Bhagavad Gita: Chapter 2, Verse 22

வாஸான்ஸி ஜீர்ணானி யதா2 விஹாய நவானி க்3ருஹ்ணாதி1 நரோ‌ப1ராணி |

1தா2 ஶரீராணி விஹாய ஜீர்ணான் யன்யானி ஸன்யாதி1 நவானி தே3ஹீ ||22||

வாஸான்ஸி—--ஆடைகளை; ஜீர்ணானி—--கந்தல் கீறலாய்ப்போன; யதா—--எவ்வாறு;  விஹாய—-- அகற்றிவிட்டு; நவானி—--புதிய; க்ருஹ்ணாதி—--பெற்றுக்கொள்கிறானோ; நரஹ—--ஒருவன்; அபராணி—---மற்றவைகளை;  ததா—--அவ்வாறே;  ஶரீராணி—--உடல்களை; விஹாய—--களைந்துவிட்டு; ஜீர்ணானி—--தேய்ந்து போன; அன்யானி—--மற்ற; ஸன்யாதி—--நுழைகிறது; நவானி—-- பதியதொன்றில்;தேஹீ​​—--உருவமான ஆன்மா

Translation

BG 2.22: ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ​​ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது.

Commentary

ஆன்மாவின் இயல்பை விளக்கிக்கொண்டே, ஸ்ரீ கிருஷ்ணர் மறுபிறப்பு பற்றிய கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார், அதை அன்றாட நடவடிக்கையுடன் ஒப்பிடுகிறார். ஆடைகள் கிழிந்து பயனற்றதாக மாறும் பொழுது புதியவற்றுக்கு ஆக, அவற்றை நிராகரிக்கிறோம், ஆனால் அவ்வாறு செய்வதால், நாம் நம்மை மாற்றிக் கொள்வதில்லை. அதே போல, ஆன்மா தனது தேய்ந்து போன உடலை உதறிவிட்டு, வேறொரு இடத்தில் புதிய உடலில் பிறக்கும் பொழுது மாறுவதில்லை.

மறுபிறப்பு இருப்பதை நிரூபிக்க நியாய த3ரிஷனம் பின்வரும் வாதத்தை அளிக்கிறது:

ஜாத1ஸ்ய ஹர்ஷப4யஶோக1 ஸம்ப்1ரதி11ப1த்தே1ஹே (3.1.18)

நீங்கள் ஒரு சிறுகுழந்தையைக் கவனித்தால், அது சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில சமயங்களில் சோகமாகவும், சில சமயங்களில் தெளிவான காரணமின்றி பயந்தும் இருப்பதை காணலாம் என்று அது கூறுகிறது. நியாய தரிசனத்தின்படி, சிறு குழந்தை தனது கடந்தகால வாழ்க்கையை நினைவில் கொள்வதால் இந்த உணர்ச்சிகளை அனுபவிக்கிறது. இருப்பினும், அது வளரும்போது, ​​தற்போதைய வாழ்க்கையின் பதிவுகள் அதன் மனதில் மிகவும் வலுவாகப் பதிந்து, அவை கடந்த கால நினைவுகளை அழிக்கின்றன. தவிர, இறப்பு மற்றும் பிறப்பு செயல்முறைகள் ஆன்மாவுக்கும் மிகவும் வேதனையானவை, அவை கடந்தகால வாழ்க்கையின் நினைவுகளின் கணிசமான பகுதியை அழிக்கின்றன.

நியாய த3ரிஷனம் மறுபிறப்புக்கு ஆதரவாக மற்றொரு வாதத்தை அளிக்கிறது: ஸ்த1ன்யாபி4லாஷாத்1 (3.1.21) புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மொழி அறிவு இல்லை என்று கூறுகிறது. அப்படியானால், ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய் பாலை குடிக்க எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும்? புதிதாகப் பிறந்த குழந்தை, தனது எண்ணற்ற கடந்த கால வாழ்நாளில் எண்ணற்ற தாய்மார்களிடமிருந்து, விலங்கு வடிவங்களில் கூட தாய்ப்பால் குடித்துள்ளது. இதனால், தாய் தனது மார்பகத்தை குழந்தையின் வாயில் நுழைக்கும்போது அது தானாகவே கடந்த கால நடைமுறையின் அடிப்படையில் பால் குடிக்க ஆரம்பிக்கிறது.

மறுபிறப்பு என்ற கருத்தை ஏற்காமல், மனிதர்களிடையே உள்ள வேறுபாடு விவரிக்க முடியாததாகவும் பகுத்தறிவற்றதாகவும் மாறும். உதாரணமாக, ஒரு மனிதர் பிறப்பிலிருந்தே பார்வையற்றவர் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஏன் இவ்வாறு தண்டிக்கப்பட்டார் என்று அந்த நபர் கேட்டால் அவருக்கு தர்க்கரீதியான என்ன பதில் சொல்ல முடியும்? அவருடைய கர்மங்களின் பலன் என்று சொன்னால், அவர் நிகழ்கால வாழ்வுதான் தனக்கு இருக்கிறது என்றும், அதனால், பிறக்கும் போது அவனைத் துன்புறுத்தும் பூர்வ கர்மங்கள் எதுவும் இல்லை என்றும் வாதிடலாம். இது கடவுளின் விருப்பம் என்று நாம் கூறினால், அது நம்பமுடியாததாகத் தோன்றும். ஏனென்றால், கடவுள் இரக்கமுள்ளவர் மற்றும் தேவையில்லாமல் யாரும் குருடராக இருக்க விரும்பமாட்டார். ஒரே தர்க்கரீதியான விளக்கம் என்னவென்றால், அந்த நபர் கடந்தகால வாழ்க்கையின் கர்மங்களின் விளைவாக பார்வையற்றவராக பிறந்தார் என்பதே.

Watch Swamiji Explain This Verse