Bhagavad Gita: Chapter 2, Verse 24

அச்1சே2த்3யோ‌யமதா3ஹ்யோ‌யமக்1லேத்3யோ‌ஶோஷ்ய ஏவ நித்1ய: ஸர்வக3த: ஸ்தா2ணுரச1லோ‌யம் ஸனாத1ன: ||24||

அச்சேத்யஹ—--உடைக்க முடியாதது; அயம்—--இந்த ஆன்மா; அதாஹ்யஹ—--எரிக்க முடியாதது; அயம்—--இந்த ஆன்மா; அக்லேத்யஹ—--ஈரப்படுத்த முடியாதது; அஶோஷ்யஹ—--உலர்த்த முடியாதது; ஏவ---- உண்மையில்; ச—--மற்றும்; நித்யஹ—--என்றென்றும்; ஸர்வகதஹ—--எங்கும் நிறைந்த; ஸ்தாணுஹு—--மாறாதது; அசலஹ—-- மாற்றமுடியாதது; அயம்—--இந்த ஆன்மா;  ஸனாதனஹ—--ஆதியானது

Translation

BG 2.24: ஆன்மா உடைக்க முடியாதது மற்றும் எரிக்க முடியாதது; அதை ஈரப்படுத்தவோ உலர்த்தவோ முடியாது. அது எப்போதும், எல்லா இடங்களிலும், மாறாதது, மாற்றமுடியாதது, ஆதியானது.

Commentary

ஆத்மாவின் அழியாமையின் இயல்பைப் பற்றி இங்கு மீண்டும் வலியுறுத்தப் படுகிறது . .ஆசிரியர் முழுமையான அறிவை வழங்கினால் மட்டும் போதாது; அந்த அறிவு பயனுள்ளதாக இருக்க, அது மாணவரின் இதயத்தில் ஆழமாக பதிய வேண்டும். எனவே, ஒரு திறமையான ஆசிரியர் முன்பு கூறிய கருத்தை அடிக்கடி கூறுகிறார். சமஸ்கிருத இலக்கியத்தில், இது பு1னருக்1தி1 அல்லது 'சொன்னதேசொன்னதையே சொல்லுதல்' என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் முக்கியமான ஆன்மீகக் கொள்கைகளை வலியுறுத்துவதற்காக புனருக்தியை ஒரு கருவியாக அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

Watch Swamiji Explain This Verse