Bhagavad Gita: Chapter 18, Verse 15-16

ஶரீரவாங்மனோபி4ர்யத்11ர்ம ப்1ராரப4தே1 நர: |

ந்யாய்யம் வா விப1ரீத1ம் வா ப1ஞ்சை1தே11ஸ்ய ஹேத1வ: ||15||
1த்1ரைவம் ஸதி11ர்தா1ரமாத்1மானம் கே1வலம் து1 ய: |

1ஶ்யத்1யக்1ருத1பு3த்1தி4த்1வான்ன ஸ ப1ஶ்யதி1 து1ர்மதி1: ||16||

ஶரீர--வாக்-மனோபிஹி--—உடல், பேச்சு அல்லது மனதுடன்; யத்--—எது; கர்ம--—செயல்; ப்ராரபதே--— செய்தாலும்; நரஹ--—ஒரு நபர்; ந்யாயம்--—சரியான; வா—--அல்லது; விபரீதம்--—முறையற்ற; வா--—அல்லது; பஞ்ச--—ஐந்து; ஏதே--—இவை; தஸ்ய--—அவர்களின்; ஹேதவஹ--—காரணிகள்; தத்ர--—அங்கே;ஏவம் ஸதி--—இருந்தாலும்; கர்த்தாரம்--—செய்பவர்; ஆத்மானம்—--ஆன்மா; கேவலம்--—மட்டும்; து--—ஆனால்; யஹ--—யார்; பஶ்யதி—--பார்க்க; அக்ரித-புத்தித்வாத்----தூய்மையற்ற புத்தியுடன்; ந--—இல்லை; ஸஹ----அவர்கள்; பஶ்யதி--—பார்க்க; துர்மதிஹி----முட்டாள்தனமான.

Translation

BG 18.15-16: உடல், பேச்சு அல்லது மனது மூலம் , சரியான அல்லது முறையற்ற எந்தச் செயலைச் செய்தாலும் இந்த ஐந்தும் பங்களிக்கும் காரணிகளாகும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஆன்மாவை மட்டுமே செய்பவராகக் கருதுகின்றனர். அவர்களின் தூய்மையற்ற புத்தியால், அவர்களால் விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

Commentary

மூன்று வகையான- உடலினால் நிகழ்த்தப்பட்ட (கா1யிக்1), பேச்சு மூலம் நிகழ்த்தப்பட்ட (வாசி1க்1), மற்றும் மனத்தால் நிகழ்த்தப்பட்ட (மானஸிக்1) செயல்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு வகையிலும், நாம் புண்ணிய அல்லது பாவச் செயல்களைச் செய்தாலும், முந்தைய வசனத்தில் குறிப்பிடப்பட்ட ஐந்து காரணங்கள் பொறுப்பு. அஹங்காரத்தின் காரணமாக, ‘இதை நான் சாதித்தேன்.’ ‘அதைச் சாதித்தேன்.’ ‘இதைச் செய்வேன்.’என்று நாம் நமது செயல்களை செய்பவராக நினைக்கிறோம். இவையெல்லாம் நாம் செய்பவர் என்ற மாயையில் வெளிப்படும் அறிக்கைகள். இந்த அறிவை வெளிப்படுத்திய ஸ்ரீகிருஷ்ணரின் நோக்கம் ஆன்மாவின் கர்வத்தை அழிப்பதாகும். எனவே, ஆன்மாவை செயலுக்கான ஒரே காரணியாகக் கருதுபவர்கள் விஷயங்களை உண்மையாகப் பார்ப்பதில்லை என்று அவர் கூறுகிறார். இறைவனால் ஆன்மாவுக்கு உடல் வழங்கப்படாவிட்டால், மேலும், உடல் கடவுளால் ஆற்றல் பெறவில்லை என்றால், ஆத்மாவால் ஒன்றும் செய்திருக்க முடியாது. கே1னோப1நிஷத3ம் கூறுகிறது:

யத்3வாசா1னப்4யுதி31ம் யேன வாக3ப்4யுத்3யதே1 (1.4)

‘ப்ரஹ்மனை குரலால் விவரிக்க முடியாது. அதன் தூண்டுதலால், குரல் பேசும் சக்தியைப் பெறுகிறது.’

யன்மனஸா ந மனுதே1 யேனா ஹுர்மனோ மத1ம் (1.5)

‘ப்ரஹமனை மனத்தாலும் புத்தியாலும் புரிந்து கொள்ள முடியாது. அதன் சக்தியால் மனமும் புத்தியும் செயல்படுகின்றன.’

யச்11க்ஷுஷா ந ப1ஶ்யதி1 யேன ச1க்ஷும்ஷி ப1ஶ்யதி1 (1.6)

‘ப்ரஹ்மனை கண்களால் பார்க்க முடியாது. அதன் உத்வேகத்தால், கண்கள் பார்க்கின்றன.’

யச்1ச்2ரோத்1ரேண ந ஶ்ரிணோதி1 யேன ஶ்ரோத்1ரமித3ம் ஶ்ருத1ம் (1.7)

‘ப்ரஹ்மனை காதுகளால் கேட்க முடியாது. அதன் சக்தியால், காதுகள் கேட்கின்றன.’

யத்1 ப்1ராணேந ந ப்1ராணிதி1 யேன ப்1ராணஹ ப்1ரணீயதே1 (1.8)

‘ப்ரஹ்மனை உயிர்க் காற்றால் ஆற்றல் மிக்கதாக ஆக்க முடியாது. அதன் உத்வேகத்தால், உயிர்கள் செயல்படுகின்றன.’

கர்மங்களைச் செய்வதில் ஆன்மாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இது பொருள்படாது. இது ஒரு வாகனத்தின் சக்கரங்களை திருப்புவதற்கு சக்கரத்திருப்பியை கட்டுப்படுத்தி, அதை எங்கு திருப்ப வேண்டும், எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் காரில் உள்ள ஓட்டுநர் போன்றது. அதேபோல, ஆன்மாவும் உடல், மனம் மற்றும் புத்தியின் செயல்களை நிர்வகிக்கிறது, ஆனால் ஆன்மா உடலின் செயல்களுக்கான பாராட்டிற்கு உரிமையானது அல்ல. செயலுக்கு நாமே ஒரே காரணம் என்று நாம் கருதினால், நம் செயல்களை அனுபவிப்பவர்களாகவும் இருக்க விரும்புகிறோம். ஆனால் நாம் செயல்களை செய்பவராக பெருமை கொள்ளும் கர்வத்திலிருந்து நம்மை விடுவித்து, நமது முயற்சியின் பெருமையை இறைவனின் அருள் மற்றும் அவரால் வழங்கப்பட்ட கருவிகளுக்கு உரியதாகக் கருதி நாம் நமது செயல்களை அனுபவிப்பவர்கள் அல்ல என்பதையும், அனைத்து செயல்களும் அவருடைய மகிழ்ச்சிக்காகவே உள்ளன என்பதையும் உணர்கிறோம். அடுத்த வசனத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, இந்தப் புரிதல் ஒவ்வொரு தியாகம், தானம், தவம் ஆகிய செயல்களை பக்தியுடன் அவருக்கு அர்ப்பணிப்பதில் நமக்கு உதவுகிறது.