மாத்ராஸ்ப1ர்ஶாஸ்து1 கௌ1ன்தே1ய ஶீதோ1ஷ்ணஸுக2து3ஹ்க2தா3: |
ஆக3மாபா1யினோனித்1யாஸ்தா1ன்ஸ்தி1தி1க்ஷஸ்வ பா4ரத1 ||14||
மாத்ராஸ்பர்ஶாஹா-—-புலன்களுக்கும் புலபொருட்களுக்கும் இடையிலான தொடர்பு; து-—- நிச்சயமாக; கௌன்தேய-—-குந்தியின் மகன்; ஶீத-—-குளிர்காலம்; உஷ்ண-—-கோடைக்காலம்; ஸுகஹ-—-இன்பம்; துஹ்க—-துன்பம்; தாஹா----கொடுப்பவை; ஆகம-—-வருவதும்; அபாயினஹ-—--போவதுமாக; அனித்யாஹா-—-தற்காலிகமானவை; தான்-—-அவற்றை; திதிக்ஷஸ்வ-—-சகித்துக் கொள்; பாரத-—-பரத வம்சத்தில் தோன்றிய அர்ஜுனா
Translation
BG 2.14: குந்தியின் மகனே, புலன்களுக்கும் புலபொருட்களுக்கும் இடையிலான தொடர்பு மகிழ்ச்சி மற்றும் துன்பம் பற்றிய நொடிப்பொழுதான உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவை நிரந்தரமற்றவை, இவை குளிர்காலம் மற்றும் கோடை காலங்களைப் போல வந்து செல்கின்றன. பரத வம்சத்தில் தோன்றிய அர்ஜுனா, அமைதி குலையாமல் அவைகளை சகித்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
Commentary
மனித உடலில் பார்வை, வாசனை, சுவை, தொடுதல், மற்றும் செவிப்புலன் ஆகிய ஐந்து புலன்கள் உள்ளன. இந்த உணர்வுகள் எதுவும் நிரந்தரமானவை அல்ல; அவை மாறிவரும் பருவங்களைப் போல வந்து செல்கின்றன. கோடையில் குளிர்ந்த நீர் மகிழ்ச்சியைத் தந்தாலும், அதே நீர் குளிர்காலத்தில் துன்பத்தைத் தருகிறது. எனவே, புலன்கள் மூலம் அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் நிலையற்றவை. அவைகளால் பாதிக்கப்படுவததை நாம் அனுமதித்தால், நாம் ஒரு ஊசல் போல ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கமாக ஆடுவோம். பாகுபாடு உள்ள ஒருவர் மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகிய இரண்டு உணர்வுகளையும் அமைதி குலையாமல் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
புலன் உணர்வுகளின் சகிப்புத்தன்மையின் கொள்கையின் அடிப்படையில் பௌத்தத்தில், சுய-உணர்தலுக்கான முதன்மை நுட்பமான விபாஸனாவின் நுட்பம் அமைந்துள்ளது. அதன் நடைமுறை ஆசையை அகற்ற உதவுகிறது, இதன் நான்கு உன்னத உண்மைகளில் அனைத்து துன்பங்களுக்கும் ஆன காரணம் (துன்பத்தின் உண்மை, துன்பத்தின் தோற்றத்தின் உண்மை, துன்பத்தை நிறுத்தும் உண்மை, மற்றும் நிறுத்துவதற்கு வழிவகுக்கும் பாதையின் உண்மை) கூறப்பட்டுள்ளது. பௌத்த தத்துவம் பரந்த வேத தத்துவத்தின் துணைக்குழு என்று கருதினால் இது ஆச்சரியமல்ல.