Bhagavad Gita: Chapter 3, Verse 10

ஸஹயஞ்ஞா: ப்1ரஜா: ஸ்ருஷ்ட்1வா பு1ரோவாச1 ப்1ரஜாப1தி1: |
அனேன ப்1ரஸவிஷ்யத்4வமேஷ வோ‌ஸ்த்1விஷ்ட1கா1மது4க்1 ||10||

ஸஹ—--உடன்; யஞ்ஞாஹா----தியாகங்கள்; ப்ரஜாஹா—--மனிதகுலம்; ஸ்ருஷ்ட்வா—--உருவாக்கப்பட்ட; புரா—--ஆரம்பத்தில்; உவாச—--சொன்னது; பிரஜா-பதிஹி----பிரம்மா; அனேன—--இதன் மூலம்; ப்ரஸவிஷ்யத்வம்—--செழிப்பை அதிகரிக்கும்; ஏஷஹ—--இவை; வஹ—--உங்கள்; அஸ்து—--இருக்கும்; இஷ்-காம-துக்—--எல்லா விருப்பங்களையும் வழங்குபவர்

Translation

BG 3.10: படைப்பின் தொடக்கத்தில், பிரம்மா மனிதகுலத்தை கடமைகளுடன் உருவாக்கினார், மேலும், அவர் கூறினார்,'இந்த யாகங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுங்கள், ஏனென்றால் நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அவை உங்களுக்கு வழங்கும்.'

Commentary

இயற்கையின் அனைத்து கூறுகளும் கடவுளின் முழுமொத்தமான கூறுபடாத  படைப்பு அமைப்பின்  ஒருங்கிணைந்த பகுதிகள். அனைத்து பகுதிகளும் இயற்கையாகவே இந்த முழுமையிலிருந்து பெற்று திரும்பக் கொடுக்கின்றன. சூரியன் பூமிக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கிறது மற்றும் உயிர்கள் இருப்பதற்கு தேவையான வெப்பத்தையும் ஒளியையும் வழங்குகிறது. பூமி அதன் மண்ணிலிருந்து நமது ஊட்டச்சத்திற்காக உணவை உருவாக்குகிறது மற்றும் நாகரீக வாழ்க்கைக்கு தேவையான கனிமங்களை அதன் கருப்பையில் வைத்திருக்கிறது. காற்று நம் உடலில் உள்ள உயிர் சக்தியை நகர்த்துகிறது மற்றும் ஒலி ஆற்றலை கடத்துகிறது. மனிதர்களாகிய நாமும் கடவுளின் படைப்பின் முழு அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்று, நாம் நடக்கும் பூமி, நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் நம் நாளை ஒளிரச் செய்யும் ஒளி அனைத்தும் படைப்பின் கொடைகள். நமது வாழ்க்கையை நிலைநிறுத்த இந்த பரிசுகளில் நாம் பங்குகொள்ளும் அதே வேளையில், ஒருங்கிணைந்த அமைப்புக்கான நமது கடமைகளும் நமக்கு உள்ளன. இறைவனின் சேவையில் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம் இயற்கையின் படைப்பு சக்தியுடன் பங்கேற்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். அதுதான் அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் யாகம்.

ஒரு கையின் உதாரணத்தைக் கவனியுங்கள். இது உடலின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது அதன் ஊட்டச்சத்தை - இரத்தம், பிராணவாயு மற்றும் ஊட்டச்சத்துக்களை உடலில் இருந்து பெறுகிறது, மேலும் அது உடலுக்குத் தேவையான செயல்பாடுகளை செய்கிறது. கை இந்தச் சேவையை பாரமாகப் பார்த்து, உடலை விட்டு துண்டிக்க முடிவெடுத்தால், அது சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. உடலை நோக்கி அதன் யாகம் செய்வதில் தான் கையின் சுயநலமும் நிறைவேறுகிறது. அதேபோல், தனிப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் ஒப்புயர்வற்ற கடவுளின் சிறிய பகுதிகளாக இருக்கிறோம், மேலும் பெரிய விஷயங்களில் நாம் அனைவரும் பங்கு வகிக்கிறோம். அவரை நோக்கி நாம் யாகம் (யஞ்ஞா) செய்யும்போது, ​​நமது சுயநலம் இயல்பாகவே திருப்தி அடைகிறது. பொதுவாக, யஞ்ஞம் என்பது தீ--பலியைக் குறிக்கிறது. பகவத் கீதையில், யாகம் என்பது வேதங்களில் கூறப்பட்டுள்ள அனைத்து செயல்களையும் உள்ளடக்கியது.

Watch Swamiji Explain This Verse