Bhagavad Gita: Chapter 2, Verse 60

யத1தோ1 ஹ்யபி1 கௌ1ன்தே1ய பு1ருஷஸ்ய விப1ஶ்சி11: |

இந்த்3ரியாணி ப்1ரமாதீ2னி ஹரன்தி1 ப்1ரஸப4ம் மன: ||60||

யததஹ--—-தன்னடக்கத்தைக்கடைப்பிடிப்பவர்; ஹி---அதற்காக; அபி—-ஆயினும்; கௌன்தேய-- -குந்தியின் மகன்; புருஷஸ்ய—-- ஒரு நபரின்; விபஶ்சிதஹ— ---பாகுபாடுள்ளவர் ஆயினும்; இன்த்ரியாணி—-- -புலன்கள்; ப்ரமாதீனி— --கொந்தளிக்கும் தன்மை உடையவை; ஹரன்தி—---இழுத்துச் செல்ல கூடியவை; ப்ரஸபம்— --வலுக்கட்டாயமாக; மனஹ--—மனதை

Translation

BG 2.60: குந்தியின் மகனே, புலன்கள் மிகவும் வலுவாகவும், கொந்தளிப்பாகவும் உள்ளன, அவை பாகுபாடு மற்றும் தன்னடக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு நபரின் மனதைக் கூட வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்ல முடியும்.

Commentary

புலன்கள் புதியதாகக் சேணம் பூட்டப்பட்ட காட்டுக் குதிரைகளைப் போன்றது. அவைகள் உத்வேகமானவை மற்றும் பொறுப்பற்றவை; அவைகளை ஒழுங்குபடுத்துவது ஆன்மீக பயிற்சியாளர்கள் தங்களுக்குள்ளேயே போராட வேண்டிய ஒரு முக்கியமான போராகும். எனவே, ஆன்மிக வளர்ச்சியை விரும்புவோர், காமம் மற்றும் பேராசையால் நிரம்பிய இன்ப உணர்வுகளை அடக்குவதற்கு கவனமாகப் பாடுபட வேண்டும், இல்லையெனில் அவை மிகவும் நல்ல எண்ணம் கொண்ட யோகிகளின் ஆன்மீக செயல்முறையை நாசமாக்கி, தடம் புரளச் செய்யும் சக்தியைக் கொண்டுள்ளன.

ஸ்ரீமத் பாகவதம் இந்த கட்டுரைத்தலை மிகச்சரியாக விளக்கும் ஒரு கதையை விவரிக்கிறது (காண்டம் 9, அத்தியாயம் 6):

பண்டைய காலத்தில் சௌபரி என்ற ஒரு சிறந்த முனிவர்  இருந்தார் அவரை பற்றி ரிக் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது , ரிக்3 வேத3த்தில் ஸௌபரி4 ஸுத்1ரா என்ற மந்திரம் உள்ளது. ஸௌப4ரி ஸம்ஹிதை1 என்ற வேதமும் உள்ளது. எனவே, அவர் சாதாரண ஞானி இல்லை. ஸௌபரி தனது உடலின் கட்டுப்பாட்டை அடைந்துவிட்டதால், அவர் யமுனை நதியில் மூழ்கி தண்ணீருக்கு அடியில் தியானம் செய்தார். ஒரு நாள், தண்ணீருக்கு அடியில் மீன்களின் இன சேர்க்கையைப் பார்த்தார். இந்தக் காட்சியால் அவரது உணர்ச்சிகள் தூண்டப்பட்டு பாலுறவு ஆசை அவருக்குள் எழுந்தது. அவர் ஆன்மீகப் பயிற்சியை கைவிட்டார். தன் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக்கொண்டு தண்ணீரிலிருந்து வெளியே வந்தார்.

