின் சொந்த மற்றும் மற்றவர்களின் உடல்களுக்குள் இருக்கும்; ப்ரத்விஷந்தஹ--—துன்புறுத்துகிறார்கள்; அப்யஸூயகாஹா--—அஸுர குணங்கள் உடையவர்கள்

Translation

BG 16.18: அஸுர குணத்தைக் கொண்டவர்கள் ஆணவம் ஆசை கோபம் ஆகியவற்றால் சூழப்பட்டு தங்கள் உடலிலும் மற்றவர்களின் உடலிலும் இருக்கும் என்னை துன்புறுத்துகிறார்கள்.

Commentary

இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் அஸுர குணம் கொண்ட மனிதர்களின் இன்னும் சொல்லக்கூடிய அறிகுறிகளை விவரிக்கிறார். அவர்கள் மோசமானவர்கள், தீங்கு இழைப்பவர்கள், கொடூரமானவர்கள் மற்றும், போர்க்குணமிக்கவர்கள். அவர்கள் நேர்மையான குணங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவர்கள் மற்றவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் தங்களை மிக முக்கியமானவர்கள் என்று கருதுகிறார்கள், மேலும் இந்த சுய-பெருமையின் விளைவாக, அவர்கள் மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். எப்போதாவது அவர்கள் தங்கள் திட்டங்களில் எதிர்க்கப்பட்டால், அவர்கள் கோபமடைந்து, மற்றவர்களுக்கும் தங்களுக்கும் வேதனையை ஏற்படுத்துகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் சொந்த இதயங்களிலும் மற்றவர்களின் இதயங்களிலும் அமர்ந்திருக்கும் ஒப்புயர்வற்ற ஆத்மாவை புறக்கணித்து அவமதிக்கிறார்கள்.