Bhagavad Gita: Chapter 2, Verse 37

ஹதோ1 வா ப்1ராப்1ஸ்யஸி ஸ்வர்க3ம் ஜித்1வா வா போ4க்ஷ்யஸே மஹீம் |

1ஸ்மாது3த்1தி1ஷ்ட2 கௌ1ன்தே1ய யுத்3தா4ய க்1ருத1னிஶ்ச1ய: ||37||

ஹதஹ—--கொல்லப்பட்ட;  வா—--அல்லது; ப்ராப்ஸ்யஸி—-நீ அடைவாய்;  ஸ்வர்கம்—--தேவலோக வாசஸ்தலங்களை; ஜித்வா—--வெற்றியை அடைவதன் மூலம்; வா—--அல்லது; போக்ஷ்யஸே—--நீ அனுபவிப்பாய்; மஹீம்—--பூமியில் உள்ள ராஜ்யத்தை;தஸ்மாத்—--எனவே; உத்திஷ்ட--—எழுக; கௌன்தேய—-- குந்தியின் மகன் அர்ஜுனா; யுத்தாய—---போருக்கு; க்ருதனிஶ்சயஹ--—மன உறுதியுடன்

Translation

BG 2.37: நீ போரில் போர்க்களத்தில் கொல்லப்பட்டால் தேவலோக வாசஸ்தலங்களுக்கு செல்வாய் அல்லது நீ வெற்றி பெற்று தரணியில் ராஜ்யத்தை அனுபவிப்பாய். எனவே, குந்தியின் மகனே உறுதியுடன் எழுந்து போருக்கு தயாராக இரு.

Commentary

2.31 வசனத்திலிருந்து தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் தொழில்சார் கடமைகளின் அளவில் அறிவுறுத்தல்களை வழங்குகிறார். அர்ஜுனனிடம் தன் கடமையைச் செய்வதால் ஏற்படும் இரண்டு சாத்தியக்கூறுகளைப் பற்றி அவர் விளக்குகிறார். அர்ஜுனன் வெற்றி பெற்றால், பூமியில் ஒரு ராஜ்ஜியம் அவருக்கு காத்திருக்கிறது, மேலும்அவர் தனது கடமையை நிறைவேற்றுவதில் தனது உயிரைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவர் தேவலோக வாசஸ்தலங்களுக்குச் செல்வார் என்று கூறுகிறார்.

Watch Swamiji Explain This Verse