அர்ஜுன உவாச1 |
யே ஶாஸ்த்1ரவிதி4முத்1ஸ்ருஜ்ய யஜந்தே1 ஶ்ரத்3த4யான்விதா1: |
தேஷாம் நிஷ்டா2 து1 கா1 க்1ருஷ்ண ஸத்1த்1வமாஹோ ரஜஸ்த1ம: || 1 ||
அர்ஜுனஹ உவாச---—அர்ஜுனன் கூறினார்; யே---—யார்; ஶாஸ்திர-விதிம்---—வேத கட்டளைகளை; உத்ஸ்ரிஜ்ய---—மதிக்காமல்; யஜந்தே--—வழிபடுபவர்கள்; ஶ்ரத்தயா-அன்விதாஹா----நம்பிக்கையுடன்; தேஷாம்---—அவர்களின்; நிஷ்டா---—நம்பிக்கை; து—--உண்மையில்;கா—--என்ன; கிருஷ்ணா--—கிருஷ்ணா; ஸத்வம்—நன்மையின் முறை; ஆஹோ—அல்லது; ரஜஹ—--ஆர்வ முறை; தமஹ---அறியாமை முறை.
Translation
BG 17.1: அர்ஜுனன் சொன்னார்: ஓ கிருஷ்ணா, வேதத்தின் கட்டளைகளை மதிக்காமல், நம்பிக்கையுடன் வழிபடுபவர்களின் நிலைமை என்ன? நன்மை, ஆர்வம். அறியாமை ஆகிய மூன்று முறைகளில் அவர்களின் நம்பிக்கை எந்த பயன் முறையை சார்ந்தது?
Commentary
முந்தைய அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் வளர்க்கப்பட வேண்டிய நற்பண்புகள் மற்றும் அழிக்கப்பட வேண்டிய ஆளுமைப் பண்புகளைப் புரிந்துகொள்ள அர்ஜுனுக்கு உதவுவதற்காக தெய்வீக மற்றும் அஸுர இயல்புகளுக்கு இடையிலான வேறுபாடுகளைப் பற்றி பேசினார். வேதத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, அதற்குப் பதிலாக முட்டாள்தனமாக உடலின் தூண்டுதல்களையும் மனதின் விருப்பங்களையும் பின்பற்றுபவர், வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து முழுமை, மகிழ்ச்சி அல்லது விடுதலையை அடைய மாட்டார் என்று அவர் கூறினார். ஆகவே, மக்கள் வேதத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அதன்படி செயல்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த அறிவுறுத்தல் தற்போதைய கேள்விக்கு வழிவகுத்தது. வேத ஶாஸ்திரங்களைக் குறிப்பிடாமல் வழிபடுபவர்களின் நம்பிக்கையின் தன்மையை அறிய அர்ஜுன் விரும்புகிறார். குறிப்பாக, பொருள் இயற்கையின் மூன்று முறைகளின் அடிப்படையில் பதிலைப் புரிந்து கொள்ள விரும்புகிறார்.