நியத1ம் ஸங்க3ரஹித1மராக3த்3வேஷத1: க்1ருத1ம் |
அப2லப்1ரேப்1ஸுநா க1ர்ம யத்1த1த்1ஸாத்1த்1விக1முச்1யதே1 ||23||
நியதம்-----வேதங்களின்படி; ஸங்க-ரஹிதம்---—பற்றற்றது; அராக-த்வேஷத—பற்றுதல் மற்றும் வெறுப்பிலிருந்து விடுபட்டது; க்ருதம்--—செய்யப்பட்டது; அஃபல-ப்ரேப்ஸுனா--—வெகுமதிகளை விரும்பாமல்; கர்ம--—செயல்; யத்—--எது; தத்--—அது; ஸாத்விகம்--—நன்மையின் முறையில்; உச்யதே---என்று அழைக்கப்படுகிறது
Translation
BG 18.23: பற்றுதலும் வெறுப்பும் இல்லாது, வெகுமதியின் மீது ஆசையில்லாத, வேதங்களின்படி செய்யும் செயல் நன்மையின் முறையில் செய்யப்படுகிறது.
Commentary
மூன்று வகையான அறிவை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது மூன்று வகையான செயல்களை விவரிக்கிறார். வரலாற்றின் போக்கில், பல மேற்கத்திய தத்துவவாதிகள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் சரியான செயல் என்ன என்பது குறித்து தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். அவற்றில் சில முக்கியமானவை மற்றும் அவற்றின் தத்துவங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
கிரீஸின் எபிகியூரியர்கள் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு) 'சாப்பிடுவது, குடிப்பது மற்றும் மகிழ்ச்சியாக இருப்பது' சரியான செயல் என்று நம்பினர்.
இங்கிலாந்தின் ஹாப்ஸ் (1588-1679) மற்றும் பிரான்சின் ஹெல்வெடியஸ் (1715-1771) ஆகியோரின் தத்துவம் மிகவும் மேம்படுத்தப்பட்டது. அவர்கள் எல்லோரும் சுயநலவாதிகளாகி, மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் இருந்தால், உலகில் குழப்பம் ஏற்படும் என்று சொன்னார்கள். எனவே, தனிப்பட்ட உணர்வுடன், மற்றவர்களுக்காகவும் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். உதாரணமாக, கணவன் நோய்வாய்ப்பட்டால், மனைவி அவனைக் கவனித்துக் கொள்ள வேண்டும்; மற்றும் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தால், கணவன் அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவது சுயநலத்துடன் முரண்படும் சந்தர்ப்பங்களில், சுயநலத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
ஜோசப் பட்லரின் (1692-1752) தத்துவம் இதைத் தாண்டியது. நமது சுயநலத்திற்காக பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவறானது என்றார். பிறருக்கு உதவுவது மனிதனின் இயல்பான குணம். ஒரு பெண் சிங்கம் கூட பசியுடன் இருக்கும் போது தன் குட்டிகளுக்கு உணவளிக்கிறது. எனவே, மற்றவர்களுக்கு சேவை செய்வதே எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும். இருப்பினும், பட்லரின் சேவைக் கருத்து, பொருள் துன்பத்தைப் போக்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்டது; உதாரணமாக, ஒரு நபர் பசியுடன் இருந்தால், அவருக்கு உணவளிக்க வேண்டும். ஆனால் இது உண்மையில் பிரச்சினைகளை தீர்க்காது, ஏனெனில் ஆறு மணி நேரம் கழித்து, அந்த நபர் மீண்டும் பசியுடன் இருக்கிறார்.
பட்லருக்குப் பிறகு ஜெர்மி பெந்தாம் (1748-1832) மற்றும் ஜான் ஸ்டூவர்ட்மில் (1806-1873) வந்தனர். பெரும்பான்மையினருக்கு சிறந்ததைச் செய்ய வேண்டும் என்ற பயன்பாட்டுக் கொள்கையை அவர்கள் பரிந்துரைத்தனர். சரியான நடத்தையை தீர்மானிக்க பெரும்பான்மையான கருத்தைப் பின்பற்றுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் பெரும்பான்மையானவர்கள் தவறாகவோ அல்லது தவறாக வழிகாட்ட பட்டவர்களாக இருந்தால், இந்த தத்துவம் வீழ்ச்சியடைகிறது, ஏனென்றால் ஆயிரம் அறிவில்லாதவர்கள் கூட ஒரு கற்றறிந்தவரின் சிந்தனைத் தரத்துடன் ஒப்பிட முடியாது.
மற்ற தத்துவவாதிகள் மனசாட்சியின் கட்டளைகளைப் பின்பற்ற பரிந்துரைத்தனர். சரியான நடத்தையை தீர்மானிப்பதில் இது சிறந்த வழிகாட்டி என்று அவர்கள் அறிவுறுத்தினர். இருப்பினும், பிரச்சனை என்னவென்றால், ஒவ்வொருவரின் மனசாட்சியும் வேறுபட்டது. ஒரு குடும்பத்தில் கூட, இரண்டு குழந்தைகள் வெவ்வேறு தார்மீக மதிப்பீடுகளையும் மனசாட்சியையும் கொண்டுள்ளனர். தவிர, அதே நபரின் மனசாட்சி கூட காலப்போக்கில் மாறுகிறது. ஒரு கொலைகாரனிடம் மக்களைக் கொல்வதில் வருத்தமாக இருக்கிறதா என்று கேட்டால், அவர் பதிலளிக்கிறார்: 'ஆரம்பத்தில் நான் மோசமாக உணர்ந்தேன், ஆனால் பின்னர் அவை கொசுக்களை கொல்வதைப் போன்று சாமானியமானது . எனக்கு எந்த வருத்தமும் இல்லை.’
முறையான செயலைப் பற்றி, மகாபாரதம் கூறுகிறது:
ஆத்1மனஹ பிரதி1கூ1லானி ப1ரேஶாம் ந ஸமாச1ரேத்1
ஶ்ருதி1ஹி ஸ்ம்ருதிஹி ஸதா3சா1ரஹ ஸ்வஸ்ய ச1 பிரியமாத்1மனஹ
(5.15.17)
‘மற்றவர்கள் உங்களிடம் ஒருவிதத்தில் நடந்துகொள்ளும்போது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், நீங்களும் அவர்களிடம் அவ்வாறு நடந்துகொள்ளாதீர்கள். ஆனால் உங்கள் நடத்தை வேதவாக்கியங்களின்படி உள்ளதா என்பதை எப்போதும் சரிபார்க்கவும்’. மற்றவர்கள் உங்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புவதைப் போலவே அவர்களுடன் நடந்து கொள்ளுங்கள். பைபிள் மேலும் சொல்கிறது, ‘மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் செய்யுங்கள்’ (லூக்கா 6:31). இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர், அதே வழியில், நற்செயல்கள் என்பது வேதத்தின்படி ஒருவரின் கடமையைச் செய்வதாகும் என்று அறிவிக்கிறார். அத்தகைய வேலை பற்றுதல் அல்லது வெறுப்பு இல்லாமல் மற்றும் அதன் முடிவுகளை அனுபவிக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.