அயோத்தியாவில் அந்த நேரத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் உன்னத ஆட்சியாளரான அரசன் மந்ததா அரசனாக இருந்தார். அவருக்கு மிகவும் அழகிய ஐம்பது மகள்கள் இருந்தனர். ஸௌபரி முனிவர் அரசனை வணங்கி ஐம்பது இளவரசிகளில் ஒருவருடன் திருமணம் புரிய அனுமதி கோரினார்.

மன்னன் மந்ததா முனிவரின் நல்லறிவைக் குறித்து வியந்து, தனக்குள் நினைத்துக் கொண்டார், ‘ஒரு முதியவர் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்!’ மன்னன் ஸௌபரி ஒரு சக்திவாய்ந்த முனிவர் என்பதை அறிந்தார், மேலும் அவர் மறுத்தால் முனிவர் சபிப்பார் என்று அஞ்சினார். ஆனால் அவர் சம்மதித்தால் அவரது மகள்களில் ஒருவரின் வாழ்க்கையே பாழாகிவிடும். இக்கட்டான நிலையில் இருந்த மன்னன், ‘முனிவரே! உங்கள் கோரிக்கையில் எனக்கு ஆட்சேபனை இல்லை. தயவு செய்து உட்காருங்கள். நான் என் ஐம்பது பெண் குழந்தைகளை உங்கள் முன் கொண்டு வருகிறேன், உங்களை தேர்ந்தெடுத்த இளவரசியுடன் உங்களது திருமணம் நிறைவேறும்’ என்று கூறினார்.

மன்னனின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட ஸௌபரி முனிவர், அரசனிடம் மறுநாள் தான் திரும்பி வருவதாகக் கூறினார். அன்று மாலை, அவர் தனது யோக சக்தியைப் பயன்படுத்தி தன்னை ஒரு அழகான இளைஞனாக மாற்றினார். இதன் விளைவாக, அவர் அடுத்த நாள் அரண்மனைக்கு வந்தபோது, ​​​​ஐம்பது இளவரசிகளும் அவரைத் தங்கள் கணவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு, தன் மகள்கள் அனைவரையும் முனிவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இப்போது ஐம்பது சகோதரிகள் கணவனைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருப்பதால் அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளைப் பற்றி மன்னர் கவலைப்பட்டார். இருப்பினும், ஸௌபரி முனிவர் மீண்டும் தனது யோக சக்தியைப் பயன்படுத்தினார். மன்னனின் அச்சத்தைத் தணித்து, ஐம்பது வடிவங்களை ஏற்று, தன் மனைவிகளுக்காக ஐம்பது அரண்மனைகளை உருவாக்கி, ஒவ்வொருவருடனும் தனித்தனியாக வாழ்ந்தார். இப்படியே பல்லாயிரம் வருடங்கள் ஓடின. ஸௌபரி முனிவருக்கு அவர்கள் ஒவ்வொரு இடமிருந்தும் பல குழந்தைகள் இருந்ததாகவும், அந்த குழந்தைகள் குழந்தைகளைப் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

ஒரு நாள், சௌபரி சுயநினைவுக்கு வந்து, 'அஹோ இமம் ப1ஷ்யத1 மே வினாஶம்' (பாகவதம் 9.6.50) 'ஓ மனிதர்களே! பொருள் ஈட்டுதல் மூலம் மகிழ்ச்சியை அடைய திட்டமிடுபவர்கள் கவனமாக இருங்கள். எனது சீரழிவைப் பாருங்கள்- நான் எங்கே இருந்தேன், இப்போது நான் எங்கே இருக்கிறேன். நான் எனது யோக சக்தியால் ஐம்பது உடல்களை உருவாக்கி ஐம்பது பெண்களுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தேன். இன்னும், புலன்கள் நிறைவை அனுபவிக்கவில்லை;அவைகள் இன்னும் ஏங்கின என் வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள. இந்த திசையில் செல்ல வேண்டாம்.’ என்று எச்சரித்தார்.

Watch Swamiji Explain This Verse