ந ஜாயதே1 ம்ரியதே1 வா க1தா3சி1ந்
நாயம் பூ4த்1வா ப4விதா1 வா பூ4ய: |
அஜோ நித்1ய:ஶாஶ்வதோ1யம் பு1ராணோ
ந ஹன்யதே1 ஹன்யமானே ஶரீரே ||20||
ந ஜாயதே—--பிறப்பதுமில்லை; ம்ரியதே—-இறப்பதுமில்லை; வா—அல்லது; கதாசித்—எப்பொழுதும்; ; ந—-- இல்லாத; அயம்--—இது; பூத்வா—-ஒரு காலத்தில் இருந்து; பவிதா—-பிற்காலத்தில் இருந்தோ;; வா—அல்லது; ந— இல்லாமல் இருந்தோ; பூயஹ--—மேலும்; அஜஹ—--பிறப்பற்றது--—பிறக்காத; நித்யஹ—--நித்தியமானது; ஶாஶ்வதஹ--—அழியாத; அயம்—--இது; புராணம்--—தொன்மையான; ந ஹன்யதே--—அழைக்கப்படுவதில்லை; ஹன்யமானே— அழியும்போது; ஶரீரே—--—உடல்
Translation
BG 2.20: ஆன்மா பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; அல்லது இது ஒரு காலத்தில் இருந்திருந்து, எக்காலத்திலும் இல்லாமல் இருந்ததில்லை. ஆன்மா பிறப்பற்றது, நித்தியமானது, அழியாதது, வயது அற்றது. உடல் அழியும்போது அது அழிவதில்லை.
Commentary
இந்த வசனத்தில் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்ட என்றும் நிலைத்திருக்கும் ஆன்மாவின் நித்திய இயல்பு நிலை நாட்டப்பட்டுள்ளது. அதன் விளைவாக அஸ்தி1, (கருவில் இருத்தல்) ஜாயதே1, (பிறப்பு )வர்த4தே1, (வளர்ச்சி) விப1ரீணமதே1 (இனப்பெருக்கம்), அப1க்ஷியதே1, (குறைதல்) வினஶ்யதி1 (இறப்பு) என்ற ஆறு வகை உடலுக்குரிய மாற்றங்களால் அழியாத சுயமானது பாதிக்கப் படுவதில்லை, இந்தக் கருத்து வேதங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. க க1டோ2ப1நிஷத3த்தில் தோராயமாக பகவத் கீதையின் இந்த வசனத்தை ஒத்த ஒரு மந்திரம் உள்ளது:
ந ஜாயதே1 ம்ரியதே1 வா விப1ஶ்சி1ன்
நாயம் கு1த1ஶ்சி1ன்ந ப3பூ4வ க1ஶ்சி1த்1
அஜோ நித்1யஹ ஶாஶ்வதோ1 ‘யம் பு1ராணோ
ந ஹன்யதே1 ஹன்யமானே ஶரீரே (1.2.18)
‘ஆன்மா பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை; அது ஏதோவொன்றிலிருந்து தோன்றவில்லை, அதிலிருந்து எதுவும் தோன்றவில்லை. அது பிறக்காதது, நித்தியமானது, அழியாதது மற்றும் வயதற்றது. உடலை அழிக்கும்போது அது அழிவதில்லை.’ ப் 3ருஹதா3ரண்யக1 உப1நிஷத3ம் கூறுகிறது:
ஸ வா ஏஷ மஹான் அஜ ஆத்1மாஜரோ அமரோ அம்ருதோ1 அப4யஹ (4.4.25)
‘ஆன்மா மகிமை வாய்ந்தது, பிறக்காதது, முதுமை இல்லாதது,அழியாதது, இறப்பற்றது,அச்சமற்றது.’