Bhagavad Gita: Chapter 2, Verse 36

அவாச்1யவாதா3ன்ஶ்ச11ஹூன்வதி3ஷ்யன்தி11வாஹிதா1: |

நிந்த3ன்த1ஸ்த1வ ஸாமர்த்2யம் த1தோ1 து3: க31ரம் நு கி1ம் ||36||

அவாச்யவாதான்—--இழிவான வார்த்தைகளைப்பயன்படுத்தி;;ச—--மற்றும்; பஹூன்—--பல; வதிஷ்யன்தி—--சொல்வார்கள்; தவ—--உன்; அஹிதாஹா--—எதிரிகள்; நிந்தன்தஹ—--அவதூறு அடையும்; தவ—--உன்; ஸாமர்த்யம்—--வலிமைத்திறன்; ததஹ--—அதைவிட; துஹ்கதரம்—--அதிக வேதனை; நு—--உண்மையில் கிம்—--வேறென்ன

Translation

BG 2.36: உன் எதிரிகள் உன் வல்லமையை பழித்துரைத்து, மதிப்பிழக்கும் இரக்கமற்ற, அன்பில்லாத, வார்த்தைகளால் உன்னை அவமானப்படுத்துவார்கள். ஐயோ, இதைவிட வேதனை என்ன இருக்க முடியும்?

Commentary

அர்ஜுனன் போரில் இருந்து தப்பி ஓட விரும்பினால், வலிமைமிக்க வீரர்களின் கூட்டத்தில் அர்ஜுனனின் மதிப்பீடு குறைவது மட்டுமல்லாமல், அவர் அவமதிக்கப்படுவார். ஸ்ரீ கிருஷ்ணர் நிந்ததஹ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், அதாவது 'அவதூறு செய்வது'; அவாச்1ய வாதா3ன்'என்பது ஆண்மை இழந்தவர் போன்ற ‘இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்’. அர்ஜுனனின் எதிரிகள், துரியோதனன் போன்றவர்கள், அவரைப் பற்றி பல பொருத்தமற்ற விஷயங்களை சொல்வார்கள், 'அந்த வலிமையற்ற அர்ஜுனன் போர்க்களத்திலிருந்து ஒரு நாய் தனது கால்களுக்கு இடையில் வாலைப் சுருட்டிக்கொண்டு கொண்டு ஓடுவதைப் பாருங்கள்.’ இவ்வாறு எதிரிகளால் ஏளனபடுத்தப்படுவது அர்ஜுனனுக்கு மிகவும் வேதனையாக இருக்கும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் நினைவுபடுத்துகிறார்.

Watch Swamiji Explain This Verse