Bhagavad Gita: Chapter 18, Verse 78

யத்1ர யோகே3ஶ்வர: க்1ருஷ்ணோ யத்1ர பா1ர்தோ24னுர்த4ர: |

1த்1ர ஶ்ரீர்விஜயோ பூ4தி1ர்த்4ருவா னீதி1ர்மதி1ர்மம ||78||

யத்ர--—எங்கெல்லாம்; யோக-ஈஷ்வரஹ---ஸ்ரீ கிருஷ்ணர், யோகத்தின் இறைவன்;கிருஷ்ணஹ----ஸ்ரீ கிருஷ்ணர்; யத்ர—--எங்கும்; பார்தஹ---ப்ரிதாவின மகன் அர்ஜுனன்; தனுஹு-தரஹ—--உயர்ந்த வில்லாளியான; தத்ர—--அங்கே;ஸ்ரீஹி--—செல்வம்; விஜயஹ--—வெற்றி; பூதிஹி--:--செழிப்பு; துருவா—---முடிவற்ற; நீதிஹி----நீதி; மதிஹி-மம----என் கருத்து.

Translation

BG 18.78: எல்லா யோகத்தின் இறைவனான ஸ்ரீ கிருஷ்ணர் எங்கெல்லாம் இருக்கிறாரோ, எங்கெல்லாம் உயர்ந்த வில்லாளியான அர்ஜுனன் இருக்கிறாரோ, அங்கே நிச்சயமாக முடிவில்லாத தன்மை, வெற்றி, செழிப்பு மற்றும் நீதி இருக்கும். இதில், நான் உறுதியாக இருக்கிறேன்.

Commentary

பகவத் கீதை இந்த வசனத்துடன் ஒரு ஆழமான உச்சரிப்புடன் முடிவடைகிறது. திருதராஷ்டிரர் போரின் முடிவைப் பற்றி பயந்தார். இரு படைகளின் ஒப்புமைப் பலம் மற்றும் எண்களின் பொருள் கணக்கீடுகள் பொருத்தமற்றவை என்று ஸஞ்ஜயன் அவருக்குத் தெரிவிக்கிறார். இந்தப் போரில் ஒரே ஒரு தீர்ப்பு மட்டுமே இருக்க முடியும். -

கடவுள் உலகின் சுதந்திரமான, சுயமாக நிலைத்திருக்கும் இறையாண்மை. மேலும், உயர்ந்தபட்ச வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் தகுதியான போற்றத்தக்க பொருள். ந த1த்1ஸமஶ்சா1ப்4யாதி41ஶ்ச1 த்3ரிஷ்யதே1 (ஶ்வேதா1ஶ்வத1ர உபநிஷதம் 6.8) ‘அவருக்கு நிகரானவர் யாரும் இல்லை; அவரை விட பெரியவர் யாரும் இல்லை.’ அவரது ஒப்பற்ற மகிமையை வெளிப்படுத்த அவருக்கு ஒரு சரியான ஊடகம் தேவை. அவரிடம் சரணடையும் ஆன்மா கடவுளின் மகிமை பிரகாசிக்க அத்தகைய வாகனத்தை வழங்குகிறது. பரம பகவானும் அவருடைய தூய பக்தரும் இருக்கும் இடமெல்லாம், முழுமையான சத்தியத்தின் ஒளி எப்போதும் பொய்யின் இருளை அகற்றும். வேறு எந்த முடிவும் இருக்க முடியாது.